Thursday, February 20, 2020

ஏழரை சனியிலிருந்து தப்பிக்க :


ஏழரை சனி நடப்பவர்கள் கீழ்க்கண்ட முறைகளை பக்தியோடும் நம்பிக்கையோடும் பின்பற்றி வந்தால் பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம்

1.சனிக்கிழமை தோறும் சனீஸ்வரனுக்கு எள் எண்னை விளக்குகள் இரண்டு ஏற்றி அஷ்டோத்திர அர்ச்சனை செய்து வர வேண்டும். நீலோத்தம்பூவால் மாலை தொடுத்து சனீஸ்வரருக்கு சூட்டலாம். இது தொடர்ந்து ஏழரை ஆண்டுகளும் செய்ய வேண்டும்.

2.சனி மிக கடுமையாக இருக்கிறார் மேலும் சனி திசையும் நடக்கிறது என்றால் ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை தோறும் துளசி மாலை சாற்றி நெய் விளக்கேற்றி 27 முறை சுவாமியை வலம் வர வேண்டும்.

3.சனிக்கிழமை தோறும் சமுத்திர ஸ்நானம் செய்து சனீஸ்வரருக்கு பதினெட்டு எலுமிச்சம்பழ மூடியில் நல்லெண்ணய் விளக்கேற்றி நவகிரஹங்களை 27 அல்லது 54 முறை வலம் வர வேண்டும்.

No comments: