கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Friday, February 1, 2019
வெற்றி தரும் அரிய மந்திரம்.
நான் சொல்லப்போவது மெய்ஞான வழி. ஞானிகள் அனுபவித்து வெற்றி பெற்ற வழி. பலரும் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் வழி. இதற்கு நீங்கள் வானத்தை வில்லாக வளைக்க வேண்டாம். மணலை கயிறாகத் திரிக்க வேண்டாம். வேண்டுவதெல்லாம் ஒரு தனியான இடம். அது உஙகள் அறையாக இருக்கலாம் அல்லது தெரு முனையாக இருக்கலாம். காலையோ, மாலையோ அல்லது இரவாக கூட இருக்கட்டும். அதற்கென ஒரு அரை மணி நேரம் ஒதுக்குங்கள்,
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாமே நம ஸ்வாஹா: “
இந்த மந்திரத்தை உதடு அசையாமல் நாக்கு உச்சரிக்காமல், மனதிற்குள் ஆழமாக, மிக மிக ஆழமாக 20 நிமிடம் தொடர்ச்சியாக உருவேற்றுங்கள். சில நாட்களிலேயே நல்ல பலனை காண்பீர்கள். அனுபவபூர்வமாக பெற்ற பலனை கண்டு வியந்து இதனை எல்லோரும் அறியட்டுமே என இயம்புகிறோம். மந்திரம், மாயம் என்று நம்புபவர்கள் த்ன்னம்பிக்கை இல்லாத கோழைகள் என்று பலர் கூறலாம். அவர்கட்கு பதிலை தேடி அலைய வேண்டாம். ஆற்று வெள்ளத்தில் அகப்பட்டவனுக்கு கையிற் கிடைத்த மரக்கட்டை போன்றது இந்த மந்திரம். இதனை பற்றிக்கொண்டால் கரை சேரலாம் என்று சவால் விட்டுக்கூறுகிறேன். முயன்று பாருங்கள் வெற்றி சர்வ நிச்சயம். முடியும் என்ற திடமான நம்பிக்கையுடன் இதனை நீவீர் செய்து முடியும். பெற்ற வெற்றிகளுக்கு இறைவனுக்கு நன்றி கூறுங்கள்.
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...