Sunday, March 1, 2020

அஷ்டமி..... அதனை பற்றிய தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்......இந்த திதியில் #குழந்தை பிறந்தால் பிரச்சினையா ????



ஒரு மாதத்தில் வளர்பிறைக்காலத்தில் 14 திதிகளும், தேய்பிறைக் காலத்தில் 14 திதிகளும் என 28 நாட்கள் வருகிறது மீதம் இரண்டு தினங்களில் ஒன்று அமாவாசை மற்றொன்று பௌர்ணமி என மொத்தம் 30 நாட்கள் என ஒரு மாதம் பூர்த்தியடைகிறது.

இத்திதிகளில் “அஷ்டமி திதியும்” ஒன்று. இந்த அஷ்டமி திதி சந்திரனின் வளர்பிறை மற்றும் தேய்பிறைக் காலத்தில் #எட்டாவது தினமாக வருகிறது.

பொதுவாக ஜோதிட மற்றும் எண் கணித சாஸ்திரம் படி 8 என்பது சனிபகவானின் ஆற்றல் கொண்ட ஒரு எண்ணாகும். புராண, #இதிகாசங்களின் படி சனி பகவான் ஒரு நீதி தேவன், அதனால் எவர் ஒருவர் சிறிய அளவு தீவினையை புரிந்திருந்தாலும், அதற்கான தண்டனையை உடனே வழங்கி நீதியை நிலை நாட்டுபவர்.

இதன் காரணமாகவே சனிபகவானையும், அவரின் ஆற்றல் கொண்ட 8 ஆம் எண்ணையும் கண்டு பெரும்பாலானோர் கலக்கம் அடைகின்றனர். அப்படிப்பட்ட சனிபகவானின் தாக்கம் இந்த அஷ்டமி திதியில் ஏற்படுகிறது.

பொதுவாக வளர்பிறை மற்றும் தேய்பிறைக் காலத்தில் வரும் எந்த ஒரு அஷ்டமி திதியிலும் சுபகாரியங்கள் செய்யப்படுவதில்லை. ஆனால் இறைவழிபாடுகள் செய்ய வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி இரண்டுமே சிறப்பான நாட்களாகும். வளர்பிறை அஷ்டமியில் செல்வம் பெருக திருமாலின் இதயத்தில் வீற்றிருப்பவளான “லட்சுமியையும்”, தேய்பிறை அஷ்டமியில் சனி பகவானின் தோஷத்தை நீக்க #பைரவர் வழிபாடும் மேற்கொள்ளபடுகிறது ....

#அஷ்டமி_திதியில் குழந்தை பிறப்பது நல்லதா_கெட்டதா....

ஆவணி மாத அஷ்டமி திதியில் தான் “#கிருஷ்ண_பரமாத்மா” அவதரித்தார். அப்படி அவதரித்த கண்ணன் தன் சொந்த தாய்மாமனான கம்சனை வதம் புரிந்தார். இதன் காரணமாகவே பெரும்பாலானோர் தங்களுக்கு அஷ்டமி திதியில் பிறக்கும் ஆண் குழந்தையால், அக்குழந்தையின் தாய்மாமனுக்கு ஆகாதென்று அஞ்சுகின்றனர்.

முதலில் #கண்ணன் ஒரு தெய்வ அவதாரம், நாம் #மனித அவதாரம் என்ற எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் இப்படிப்பட்ட அமைப்பில் பிறந்த பெரும்பாலான குழந்தைகளால் அவர்களின் தாய்மாமன்களுக்கு எவ்வொரு பாதிப்பும் ஏற்படாமல் அனைவரும் சுகமாகத் தான் வாழ்கிறார்கள். ஆதலால் அஷ்டமி திதியில் ஆண், பெண் என எந்த குழந்தைப் பிறந்தாலும் எவ்வித பாதகமுமில்லை.

அதையும் மீறி பாதிப்பு ஏற்படுவதாக அஞ்சுபவர்கள் பெருமாள் கோவிலுக்குச் சென்று #விஷ்ணு____சஹஸ்ரநாமம் படித்து வர நலம் ஏற்படும்.

No comments: