கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Tuesday, August 21, 2018
மூளையை_கடுமையாக பாதிக்கும்_பத்து பழக்கவழக்கங்கள் !
#காலையில்_உணவு #உண்ணாமல்_இருப்பது:
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர் களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல், மூளை அழிவுக்குக் காரணமாகும்.
#மிக_அதிகமாகச் #சாப்பிடுவது:
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
#நிறைய_சர்க்கரை #சாப்பிடுதல்:
இது புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
#தூக்கமின்மை
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். நீண்டகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
#மாசு_நிறைந்த_காற்று
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
#புகைபிடித்தல்
மூளை சுருங்கவும், அல்ப்ஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
#மூளைக்குவேலை #கொடுக்காமல்_இருப்பது
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
#தலையை_மூடிக்கொண்டு #தூங்குவது
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள், சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
#நோயுற்ற_காலத்தில் #_மூளைக்குவேலை #கொடுப்பது
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆன பின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
#பேசாமல்இருப்பது
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...
No comments:
Post a Comment