Saturday, February 1, 2020

பஞ்சலோகத்தை_அணிவதற்கான_பலன்கள்_பயன்கள்


#தெய்வீக #காரணங்கள்..!🔱

ஐம்பொன், பஞ்சலோகம், பஞ்சதாது என்ற பெயர்கள் குறிப்பிடும் பொருட்களின் உள்ளர்த்தம் நமக்கு எளிதாக புரியக்கூடியதுதான்.பஞ்சலோகத்தை அணிவதற்கான தெய்வீக காரணங்கள்..!

பஞ்ச பூதங்கள் மற்றும் ஐம்புலன்களின் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய உலோகங்களின் சேர்க்கையாக அது இருக்கிறது.

நமது உடல் மற்றும் ஆன்மிக ரீதியான நல்ல மாற்றங்களுக்கும், அந்த உலோகங்களின் கூட்டுச்சேர்க்கை நம்மால் பல விதங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பஞ்சதாது என்று சொல்லப்படும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட கவசத்தை ஸ்ரீகிருஷ்ணர், அர்ச்சுனனுக்கு தந்ததாக மகாபாரத செய்தி உண்டு.

சாதாரண கவசத்தை விடவும் பஞ்சலோக கவசமானது, உடல், உள்ளம் மற்றும் உயிர் ஆகிய, மூன்று விதங்களிலும் பாதுகாப்பை தரக்கூடிய வகையில் கிருஷ்ணரால் அர்ச்சுனனுக்கு தரப்பட்டது.

#உடல்_நலத்தில்_உலோகங்கள் :

மனித உடலின் நரம்பு இயக்கங்களில் ஏற்படும் மின் தூண்டுதல் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, விரல்களில் அணியும் மோதிரம் அல்லது மணிக்கட்டில் அணியும் காப்பு ஆகிய வடிவங்களில் ஐம்பொன் ஆபரணங்கள் செய்து அணியப்பட்டன.

அதன் மூலம், உடலில் உள்ள குறிப்பிட்ட நரம்பு முடிச்சுகளை தொட்டவாறு இருக்கும் உலோக வடிவங்கள் வாயிலாக ‘எலக்ட்ரிக் ஸ்டிமுலேஷன்’ என்ற மின் தூண்டுதல்கள் ஏற்படுகின்றன. அதன் வாயிலாக பிரபஞ்ச ஆற்றலை ஆகர்ஷணம் செய்து ஆத்ம சக்தி, மனோ சக்தி, ஞான சக்தி ஆகியவற்றை பெறக்கூடிய அனுபவம் ஏற்பட்டது.

மோதிர விரலில் உள்ள முக்கியமான நரம்பு மண்டல புள்ளி, நமது நுண்ணிய உணர்வுகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது.

மேலும் நம் முடைய மணிக்கட்டு பகுதியில் 5 முக்கியமான நரம்பு புள்ளிகள் உள்ளது.

இது சக்தி ஓட்டத்தை விரல் நுனியில் இருந்து, உடலின் முக்கியமான உறுப்புகளுக்கு கடத்திச் செல்கிறது.

ஐம்பொன்னால் ஆன மோதிரங்கள் அல்லது காப்புகள் அணிவதால் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை எடுத்து, ஒரு வேதியியல் மாற்றத்தை உண்டு பண்ணி இந்த முக்கிய நரம்பு புள்ளிகள் வழியாக அனுப்பி, நம்முடைய உடலின் உறுப்புகளை நல்ல விதமாக இயங்கச் செய்யும்.

குறிப்பாக, ஒருவருக்கு உகந்த நவரத்தின வகைகள் அல்லது உப ரத்தின வகைகள் ஆகியவற்றை, பஞ்சலோகத்தில் பதித்து அணிவது அதிர்ஷ்டத்தை அளிக்கக்கூடிய சிறந்த முறையாகச் சொல்லப்படுகிறது.

உடல் முழுவதும் இயங்கிவரும் பிராண சக்தியை பலப்படுத்தி, உடலில் இருக்கும் உலோக சக்தியை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்ட, ஐம்பொன் சிலைகளுக்கு அபிஷேகம் செய்து, அதன் பிரசாதத்தை உண்டால், உடலின் பிராண சக்தி முழுமைப் படுத்தப்படும் என்று பெரியோர்கள் கருதினர்.

பொதுவாக நமது உடல் பிண்டம் என்று சொல்லப்படும். பூமி உள்பட பிரபஞ்சம் அனைத்தும் அண்டம் எனப்படும்.

‘அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும்’ என்பது சித்தர் வாக்கு. இதனை அன்றே உணர்ந்த அறிவின் வழி சார்ந்த நமது முன்னோர்கள், தங்கள் உடலில் எப்போதும் அந்த உலோகங்கள் பஞ்ச லோகங்கள் வடிவத்தில் இருக்கும் வண்ணம் ஐம்பொன் ஆபரணங்களை அணிந்து பயன்பெற்றனர்.

#கிரக_சக்திகள் :

பஞ்சலோகத்தின் மூலம் ஐந்து கிரகங்களின் சக்தி வெளிப்படுவதாக நமது முன்னோர்கள் கண்டுள்ளனர்.

அவர்களது கருத்தின்படி, பஞ்சலோகத்தில் உள்ள...
1)தங்கம் .....#குருவின்_சக்தியையும்,
2)வெள்ளி ..#சுக்ரனின்_சக்தியையும்,
3)செம்பு ......#சூரியனின்_சக்தியையும்,
4)இரும்பு ....#சனியின்_சக்தியையும்,
5)ஈயம் ........#கேதுவின்_சக்தியையும் வெளிப்படுத்துகிறது.

1 )#வியாழன் எனப்படும் குரு கிரகத்தின் ஆற்றலை பெற தங்கத்தையும்,

2)#சனி கிரகத்தின் ஆற்றலைபெற இரும்பையும்,

3)#சுக்ரன் என்ற வெள்ளி கிரகத்தின் ஆற்றலை பெற வெள்ளியையும்,

4)#சூரியனின் ஆற்றலை பெற செம்பையும்,

5)#கேது கிரகத்தின் ஆற்றலை பெற ஈயத்தையும் பயன்படுத்துவது நமது முன்னோர்களது அறிவியல் சார்ந்த பார்வையாக இருந்து வந்தது.

நவக்கிரகங்களின் அலை இயக்கமானது மனிதர்களது சுபாவத்தையும், அவர்களது செயல்களையும் தீர்மானிக்கிறது என்பதை,
ஜோதிடம் என்ற விஞ்ஞானத்தின் வாயிலாக அறிகிறோம்.

பஞ்சலோகம் அல்லது அஷ்டலோகம் கொண்டு செய்யப்பட்ட மோதிரம் அல்லது காப்பு வடிவத்தில் அணிந்தால் சம்பந்தப்பட்ட கிரக ஆற்றலை அது ஈர்ப்பதாக அமைகிறது.

‌பஞ்சலோகத்தை அணிந்து நாமும் பலன் பெறலாமே..!.....#ஜெய்_ஸ்ரீராம்

#குறிப்பு:பஞ்சலோக காப்பு...பூம்புகார், மற்றும் காதிகிராப்ட்டில் கிடைக்கலாம்.

No comments: