Saturday, September 13, 2025

இதய ரத்த நாளங்களில் எப்படி அடைப்பு ஏற்படுகிறது?

இதய ரத்த நாளங்களில் எப்படி அடைப்பு ஏற்படுகிறது? என்று கேட்டால் அனைவரும் கூறும் பதில் "கொழுப்பு படிந்து இதயத்தின் நாளங்கள் அடைத்துக் கொள்கின்றன" என்பதாய் இருக்கும்.


ஆனால் இதயத்தின் ரத்த நாளங்கள் மட்டுமின்றி உடலின் அனைத்து ரத்த நாளங்களிலும் தொடர்ந்து பல காலமாக நீடித்து வரும் உள்காயங்களின் காரணமாகவே இந்த அடைப்புகள் ஏற்படுகின்றன.


நமது உடலின் ரத்த நாளங்களின் உட்புற சுவரை "எண்டோதீலியம்" என்று அழைக்கிறோம் அந்த உட்புற சுவரில் சிராய்ப்பு போன்ற காயங்களை தொடர்ந்து ஏற்படுத்துவதை "இன்ஃப்லமேசன்" என்கிறோம்.


எப்படி நமது தோலில் காயம் ஏற்பட்டவுடன் அந்த காயத்தை ஆற்றுவதற்கு ரத்தத்தில் தட்டணுக்கள் மற்றும் காயத்தை ஆற்றும் பொருட்கள் ஒன்றிணைந்து சுயமாக காயத்தை ஆற்றுகின்றன.


அதே போல ரத்த நாளங்களின் உள்காயங்கள் ஏற்படும் போதும் அந்த காயத்தை ஆற்றும் முகமாக எல்டிஎல் (LDL) எனும் கொழுப்பு புரதம் தன்னிடம் உள்ள கொழுப்பை அந்த காயங்களின் மீது பூசி அதை குணமாக்க முயல்கிறது.


ரத்த நாளங்களின் சிராய்ப்பு போன்ற காயங்கள் - தட்டணுக்களை தூண்டி விடுகின்றன. அவையும் அந்த காயங்கள் மீது பூச்சை ஏற்படுத்துகின்றன.


நமது ரத்த நாளங்களில் தொடர் உள்காயங்களை ஏற்படுத்தும் விசயங்களில் முக்கியமானவை


"இன்சுலின் எதிர்ப்புநிலை" (INSULIN RESISTANCE)


கணையத்தில் சுரக்கப்படும் இன்சுலின் அதன் பணியை சரியாக செய்யாமல் இருப்பதால் கணையம் அதிகமாக இன்சுலினை சுரக்கும்.


ரத்தத்தில் இன்சுலின் அளவுகள் அதிகமாக இருப்பது உள்காயங்களை தூண்டும்.


நீரிழிவு (DIABETES MELLITUS)

 ரத்தக் கொதிப்பு ( HYPERTENSION)

உடல் பருமன் ( OBESITY) போன்றவைகளுக்கு ஆதியும் இந்த இன்சுலின் எதிர்ப்பு நிலையே ஆகும்.


ரத்தத்தில் தேவைக்கு அதிகமாக க்ளூகோஸ் (GLUCOTOXICITY) இருப்பதும் தேவைக்கு அதிகமாக ரத்த அழுத்தம் இருப்பதும் தொடர்ந்து ரத்த நாளங்களின் உட்புற சுவர்களில் காயங்களை ஏற்படுத்துபவை.


அதீத மன அழுத்தத்தின் விளைவாலும் சரியான உறக்கமின்மையாலும் ரத்தத்தில் கார்டிசால் அளவுகள் அதிகமாகவே இருக்கும் போது ரத்த நாளங்களில் உள்காயங்கள் தொடர்ந்து ஏற்படுகின்றன.


புகை பழக்கம் , மதுப் பழக்கம் போன்றவற்றாலும் இந்த உள்காயங்கள் ஏற்படுகின்றன. கோவிட் நோய் போன்ற வைரஸ் தொற்றுகளின் போது அந்த வைரஸுக்கு எதிராக நமது உடல் போர் புரியும் போது ரத்த நாளங்களில் உள்காயங்கள் ஏற்படுகின்றன.


இவையன்றி இந்த உள்காயங்கள் மரபணுக்காரணிகளாலும் ஏற்படுகின்றன சாதாரண நிலையில் நமது உடலில் உண்டாகும் உள்காயங்களை ஆற்றுவதற்கு எல்டிஎல் கொழுப்பு புரதத்தில் உள்ள கொலஸ்ட்ரால் உபயோகப்படுகிறது.


ஆனால் அதுவே இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ் நிலையில் எல்டிஎல் அளவில் சிறியதாகி விடுகிறது.


ரத்த நாளத்தின் எண்டோதீலியத்துக்குள் இந்த சிறிய எல்டிஎல் ஊடுறுவி விடுகிறது. ரத்த நாளத்தின் சுவர்களுக்குள் சென்ற இந்த சிறிய ஊறு விளைவிக்கும் எல்டிஎலின் விளைவால் ரத்த நாளத்துக்குள் தலையணையில் பஞ்சு திணித்தது போல வீக்கம் ஏற்படுகிறது.


கெட்ட சிறிய எல்டிஎல் கொழுப்பு எனும் பஞ்சு அளவுக்கதிகமாக திணிக்கப்படும் போது ஒரு நாள் - ரத்த நாளத்தின் உட்புற சுவரில் திடீரென வெடிப்பு ஏற்படுகிறது.


இந்த வெடிப்பு ஏற்பட்டவுடன் ரத்த தட்டணுக்கள் உடனே தூண்டப்பட்டு ஒன்றிணைந்து அந்த வெடிப்பை அடைக்க வருகின்றன.


இதனால் ரத்த நாளத்தின் விட்டம் குறைந்து மாரடைப்பு / மூளை ரத்த நாள அடைப்பு ஏற்படுகிறது.


நமது ரத்த நாளங்களில் உள்காயங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? -


இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ் இல்லாத நிலையை அடைய வேண்டும்.


- அதிக மாவுச்சத்து உணவு முறையை விடுத்து குறைந்த மாவுச்சத்து உண்ணும் உணவு முறையை பேண வேண்டும்


- நீரிழிவு ரத்தக் கொதிப்பை கட்டுக்குள் வைக்க வேண்டும்.


- மது புகை போன்ற தீய பழக்கங்களை தவிர்க்கவும்


- மன அழுத்தம் குறைக்கவும்


- முறையாக உறங்கவும்


- தினசரி உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்


- இனிப்பு / எண்ணெயில் பொரித்தவை / பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்பவை / குளிர் பானங்கள் ஆபத்தானவை


நாள்தோறும் ரத்த நாளங்களில் உள்காயங்களை ஏற்படுத்தும் மேற்கூறியவற்றை நிறுத்தாமல் கொழுப்பு சத்துள்ள உணவுகளை மட்டும் நிறுத்துவதால் எந்தப் பலனும் இல்லை .


மாறாக ஆபத்து தான் அதிகரிக்கும் என்பதை நாம் உணர வேண்டும்


Monday, September 8, 2025

பிணங்களை ஏன் சூரியன் மறைவதற்குள் எரித்துவிட வேண்டும் என்று கூறுகிறார்கள் தெரியுமா?

 இறுதி சடங்குகள் என்பது அனைத்து மதங்களிலும் நடத்தப்படும் ஒன்றாகும். ஆனால் மற்ற மதங்களுடன் ஒப்பிடுகையில் இந்து மதத்தில் அதிகளவு வித்தியாசமான இறுதி சடங்குகள் நடத்தப்டுகிறது. 

ஆனால் இந்த ஒவ்வொரு சடங்கிற்கு பின்னரும் ஒரு காரணத்தை நம் முன்னோர்கள் வைத்துள்ளனர்.


👺⚰️ இறந்தவர்கள் மரணத்திற்கு பிறகு அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அனைத்து இறுதிச்சடங்குகளும் நடத்தப்படுகிறது. ஆனால் பல இறுதி சடங்குகள் ஏன் செய்யப்படுகிறது என்பதே நமக்கு தெரியாது. இந்த பதிவில் அனைத்து இறுதி சடங்குகளுக்கும் பின்னால் இருக்கும் காரணங்களை பார்க்கலாம். 🙏🏻


👺மூக்கில் பஞ்சு வைப்பது...


⚰️ இறந்தவர்களின் உடல் என்பது பாக்டீரியாக்கள் அதிகம் வசிக்கும் இடமாக மாறிவிடும். எனவே அவர்களின் உடலில் இருந்து நுண்ணுயிர்கள் மூலம் சில வாயுக்கள் வெளிவரும். இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படும். இதனை தடுக்கத்தான் நாடிகட்டு என்னும் பெயரில் காதையும், வாயையும் சேர்த்து கட்டுகிறார்கள். மேலும் மூக்கில் பஞ்சு வைக்கப்பட காரணமும் நுண்ணுயிர்கள் உடலில் பரவாமல் இருக்கத்தான்.


🪔விளக்கேற்றுவது...


இறந்தவர்கள் வீட்டில் கண்டிப்பாக விளக்கேற்றி வைக்க வேண்டும் என்பது முக்கியமான சடங்காகும். 

உயிர் சக்தியானது உடலை விட்டு பிரிந்து விட்டால் உடலானது வெற்றுடலாக மாறிவிடும். அவர்கள் உடலில் இருந்து வாயுக்கள் வெளியேற தொடங்கிவிடும். ஆன்மீகரீதியாக அவர்கள் உயிர் அலைகள் அந்த இடத்திலேயே சுற்றிவரும். இந்த அலைகள் மற்றவர்கள் உடலில் நுழைந்தால் அவர்கள் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். இதனை தடுக்கவே விளக்கேற்றி வைக்கப்படுகிறது. இந்த விளக்கு தெற்கு திசை நோக்கி ஏற்றிவைக்கப்பட வேண்டும், ஏனெனில் இதுதான் மரணத்தின் கடவுளான எமனுக்கான திசையாகும். விளக்கேற்றி வைத்தபின் எமதர்மரிடம் அந்த அலைகள் தன்னை நெருங்காமல் விளக்கின் தீபத்திற்கு செல்லும்படி வேண்டிகொள்ள வேண்டும்.


👍🏻ஒரு திரி  மட்டும் உபயோகிக்க வேண்டும்...


🙇🏻ஒருவர் இறந்த பிறகு பஞ்ச பூதங்களால் நிறைந்த அவரின் உடலானது உயிரற்றதாகிவிடும். அதன்பின் ஒரே ஆன்மா மட்டுமே ஒளிரும். விளக்குகளில் பயன்படுத்தப்படும் ஒற்றை திரியானது ஒளிரும் ஆன்மாவை குறிக்கும்.


🙏🏻ஏன் பகலில் மட்டுமே செய்யப்படுகிறது?


அனைத்து இறுதி சடங்குகளும் பகல் நேரத்தில் மட்டுமே செய்ய வேண்டும், ஏனெனில் உடலை தகனம் செய்வது முதன்மையானதாகும். ஏனெனில் இரவு என்பது எதிர்மறை சக்திகள் அதிகம் உலவும் மேலும் அவற்றின் பலமும் இரவு நேரங்களில் அதிகம் இருக்கும். இறந்த எதிர்மறை சக்திகள் எப்பொழுதும் மற்ற உடல்களில் நுழைய முயலும். 

எதிர்மறை சக்திகளின் இந்த தாக்குதல்களை தவிர்க்கவே உடல் பகல் பொழுதில் தகனம் செய்யப்படுகிறது. அறிவியல்ரீதியாக கூறும்போது இறந்தவர்களின் உடலில் இருந்து வெளிப்படும் நுண்ணுயிர்களின் அளவு அதிகமாக இருக்கும். இது சுற்றி இருப்பவர்களுக்கு எளிதில் தாக்கக்கூடும். அதனால்தான் உடல் தகனம் பகலில் செய்யப்படுகிறது.


🙏🏻

👹மூங்கில் பாடை...


மூங்கில்களில் குறிப்பிட்ட ஒலி ஆற்றலை வெளியிடும் தன்மை உள்ளது, இது சுற்றி வரும் தன்மையுடையது. இதில் இருந்து வெளிப்படும் ஒலி ஆற்றல் இறந்து உடலுக்கு கவசமாக அலைகளை ஏற்படுத்தக்கூடும். மூங்கிலால் செய்யப்பட்ட பாடையில் இருக்கும் போது அந்த உடல் ஒலி ஆற்றலால் எதிர்மறை சக்திகளிடம் இருந்து பாதுகாக்கப்படும்.


கால்கள் சேர்த்து கட்டப்படுவது...


இறந்தவர்களின் உடல் தகனம் செய்யப்படுவதற்கு முன்பு அவர்கள் உடல் தரையில் வைக்கப்பட்டு அந்த உடலின் காலின் பெருவிரல் இரண்டும் சேர்த்து கட்டப்படும். இது உடலின் வலது மற்றும் இடதுபுற ஆற்றல்கள் இரண்டையும் ஒன்று சேர்த்து உடலையே சுற்றி வர காலின் விரல்கள் கட்டப்படுகிறது.


மண்பானை... 


இறந்த உடலை சுற்றி இருக்கும் ஆற்றலை ஒருமுகப்படுத்த பல பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது, அதில் ஒன்றுதான் மண்பானை. மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் இந்த வேலையை சிறப்பாக செய்கிறது. உடலை எதிர்மறை சக்திகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க மண்பானை உதவுகிறது. மண்பானையிலிருந்து வெளிப்படும் ஒலி ஆற்றல்கள் மிகவும் வேகமாக பரவக்கூடியவை... இவை இறந்தவர்களின் ஆற்றலை கட்டுப்படுத்தும்...

Sunday, September 7, 2025

ஆண்களைவிட பெண்கள்தான்

 ஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு மனஅழுத்தமிருக்க வாய்ப்புண்டு என்கிறார்கள் மருத்துவர்கள்.


பாரதியின் கதையைக் கேளுங்கள்.

இருபத்தேழு வயதுதான் பாரதிக்கு. தனியார் கம்பெனியில் வேலை. கைநிறைய சம்பாத்தியம். இருந்தும் ஏதோ ஒரு விரக்தி. ஒருநாள் கையில் அடிபட்டு ரத்தம் அதிகம் கொட்டி, மயக்கமாகிவிட்டதாக மருத்துவமனையில் சேர்த்தார்கள். அவரைப் பரிசோதித்த டாக்டருக்கு அதிர்ச்சி.


‘பாரதிக்குக் கையில் அடிபடவில்லை. அவர் தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். கை நரம்பை அவராகவே துண்டித்திருக்கிறார்’ என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் கேட்டபோது முதலில் மறுத்தவர், பின்பு ஒப்புக்கொண்டார்.


‘‘டாக்டர்! எனக்குத் தூக்கம் சரியாக வருவதில்லை. அடிக்கடி என் வீட்டாரிடமே எரிந்து எரிந்து விழுகிறேன். மனசு படபடப்பாகவே இருக்கிறது. தொடர்ந்து களைப்பாக இருப்பது போன்றே உணர்கிறேன். பதற்றத்துடனே வேலைக்குப் போக வேண்டியதாக உள்ளது. எந்த நேரமும் எதைப் பற்றியாவது நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டே இருக்கிறேன். பயம் வரும்போதெல்லாம் ‘நாம் ஏன் வாழ வேண்டும்?’ என்ற எண்ணம்தான் எழுகிறது’’ என்று சொல்லியிருக்கிறார்.


அவரைப் பரிசோதித்த டாக்டர் அவருக்கு மனஅழுத்தம் இருப்பதை டையக்னஸ் செய்து உறுதிப்படுத்தியிருக்கிறார். தொடர்ந்து, ‘‘பாரதியின் மூளையில் உள்ள செரட்டோனின் (Serotonin) என்ற ரசாயனப் பொருளின் அளவு மிகக் குறைவாக இருக்கிறது. அதனால் ஏற்பட்ட மனஅழுத்தம்தான் இந்த பாதிப்புக்குக் காரணம்’’ என்றார்.


மனஅழுத்தம் என்றால் என்ன?

நம்முடைய மூளையில் செரட்டோனின், டோப்பமின் என்ற ரசாயனப் பொருட்கள் சுரக்கின்றன. இவற்றின் அளவு சமநிலையில் இருந்தால் பிரச்னை இல்லை. கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால்தான் மனஅழுத்தம் ஏற்படும். பாரதிக்கும் இவை சமநிலையில் இல்லாததால்தான் இவ்வளவு பிரச்னைகள் வந்திருக்கின்றன.


சில சமயம் எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே சிலருக்கு மனஅழுத்தம் தீர்ந்துவிடும். அப்போது இந்த ரசாயனப் பொருட்கள் சமநிலைக்குத் தற்செயலாக வந்திருக்கும். அதனால்தான் பயம், படபடப்பு தானாகவே குறைந்து, மனஅழுத்தம் இல்லாமல் போகின்றது. இது எல்லோருக்கும் சாத்தியமல்ல. மனஅழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் ஷிஷிஸிமி குரூப் மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள். இது செரட்டோனின், டோப்பமின் போன்ற ரசாயனப் பொருட்களின் சுரப்பை குறைவாகவோ, கூடுதலாகவோ சுரக்கவிடாமல் சமநிலையில் வைத்திருக்கும்.


மனஅழுத்தத்தின் அறிகுறிகள்

இனம்புரியாத கவலை, நம்பிக்கையின்மை, விரக்தி போன்ற உணர்வுகள் ஒருவருக்கு இருந்தால், அவர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.


எப்போதும் விரக்தியாகப் பேசுவது, அதிகமாகக் கோபப்படுவது, அதிக கவலை, தூக்கமில்லாமலிருப்பது, பசியின்மை, வயிற்றுப்போக்கு, பிறருடன் பேசுவதைக் குறைத்துக் கொள்வது, அடிக்கடி சோர்ந்து போவது, ஏதோ நடக்கப்போகிறது என்கிற பயத்துடனேயே இருப்பது, தனிமையில் அழுவது, தேவையில்லாமல் பதற்றமடைவது, சோகமாகவே இருப்பது, நாம் எதற்கும் உபயோகமற்றவர் என்ற எண்ணம் தலைதூக்குவது, சில நேரங்களில் தற்கொலை எண்ணம் ஏற்படுவது... இவை யாவும் மனஅழுத்தத்திற்கான அறிகுறிகள்தான். எடை குறைவதும், தேவைக்கு அதிகமான எடை கூடுவதும்கூட மனஅழுத்தத்தின் அறிகுறிகள்தான் என்கிறார்கள்.


சிலருக்கு இது பரம்பரை நோயாகவும் இருக்கலாம் என்கிறார்கள். அளவுக்கு மீறிய மாத்திரைகளைச் சாப்பிடுவதும் இதற்கு இன்னொரு காரணம்.


வருமுன் காப்போம்

மனஅழுத்தம் வரும்முன் காக்க இயற்கையே நமக்குச் சில சிகிச்சைகளை அளித்துள்ளது.


உடற்பயிற்சி

மனஅழுத்தம் ஏற்படாமலிருக்க உடற்பயிற்சிதான் மிகப்பெரிய சிகிச்சை. பாரதிக்கு மருத்துவர்கள் மருந்துகளை மட்டும் பரிந்துரை செய்யவில்லை. உடற்பயிற்சிகளையும் சிகிச்சைகளாக அளித்ததால்தான் அவரால் இன்று சகஜ நிலைக்குத் திரும்ப முடிந்தது.


நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் வாக்கிங் போவதும் நல்ல உடற்பயிற்சிதான். வாக்கிங் என்றால் 45 நிமிடங்கள் தொடர்ந்து சுறுசுறுப்பாக நடக்க வேண்டும். அப்போதுதான் நமது உடலில் மீஸீபீஷீrஜீலீவீஸீ என்ற வேதிப்பொருள் சுரந்து, நல்ல மூடுக்குக் (விஷீஷீபீ மீறீமீஸ்ணீtமீ) கொண்டுவரும்.


யோகா

மனஅழுத்தத்தைக் குறைக்க யோகா வகுப்புகளுக்குப் போகலாம். ஏதோ அரைமணி நேரம் மட்டும் அமைதியாக இருந்துவிட்டு, மற்ற நேரம் முழுக்க டென்ஷனாக இருப்பதில் அர்த்தமில்லை. வாழ்நாள் முழுக்க ஒருவரின் மனதை அமைதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் அதற்குப் பலன் கிடைக்கும். தியானத்தின் மூலம் தனது அழுக்கை, குரூரத்தை, எரிச்சலை, அதிருப்தியை, கவலையை, விரக்தியை மாற்றிக்கொண்டால்தான் அது வாழ்வை வளப்படுத்தும்.


தனிமையைத் தவிர்த்தல்

கூடிய மட்டும் தனிமையைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்குப் பிடித்தமானவரிடம் மனம்விட்டுப் பேசுங்கள்.


இசை, புத்தகம்

நல்ல புத்தகங்களைப் படிப்பது மனஅழுத்தத்தைத் தவிர்க்கும் என்கிறார்கள். மனதிற்குப் பிடித்த இசையைத் தொடர்ந்து கேட்பது மிக நல்லது. மனம் வேறு சிந்தனைக்குப் போகாமல் கட்டுப்படுத்தும் திறன் இசைக்கு உண்டு.


உணவு

அசைவப் பிரியர்கள் மீன் சாப்பிடலாம். அதில் உள்ள ஒமேகா_த்ரீ என்ற கொழுப்பு திரவம் உங்கள் மனதை நல்ல மூடுக்குக் கொண்டு வரும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.


தியானம்

கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்யலாம். கண்ணை மூடிய நிலையில் கடல் அலை, குளக்கரை, இயற்கை காட்சிகளென்று கற்பனை செய்து பார்ப்பது மனஅழுத்தத்திலிருந்து விடுதலை பெற உதவும்.


மன அழுத்தத்திற்கான மாத்திரைகள்

மனஅழுத்தத்தைக் குணப்படுத்தும் மாத்திரைகள் நிறைய உள்ளன. இதற்கு Selective Serotonin Reuptake inhibitors (SSRI) என்று பெயர். இந்த மாத்திரைகள் மூளையில் உள்ள செரட்டோனின் அளவைக் கட்டுப்படுத்தக் கூடியவை. Prozac, Paxil, Zoloft ஆகிய மருந்துகள் SSRI வகையைச் சேர்ந்தவையே. இதை உங்கள் மருத்துவரின் பரிந்துரைப்படிதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.


‘‘முறையான மாத்திரைகள், உடற்பயிற்சிகள் ஆகிய இரண்டையும் உரிய காலத்தில் எடுத்துக் கொண்டதால்தான் என்னால் இன்று வாழ்க்கையை சந்தோஷமாக எதிர்கொள்ள முடிகிறது. மனஅழுத்தம் என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு என் மனம் பக்குவப்பட்டுள்ளது’’ என்கிறார் பாரதி. அவர் சொல்வது மற்றவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாகத்தானே இருக்கிறது.


மனஅழுத்தத்தைத் தவிர்க்க சில வழிகள்:


1. உடற்பயிற்சி


2. யோகா, தியானம்


3. ஒமேகா த்ரீ கொழுப்புள்ள மீன்கள்


4. இசை


5. புத்தகம்


6. ஷிஷிஸிமி மாத்திரைகள்

பாட்டி வைத்தியம்

 1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.


2. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.


3. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.


4. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.


5. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.


6. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.


7. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.


8. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.


9. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.


10. எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.


நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


11. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.


12. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.


13. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.


14. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.


15. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.


16. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.


17. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.


18. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.


19. தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.


20. வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.


21. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.


22. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.


23. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.


24. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.


25. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.


26. கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.


27. சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.


28. நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.


29. வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.


30. பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.


31. புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.


32. பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.


33. கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.


34. சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.


35. முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்


36. கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.


37. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.


38. பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.


39. படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.


40. நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.


41. நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.


42. இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.


43. மலச்சிக்கலுக்கு இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.


44. கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.


45. வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.


46. ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.


47. கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.


48. சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.


49. கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும்.


50. தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.


51. தம்ளர் மோருடன் சிறிது பெருங்காயத்தூள்,உப்புச் சேர்த்து குடித்தால் சரியாகும்.


52. வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.


53. சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.


54. ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.


55. அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்...

Saturday, September 6, 2025

உலகளவில் அதிக மக்களின் இறப்பிற்கு முதன்மை காரணமாக இருப்பது மாரடைப்புதான்.

 உலகளவில் அதிக மக்களின் இறப்பிற்கு முதன்மை காரணமாக இருப்பது மாரடைப்புதான். இந்தியாவில் மட்டும் ஒரு நாளைக்கு சராசரியாக 448 பேர் மாரடைப்பால் இறக்கின்றனர். அதில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது. American Heart Association கூற்றுப்படி, பெண்கள் பெரும்பாலும் மாரடைப்பின் அறிகுறிகளை அமில ரிஃப்ளக்ஸ் அல்லது காய்ச்சல் போன்ற ஆபத்தில்லாத பிரச்சினைகள் என்று தவறாக கருதுகிறார்கள்.


பல பெண்கள் மாரடைப்பின் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே அடையாளம் காணத் தவறிவிடுகிறார்கள், ஏனெனில் பெண்களுக்கு தோன்றும் மாரடைப்பின் அறிகுறிகள் வழக்கமான மார்பு வலியிலிருந்து கணிசமாக வேறுபடுகின்றன. மாரடைப்பு என்பது ஒரு மருத்துவ அவசரநிலை, மேலும் இதன் அறிகுறிகளைப் புரிந்துகொள்வது கடுமையான சிக்கல்கள் அல்லது மரணத்தைத் தவிர்ப்பதற்கு மிகவும் முக்கியம். பெண்களுக்கு புறக்கணிக்கக் கூடாத மாரடைப்பின் அசாதாரண அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.


மார்பில் அசௌகரியமான அழுத்தம் அல்லது வயிறு நிரம்பி இருப்பது

மார்பு வலி என்பது மாரடைப்பின் மிகவும் பொதுவான அறிகுறியாகும். இருப்பினும், சில பெண்கள் இதை ஆண்களை விட கொஞ்சம் வித்தியாசமாக அனுபவிக்கலாம். American Heart Association கருத்துப்படி, அசௌகரியமான அழுத்தம், வயிறு நிரம்பி இருப்பது அல்லது வலி போன்ற உணர்வுகளை ஏற்படுத்தக்கூடும். இந்த வலி பெண்களின் மார்பின் மையத்தில் இருக்கலாம், பெரும்பாலும் இடது பக்கத்தில் தோன்றாது.


கைகள், முதுகு, கழுத்து அல்லது தாடையில் வலி

பெண்களுக்குத் தோன்றும் மாரடைப்பின் மற்றொரு தனித்துவமான அறிகுறி மேல் உடலில் வலி அல்லது அசௌகரியம் ஏற்படுவது. பெண்கள் ஒரு கை அல்லது இரண்டிலும் படிப்படியாக அல்லது திடீர் வலியை அனுபவிக்கலாம், அதே போல் முதுகு, கழுத்து, தாடை அல்லது வயிற்றிலும் வலி ஏற்படலாம். தூக்கத்தில் மாரடைப்பு ஏற்பட்டால், இந்த வலி உங்களை எழுப்பிவிடும். இது மாரடைப்பின் வழக்கமான அறிகுறிகளிலிருந்து மிகவும் வேறுபட்டது, எனவே இதை பெண்கள் பெரும்பாலும் நிராகரிக்கப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.


வயிறு வலி

சில நேரங்களில் பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கு முன்பு வயிற்று வலி ஏற்படும். இது பெரும்பாலும் நெஞ்செரிச்சல், காய்ச்சல் அல்லது பிற குடல் பிரச்சினைகள் என்று கணிக்கப்படுகிறது. வலி சாதாரணமாக உணரப்பட்டு வயிற்றுப் பகுதியில் கடுமையான அழுத்தம் போல் உணரப்படலாம். சில பெண்கள் இதை வயிறு மீது யானை அமர்ந்திருப்பது போல இருக்கும் என்று விவரிக்கிறார்கள்.


மூச்சுத் திணறல்

பெண்களிடையே தோன்றும் மூச்சுத் திணறல் மாரடைப்பின் மற்றொரு எச்சரிக்கை அறிகுறியாகும், இது பெரும்பாலும் புறக்கணிக்கப்படும் அறிகுறியாகும். இது மார்பு வலியுடன் அல்லது இல்லாமல் ஏற்படலாம். உங்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டாலோ, மூச்சுத் திணறல் ஏற்பட்டாலோ, அல்லது மூச்சு விட முடியாமல் போனாலோ,உடனடியாக மருத்துவ உதவியை பெற வேண்டியது அவசியம். இந்த அறிகுறிகள் பொதுவாக பதட்டம், சோர்வு அல்லது சுவாசப் பிரச்சினை என்று நிராகரிக்கப்படுகின்றன. ஆனால் இது மாரடைப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம்.


குளிர் வியர்வை

பதட்டமான சூழலில் குளிர் வியர்வை பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான பொதுவான அறிகுறியாகும். உடற்பயிற்சி அல்லது சோர்வு காரணமாக ஏற்படும் வியர்வை என்று பெண்கள் பெரும்பாலும் இதை நிராகரிக்கின்றனர். இருப்பினும், இந்த அறிகுறியை நிராகரிக்கக்கூடாது. குளிர் வியர்வையுடன் குமட்டல் மற்றும் லேசான தலைவலி இருந்தால், உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாட வேண்டும்.