கற்றாழை
தாவர இயல் பெயர்: Aloe Vera
இதன் மறு பெயர்கள்: கத்தளை, சோற்றுக் கற்றாழை, சிறுகத்தளை, குமாரி, கன்னி
வளரும் இடங்கள்: வெப்ப மண்டலப் பகுதிகள் அனைத்திலும் இது வளரும் தன்மை கொண்டது.
பயன் தரும் பகுதிகள்: இலைகள்
பொதுவான தகவல்கள் : கற்றாழை பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இந்தத் தாவரம் கற்றாழை, கத்தாளை, குமரி, கன்னி. என அழைக்கப்படுகிறது. (ஆங்கிலம்: Indian Aloes, தெலுங்கு: கலபந்த, மலையாளம்: கட்டுவாளா, கன்னடம்: கதளிகிட, சமஸ்கிருதம்: குமாரி, இந்தி: Ghikavar.) இது ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் பயிராகும். நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும். மடல், வேர் ஆகியவை மருத்துவப் பயனுள்ளவை. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது. கற்றாழை லில்லியேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்டது. மேலும் கிரேக்கம், பார்படோ தீவுகள், சீனா, இத்தாலி, வெனிசுலா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இயற்கையாக வளர்கின்றது. இந்த இனத்தாவரம் ஆப்பிரிக்காவில் அதிகமாக வளரக்கூடியதாக இருக்கிறது. இது பொதுவாக, தென்னாப்பிரிக்காவின் கேப் மாநிலத்திலும், ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல பகுதியின் மலைகளிலும், ஆப்பிரிக்காவின் தீவுகள், அராபியத் தீபகற்பம், மடகாஸ்கர் போன்ற அண்டைப் பகுதிகளிலும் காணப்படுகிறது. இந்தியாவில் ஆழ்வார் (ராஜஸ்தான்), சட்நாபள்ளி (ஆந்திரா), ராஜபிப்லா (குஜராத்), சேலம் மற்றும் தூத்துக்குடி (தமிழ்நாடு) ஆகிய இடங்களில் சாகுபடி செய்யப்படுகின்றது.
கற்றாழையின் அமைப்பு:-
பெரும்பாலான கற்றாழை இனங்களுக்கு ரோஜா இதழ்கள் போன்ற பெரிய அமைப்பும், தடிமனான சதையுள்ள இலைகளும் இருக்கும். பெரும்பாலான கற்றாழை இனங்கள் தண்டுகள் இல்லாமல் காணப்படும். இது தரையிலிருந்து நேரடியாக ரோஜா இதழ் போன்ற அமைப்பில் வளரும்; மற்ற வகைகளில், கிளைகளுடன் கூடிய அல்லது கிளைகள் இல்லாத தண்டு இருக்கலாம். இதில் சதையுள்ள இலைகள் இருக்கலாம். அவை சாம்பல் நிறத்திலிருந்து ஆழமான பச்சை வரை நிறத்தில் வேறுபடுகின்றன. சிலநேரங்களில் அவை ஒரே நிறமாகவோ பல வண்ணங்களாகவோ இருக்கலாம். தென்னாப்பிரிக்காவில் வளரக்கூடிய சில வகை சோற்றுக் கற்றாழைகள் மரங்கள் போன்று இருக்கும்.
இது வறட்சியான சூழ்நிலையில் கடல் மட்டத்திலிருந்து 1000 அடி உயரம் வரை உள்ள மலைப்பிரதேசங்களில் வளர்கின்றது. இதன் இலைகள் தடிமனாகவும், சிறிது சிவப்பு கலந்த பச்சை நிறத்தில் 30 முதல் 60 செ.மீ நீளமாகவும், சிறிய முட்களுடனும் இருக்கும். கற்றாழையின் பூக்கள், குழாய் வடிவத்திலும், அதிகமாக மஞ்சள், இளம் சிவப்பு அல்லது சிவப்பு நிறங்களிலும், அடர்த்தியான கொத்துகளாகவும், சாதாரணமாக அல்லது கிளைகளுடன் இலையில்லாத தண்டுகளாகவும் இருக்கும். எப்பொழுதும் வாடாத பெரணி வகையைச் சார்ந்த இத்தாவரம், வெப்பமான பகுதிகளில் வயல் வரப்புகளிலும் உயரமான பகுதிகளில் வேலிகளிலும் வளரக்கூடியது. சதைப்பற்றுள்ள நீர்ச்சத்து மிக்க இக்குறுஞ்செடி பல பருவங்கள் வாழக்கூடியதாகும்.
கற்றாழையில் மூன்று வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. அவை:-
குர்குவா கற்றாழை (அலோ பார்படென்ஸ் (Aloe vera))
கேப் கற்றாழை( அலோ பெராக்ஸ் (Aloe ferox)))
சாகோட்ரின் கற்றாழை (அலோ பெர்ரி (Aloe perryi))
இவற்றில் முதல் இரண்டு வகைகள் “பார்பலோயின்” (Barbaloin) மற்றும் “அலோ எமோடின்”ஆகிய வேதிப்பொருட்களுக்காக சாகுபடி செய்யப்படுகின்றது. இவற்றின் “ஜெல்” “முசபார்” எனும் மருந்துப் பொருள் தயாரிக்கப்பட்டு வலி நிவாரணியாக உபயோகப்படுத்தப்படுகின்றது. கேப் கற்றாழை கால்நடைகளின் மருத்துவத்தில் பயன்படுகின்றது. கற்றாழையில் ஜான்சிபார் கற்றாழை, யுகான்டா கற்றாழை மற்றும் நேட்டல் கற்றாழை, ஜஃபராபாத் கற்றாழை ஆகியவை தரம் வாய்ந்தவை.
கற்றாழையில் அடங்கியுள்ள வேதிப் பொருள்கள்:-
அலாய்ன் எனும் வேதிப்பொருளானது அலோ வீரா-வில் 50 சதவிகிதமும், அலோ பெரி-யில் 25 முதல் 28 சதவிகிதமும், அலோ பெராக்ஸ்-ல் 10 சதவிகிதமும் உள்ளது. இத்தகைய அலாய்ன் எனும் வேதிப்பொருளில் தான் பார்பலின், பென்டோசைட்ஸ், ரெசின் மற்றும் சப்போனின் போன்றவை உள்ளடங்கியுள்ளன. இத்துடன் சோற்றுக் கற்றாழையின் சாற்றில் நிறமேற்றிகளான (Dyes) ஆந்த்ரோகுயினோன் மற்றும் குயினோன்கள் உள்ளன. சோற்றுக்கற்றாழை இலைகளின் கூழ்மத்திலிருந்து (Gel) பெறப்படும் திரவ பானத்தில் கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் உள்ளன. மேலும் அலோ கூழ்மத்தில் வைட்டமின் ஏ, பி1, பி2, பாலிசாக்கரைடுகள் மற்றும் யூரிக் அமிலம் போன்றவகைகளும் உள்ளன.
கற்றாழையின் பயன்கள்:-
* கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்கு ஏற்ற ஒரு மருந்துச் செடி ஆகும். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு அழகுச் சாதனங்கள் மருந்துப் பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுகின்றது. கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” எனப்படும் “கூழ்” சருமத்தின் ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்கப் பயன்படுகிறது. இதன் தேவைக்கு இயற்கை சூழ்நிலையிலிருந்து கற்றாழைச் செடிகள் சேகரிக்கப்பட்டு பக்குவப்படுத்திய பிறகு மருந்துப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றது. இருப்பினும், தரம் வாய்ந்த கற்றாழைக்கூழ், எடுப்பதற்கு தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், குர்குவா தீவுகள், இந்தியா ஆகிய நாடுகளில் வணிக ரீதியாகப் பயிர் செய்யப்படுகிறது. இதன் இதர பயன்கள்
அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை:-
* கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் “கூழ்” சருமத்திற்கு பாதுகாப்பாகக் கருதப்படுகிறது. சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. மேலும் சருமத்தின் ஈரத்தன்மையை காத்து சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது. இதனால் வணிக முறையாக அதன் “கூழி” உலகெங்கிலும் சருமப்பராமரிப்பு, சவரம் செய்வதற்கான கூழ்மங்கள், ஷாம்பூ ஆகியவற்றில் சேர்க்கப்படுகின்றது. ஆலோ வேறா மனிதர்களின் உடலுக்கு உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இதில் சில மருந்துவ குணங்கள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது. இந்தக் கூற்று அறிவியல் சார்ந்த மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளால் ஆதரிக்கப்படுகின்றது. இலைகளில் உள்ள கூழ்(ஜெல்) கொண்டு ஒரு வழு வழுப்பான களிம்பு தயாரிக்கப்படுகிறது. இது வேனிற்கட்டி போன்ற எரிகாயங்களை குணமாக்குகிறது. இவற்றைக் கொண்டு சில சிறப்புவாய்ந்த சோப்பு வகைகளும் தயாரிக்கப்படுகின்றன.
மருத்துவத்தில் கற்றாழை:-
* கற்றாழையின் மருந்து மகத்துவத்தை கி.பி. 17 ஆம் நூற்றாண்டிலேயே ஆப்பிரிக்கர்கள் கண்டறிந்து உலகத்துக்கு அறியப்படுத்தினர். கற்றாழையின் இலையில் ‘அலோயின்’, ’அலோசோன்’ போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. ‘அலோயின்’ வேதிப்பொருளின் அளவு நான்கிலிருந்து இருபத்து ஐந்து சதம் வரை இதன் இலையில் காணப்படுகிறது. சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு, இருமல், சளி, குடல்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றது. கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு வெட்டுக்காயங்கள் ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகின்றது.
* அலங்காரச் செடிகளாக கற்றாழை:-
கற்றாழை இனங்கள், அதிகமாகத் தோட்டங்களிலும் அலங்கார செடிகளாகச் சட்டிகளிலும் வளர்க்கப்படுகின்றன. கற்றாழை இன செடிகள் பல, மிகவும் அழகு நிறைந்ததாகவும் அலங்கார செடியாகவும் இருக்கும். சதைபற்றான தாவரங்களைச் சேகரிப்பவர்களுக்கு இந்த வகை தாவரம் மிகவும் மதிப்பு வாய்ந்ததாகக் காணப்படும்.
கற்றாழை பயிரிடும் முறை:-
* செடிகள், நட்ட இரண்டாவது வருடத்தில் தான் பூக்கும். செடிகளில் பூக்கள் தோன்றினாலும் மகரந்தங்கள் செயலிழந்து இருப்பதால் காய் மற்றும் விதைகள் பிடிப்பதில்லை. இதனால் கற்றாழையை பக்கக் கன்றுகள் மூலமாகத் தான் பயிர்ப் பெருக்கம் செய்ய வேண்டும். இலையில் 80 முதல் 90 சதம் நீர் உள்ளதால் விரைவாகக் கெட்டுவிடும். இதனால் அறுவடை செய்தவுடனே இலைகளைப் பக்குவப்படுத்தி அவற்றிலிருந்து “கூழ்” (Gel) பிரித்தெடுக்கப் பட வேண்டும்.
கற்றாழை இனங்கள்:-
கற்றாழை இனத்தில், சுமார் 500 வகை இனங்கள் உள்ளன. இதில் உள்ளடங்கும் இனங்களாவன:-
* ஆலோ வேறா - உடல்நல பராமரிப்பு மற்றும் உடல்நல பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது
* ஆலோ அர்போரெசென்ஸ் - உடல்நல பராமரிப்பில் பயன்படுத்தப்படுகிறது
* ஆலோ அரிஸ்டாட்டா - பந்த செடி, இழை வார் கற்றாழை
* ஆலோ டிக்கோடோமா - க்வீவர் மரம் அல்லது கோக்கெர்பூம்
* ஆலோ நீரீன்சிஸ் – இதனைப் பற்றி ஆராய்ச்சி நடந்து வருகிறது.
* ஆலோ வெரீகட்டா - கௌதாரி மார்புடைய கற்றாழை, புலி கற்றாழை எனப்படுகிறது.
* ஆலோ பார்பாடென்சிஸ் - குருத்து கற்றாழை , பொதுவான கற்றாழை , மஞ்சள் கற்றாழை , என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இது மருத்துவ குணம் நிறைந்த கற்றாழை. இது ஆலோ வேறாவின் பழைய பெயராகும்.
* ஆலோ வைல்டீ
கற்றாழையின் இதர மருத்துவப் பயன்கள்:
* சோற்றுக் கற்றாழை என்றழைக்கப்படும் குமரி ஒரு மகா மூலிகை ஆகும். எந்த வைத்திய முறையிலும் கையாளப்படும் அற்புத மூலிகை. இந்த சோற்றுக் கற்றாழை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பொடியாக மாற்றப்பட்டு மீண்டும் நம் நாட்டிற்கே இறக்குமதி செய்யப்பட்டு அல்சருக்கான அல்லோபதி மாத்திரைகளிலும், சித்த, ஆயுர்வேத, யூனானி மருந்துகளுக்கும் உபயோகிக்கப்படுகின்றன.
* கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.
* சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு இது நிகரற்ற மருந்தாகும்.
* கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது.
* கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.
* சோற்றுக் கற்றாழை முடி உதிர்வதைத் தடுப்பதோடு, சிறுநீரகம் மற்றும் மண்ணீரல் , கல்லீரல் ஆகியவற்றில் உள்ள விஷங்களை நீக்குகிறது. எயிட்ஸ் ஐயும் குணமாக்கும் வல்லமை உள்ளது. கேன்சர் என்னும் புற்று நோயை குணப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.
* சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.
* அடிபட்ட வீக்கங்கள் மேல் கற்றாழை சதையைப் பூசி வர வீக்கம் குறைந்து விடும்.
* நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு.
* கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும். கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செய்து; எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு போன்றவை மாறும்.
* கற்றாழை மடலை வதக்கி சாறு எடுத்து இருதுளி காதில் விட சீழ் வருவது நிற்கும்.
* சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.
* மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரக்கிலோ தயாரித் ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும்.
* முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
* ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.
* கற்றாழைக் களிம்பை வாதநோய் கண்ட இடத்தில் தொடர்ந்து தேய்த்து வந்தால் வாதம் சரியாகி விடும்.
* கற்றாழைச் சதையை சிறிதளவு எடுத்துக் கொண்டு அதனுடன் தேன், மஞ்சள் சேர்த்து சாப்பிட இருமல் குறையும்.
* கற்றாழைச் சோறு ஒரு துண்டுடன், ஒரு ஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்து உடன் சிறிது பனங்கற்கண்டும் சேர்த்து உண்டு வர நீரடைப்பு, நீர்க்கோவை, மலச்சிக்கல் போன்றவை அனைத்தும் குணமாகும்.
* பாலில் கற்றாழை சதைத் துண்டுகளை ஊறவைத்து, பத்து நாட்கள் ஒரு சிறிய துண்டு வீதம் சாப்பிட்டு வர ஆசனவாய் எரிச்சல், மூலச் சூடு, சொறி தீரும்.
* கற்றாழையின் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.
* தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்துக் குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது. கற்றாழை கழியைத் தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும்.
* தினமும் புதிதாக கற்றாழையின் சோற்றை எடுத்து தோலின் மீது பூசி வர வெண்படை குணமாகும்.
* பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது. முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல் மறையும்.
* கற்றாழை அல்சர் நோய்க்கு சிறந்த மருந்தாக உள்ளது.
No comments:
Post a Comment