Monday, February 3, 2020

கடன் தொல்லை தீர்க்கும் பதிகம்*



திருச்சிற்றம்பலம்**

உளுந்தூர்பேட்டை- திருவெண்ணெய் நல்லூர் சாலையில் உள்ளது.திருநெல்வெண்ணெய் என்ற சிவத்தலம்.
இத்தலம் திருஞானசம்பந்த சுவாமிகளால் பாடல் பெற்றுள்ளது.
இத்தலத்து இறைவர் கிணற்றிலிருந்து பொற்குடம் கிடைக்கச்செய்தவர்.ஆதலால் பொற்குடம் கொடுத்த நாதர் என்றே அழைக்கப்படுகிறார்.
இத்தலத்து பதிகத்தை பாராயணம் செய்த பலர் கடன் தொல்லையிலிருந்து பொற்குடம் கிடைக்க செய்த இறைவர் கடன் தீர்வதற்கும் ஏதாவது ஒரு வழியை காட்டியருளுவார் என்று நம்பிப்பாராயணம் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
பாடல்;-
*நல்வெணெய் விழுது பெய்து ஆடுதிர் நாள்தோறும்*,,
*நெல்வெணெய் மேவிய நீரே*,,
*நெல்வெணெய் மேவிய நீர் உமை நாள்தோறும்*,,
*சொல்வணம் இடுவது சொல்லே.(1).*
*நிச்சலும் அடியவர் தொழு தெழு நெல்வெணெய்க்*,
*கச்சிள அரவசைத்தீரே*,,
*கச்சிள அரவசைத்தீர் உமைக்காண்பவர்*,,
*அச்சமொடு அருவினை இலரே.(2).*
*நிரைவிரி தொல்புகழ் நெல்வெணெய் மேவிய*,,
*அரைவிரிகோவணத்தீரே*,,
*அரைவிரி கோவணத்தீர் உமை அலர்கொடு*,,
*உரைவிரிப்போர் உயர்ந்தோரே*(3)..
*நீர்மல்கு தொல்புகழ் நெல்வெணெய் மேவிய*,,
*ஊர்மல்கி உறையவல்லீரே*,,
*ஊர்மல்கி உறையவல்லீர் உமை உள்குதல்*,,
*பார்மல்கு புகழவர் பண்பே*(4)..
*நீடிளம் பொழில் அணி நெல்வெணெய் மேவிய*,,
*ஆடிளம் பாப்பசைத்தீரே*,,
*ஆடிளம் பாப்பசைத்தீர் உமை அன்பொடு*,,
*பாடுளம் உடையவர் பண்பே.(5)*..
*நெற்றியோர் கண்ணுடை நெல்வெணெய் மேவிய*,,
*பெற்றிகொள் பிறைநுதலீரே*,,
*பெற்றிகொள் பிறை நுதலீர் மைப்பேணுதல்*,,
*கற்றறிவோர்கள் தம் கடனே.(6).**
*நிறையவர் தொழுதெழு நெல்வெணெய் மேவிய*,,
*கறையணி மிடறுடையீரே*,,
*கறையணி மிடருடையீர் உமைக்காண்பவர்*,,
*உறைவதும் உம் அடிக்கீழே.(7)*..
*நெருக்கிய பொழிலணி நெல்வெணெய் மேவியன்று*,,
*அரக்கனை அசைவு செய்தீரே*,,
*அரக்கனை அசைவு செய்தீர் உமை அன்பு செய்து*,,
*இருக்கவல்லார் இடர் இலரே*(8)..
*நிரைவிரி சடைமுடி நெல்வெணெய் மேவியன்று*,,
*இருவரை இடர்கள் செய்தீரே*,,
*இருவரை இடர்கள் செய்தீர் உமை இசைவொடு*,,
*பரவ வல்லார் பழி இலரே*(9)..
*நீக்கிய புனலணி நெல்வெணெய் மேவிய*,,
*சாக்கியச்சமண் கெடுத்தீரே*,,
*சாக்கியச்சமண் கெடுத்தீர் உமைச்சார்வது*,
*பாக்கியம் உடையவர் பண்பே*(10)..
*நீர்மல்கு தொல்புகழ் நெல்வெணெய் ஈசனை*,,
*நலமல்கு ஞானசம்பந்தன்*,,
*நலமல்கு ஞானசம்பந்தன் செந்தமிழ்**
*சொலமல்குவார் துயர் இலரே(11)*..
திருச்சிற்றம்பலம்,
முற்றும்...

No comments: