ஆல்
தாவர இயல் பெயர்: Ficus benghalensis
இதன் மறு பெயர்கள்: பகுபாத,கசீரி, வனசுபதி, ரக்தபல, நியக்ரோத, சிருங்கி, மகச்சாய
வளரும் இடங்கள்: இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் இயற்கையாக வளர்கிறது.
பயன் தரும் பகுதிகள்: இலை, பூ, விதை, பழம், பால், பட்டை, விழுது
பொதுவான தகவல்கள் : ஆல் அல்லது ஆலமரம் (Ficus benghalensis) விழுதுகளை உடைய ஒரு மரம். இதன் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகின்றன.
"ஆல்" பெயர் காரணம்:-
மரங்களில் மிகவும் அகலமான மரம் ஆலமரம். அகல் என்னும் சொல் ஆல் என மருவி வழங்கப்படுகிறது. அகன்ற அதன் கிளைகளைத் தாங்குவதற்கு அதன் விழுதுகள் பயன்படுகின்றன. கிளைகளிலிருந்து இவை கீழ்நோக்கி இறங்குவதால் (வீழ்வதால்) இதனை வீழ் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
இந்தியாவில் ஆலமரம் இல்லாத கிராமமே பார்க்க இயலாது. அதுவும் ஒவ்வொரு ஆலமரமும் மிகப் பழமையான பாரம்பரிய தொடர்ச்சியும் கொண்டவை.
பெரிய மரமாக அடர்ந்து படர்ந்து இருப்பதினால் மட்டுமே ஆலமரத்தடியில் ஊர்க்கூட்டம் நடத்தபடுவதில்லை, மாறாக ஆலமரத்தடியில் சென்று அமர்ந்தாலே அமைதி வந்துவிடும் .தியானம் கூடிவிடும் .இது அனுபவ பூர்வமான உண்மை.
இம்மரத்தின் அடியில் தவம் இருப்பவர்களுக்கு ஞானம் பெற்றுத் தருவதில் ஆல மரத்துக்குத் தனி மகிமை உண்டு. இந்த மரத்தடியில் ஊர்கூட்டம் நடத்தினால் மக்கள் அமைதியாக உணர்ச்சிவசப்படாது இருப்பர் என்று நம் முன்னோர் அறிந்திருந்தனர் .
ஆல மரத்துப் பால், இலைகள், பட்டை, கனிகள், விதைகள், மொட்டுகள், வேர், விழுதுகள் யாவும் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுகின்றன.
ஆலமரத்தின் பொதுவான பயன்கள்:-
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
நல்ல நிழல் தரும்.
இதன் இலைகளைத் தைத்து உண்கல இலையாகப் பயன்படுத்துவர்.
ஆலம் பழத்தைப் பறவைகள் விரும்பி உண்ணும்.
பசு கன்று ஈன்றபின் போடும் மாசியை வைக்கோல் தாளில் கட்டி ஆலமரத்தில் தொங்கவிடுவர்.
ஆலமரத்தின் சிறப்பு:-
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலுமிரண்டும் சொல்லுக்குறுதி” என்ற
பழமொழி மூலமாக ஆலமரம் சிறப்பிக்கப்படுகிறது.
சிவன் ஆலமர் செல்வன் எனப் போற்றப்படுகிறான்.
திருவாலங்காடு என்னும் ஊர் இம்மரத்தால் சிறப்புப் பெற்றுள்ளது
'ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி வாழ்க' எனப் பெரியோர்கள்
இன்றும் கூட வாழ்த்துவர்.
இன்றும் பல ஊர்களில் கிராமக் கூட்டங்கள் ஆலமரத்தடியில்
நடைபெறுகின்றன.
திருஅன்பிலாலந்துறை, பழுவூர், திருவாலம்பொழில் முதலிய சிவத்தலங்களில்
ஆலமரம் தலமரமாக விளங்குகின்றது.
இந்திய தேசிய சின்னங்களில் ஆலமரம் தேசிய சின்னமாக உள்ளது.
ஆலமரத்தின் மருத்துவப் பயன்கள்:-
* பூக்காம்புகளை, அத்தி மரப்பட்டையில் கலந்து பவுடராக்கிக் கொண்டு, இதனுடன் சம எடையளவு சர்க்கரை சேர்த்து பாலுடன் கலந்து பயன்படுத்தலாம். இதனால் இந்திரியத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை கூடும்.
* ஆலம் பாலை இரண்டு வேளை புண் அல்லது வெடிப்பு உள்ள இடங்களில் தடவி வர சீக்கிரத்தில் குணம் கிடைக்கும்.
* ஆலமரத்துப் பாலையும், எருக்கம்பாலையும் சம அளவில் கலந்து புண்களின் மீது வைத்துப் பூசுவதனால் புண்கள் விரைவில் ஆறுகிறது.
* வீட்டுக்கு ஒரு ஆல மரத்தை வளர்த்தால் அல்லது தெருவுக்கு அல்லது ஊருக்கு ஒரு ஆலமரத்தை வளர்த்தால் குளுமையும், ஆரோக்கியமும் கிடைக்கும். மேலும், மனப் பதட்டம் நீங்கி மனதிற்கு அமைதியும் கிடைக்கும்.
* கண்நோய் குணமாக ஆலம் பாலில் பச்சைக் கற்பூரத்தை தூளாகக் கலந்து கண்களில் மையாக இட வேண்டும்.
* தாய்ப்பால் பெருகுவதற்கு ஆலம் விழுது, துளிர், விதை ஆகியவற்றை சம அளவாக எடுத்து அரைத்து 5 கிராம் காலையில் மட்டும் ஒரு டம்ளர் பாலில் கலந்து குடித்து வரவும்.
* தளர்ச்சியான மார்பகங்கள் சீர்படவும், கவர்ச்சி பெறவும் பயன்படுகின்றன. விழுதுகளின் தலைப்பகுதியில் மஞ்சளும், சிவப்பும் கலந்துள்ள பகுதிகளை எடுத்து அரைத்து மார்பகங்கள் மீது பூசினால் வளர்ச்சி பெறும். ஆலம் விழுதுகளை அரைத்து 1 கிராம் முதல் 3 கிராம் வரை சாப்பிட்டால் நீர்த்த இந்திரியம் கெட்டிப்படும்.
* ஆலமரத்து வேர்ப்பட்டை 12 கிராம் அளவு எடுத்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, கஷாயமிட்டுக் குடிக்க வேண்டும். இதன் மூலம் சர்க்கரை நோய் குணம் பெறுகிறது.
* ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி அரைத்து, சம அளவு வெண்ணெய் கலந்து காலை, மாலை வேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு வந்தால் வெட்டை நோய் குணமாகும்.
* புதிதாக உரித்து எடுக்கப்பட்ட ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி, அரைத்து, சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, மாலை வேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்பாடு நோய் நலம் பெறும். கர்ப்பப்பை வீக்கத்தைக் குணப்படுத்த இதனை 6 கிராம் அளவு வரையில் பாலுடன் கலந்து கொடுக்கலாம்.
* ஆலம் பாலை 3 வேளை புண்களின் மீது பூச புண்களில் உள்ள கிருமிகள் நீங்கும். ஆலம் துளிர் இலைகளை அரைத்து 5 கிராம் அளவு எடுத்து ஒரு டம்ளர் தயிரில் கலந்து குடிக்க இரத்த பேதி நிற்கும்.
* ஆல மரப்பட்டையை தண்ணீரில் நனைத்து அதன் சாற்றைக் குடிப்பதன் மூலம் சீதபேதியைக் குணப்படுத்தலாம். அளவுக்கு அதிகமாக மாதவிடாய்க் கழிவதையும் இது தடுத்து நிறுத்துகிறது.
* ஆலமரத்துக் கனிகளை நன்றாக உலர்த்தி, அரைத்து, 12 கிராம் அளவு பாலில் கலந்து கொடுக்கலாம். ஞாபக மறதியைப் போக்கவும் இந்திரியத்தைத் திடப்படுத்தவும் இவை மிகவும் உதவுகின்றது.
* ஆலமரத்துக் கனியை நிழலில் உலர்த்தி பவுடராக்கி, சம அளவு சர்க்கரை கலந்து காலை, மாலை 5 கிராம் அளவில் கொடுத்து வந்தால் மூலம், சிறுநீர்ப்பை சம்பந்தமான குறைபாடுகள் குணப்படுகின்றது.
* ஆல மரத்தின் பட்டையை பொடியாக்கி தினமும் பாலில் கலந்து உண்டு வந்தால் வெட்டை, மூலம், ஞாபக மறதி, இருமல், ஈறு வீக்கம், பேதி போன்றவை கட்டுப்படுகிறது.
* ஆலம் விழுதை எருமைத் தயிர் விட்டு அரைத்து 40 கிராம் எடுத்து அதே அளவு எலுமிச்சம் பழச்சாறு சாறு சேர்த்து 3 வேளை குடிக்க வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
* வாய்ப்புண், வாய் துர்நாற்றம், நாவெடிப்பு மற்றும் நீரிழிவு நோய்களுக்கு ஏற்றது ஆலம் பட்டைப் பொடி.
* ஆலமர விழுதுகளின் மெல்லிய இலைகள் ஆறு கிராம் அளவு எடுத்து தண்ணீரில் அரைத்து வடிகட்டி அதில் வெண்ணெய் கலந்து குடிக்கச் செய்தால் வாந்தி நின்றுவிடும்.
* ஆலம் விழுதுகள் ஈறு நோய்களை குணப்படுத்த வல்லது.
* ஆலமர விழுதுகளை எரித்து தண்ணிரில் சிறிது நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்துக் தெளிந்த நீரைக் குடிப்பதால் வாந்தி கட்டுப்படுகிறது. ஆலமர இலைகளைக் கஷாயமிட்டு, அதனைப் பாகுபோல் செய்துகொண்டு சாப்பிடுவதால் இந்திரியத்தில் உயிரணுக்கள் எண்ணிக்கை குறைந்து போதல், ஞாபக மறதி நோய், கிரந்தி நோய்கள் குணப்படுகிறது.
* ஆல இலைகளை எரித்து அதன் சாம்பலை வெற்றிலையுடன் சேர்த்துச் சாப்பிடுவது தவறான உடல் உறவினால் வரும் வெட்டை நோய்க்கு நிவாரணமாக அமைகிறது.
* ஆல மரத்தின் ஒவ்வொரு பாகத்திலும் பால் வடியும். இதைச் சேகரித்து மருந்தாகப் பயன்படுத்தலாம். இது காது, மூக்கு, பல் நோய்கள், சீக்கிரத்தில் இந்திரியம் வெளியாகுதல், மூல நோய், கட்டிகள், வலிகள் நீங்க பயன் தருகிறது.
No comments:
Post a Comment