Wednesday, August 29, 2018

மூட்டுவலி முதுகுவலி இவை இரண்டிற்குமே சித்தர்கள் சொன்ன மருந்து பூண்டுப்பால்

இன்றைய உலகில் 20 வயது இளைஞர்களிடம் கூட காணப்படுகிறது இந்த முதுகு வழி கைகால் வலி. அந்த அளவிற்கு நாம் உண்ணும் சத்தற்ற உணவுகளால் நமது உடலில் உள்ள வலிமை குறைந்து மறைந்து விட்டது. அக்காலத்தில் இருந்த மாதிரி வெளி விளையாட்டுகள் இப்பொழுது இல்லை. பொழுதுக்கும் உட்கார்ந்தே இருப்பது, பைக்கில் அதிகநேரம் பயணிப்பது போன்ற காரணங்களால் இப்பொழுது இந்த முதுகு வலியும் மூட்டு வலியும் பரவலாக அனைவருக்கும் காணப்படுகிறது. இந்த மூட்டுவலியும் முதுகு வலியும் வருவதற்கான அறிகுறி வரும்போதே அதை கட்டுப்படுத்துவதற்காக அன்றே நமக்கு சித்தர்கள் அருளிய அருமருந்து பூண்டுப் பால். பூண்டு நம் உடலில் உள்ள 75 சதவிகித பிரச்சினைகளுக்கு ஒரு அருமருந்தாகும். பூண்டுப்பால் செய்வது எப்படி ஒரு டம்ளர் பாலிற்கு பூண்டின் அளவை பொருத்து 3 அல்லது 4 பல்லுகள் தட்டி போட்டு பாலை நன்கு கொதிக்க விட வேண்டும். பூண்டு நன்கு வெந்ததும் பாலை இறக்கி பூண்டை நாகு மசித்து விட வேண்டும். சுவைக்காக தேவைப்பட்டால் தரமான தேன் அல்லது பனங்கற்கண்டை சேர்த்துக்கொள்ளலாம். இந்த பூண்டு பாலை, காலை மாலை என இருவேளையும் பருகலாம். சிறியவர் முதல் பெரியவர் வரை யார் வேண்டுமானாலும் பருகலாம். பயன்கள் பூண்டுப்பாலை இருவேளையும் 15 நாட்கள் தொடர்ந்து குடித்துவர உங்கள் முதுகு மற்றும் மூட்டு வலி குறைவதை நன்கு உணர முடியும் அலர்ஜிநோயால் அதிகம் தாக்கப்படுபவர்களுக்கு இந்த பூண்டுப்பால் ஒரு அருமருந்தாகும் செரிமான பிரச்சினை உள்ளவர்களுக்கு நல்ல மாறுதல் தெரியும் இந்த பூண்டுப்பால் நுரியீரல் அலர்ஜியை போக்குகிறது தாய்ப்பால் இல்லாத தாய்மார்கள் இந்த பூண்டுப்பாலை குடித்து வந்தால் குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் சுரக்கப் பெறுவார்கள்

No comments: