கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Friday, February 1, 2019
சித்தர்களை நேரில் தரிசிக்க ஒரு வழிமுறை!
நம்புவதற்கு சற்று சிரமமான ஒரு தகவல்தான் இது. நிஜத்தில் நம்முடன் இல்லாத சித்தர் பெருமக்களை நேரில் தரிசிக்கும் முறை பற்றி பல பாடல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. ஒரு வேளை இந்த பாடல்களின் பின்னால் ஏதேனும் சூட்சுமமோ அல்லது மறைபொருளோ இருக்கலாம், என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியதை இங்கே தருகிறேன்.
அந்த வகையில் அகத்தியர் அருளிய பாடலொன்றினை இன்றைய பதிவில் ப்கிர்ந்து கொள்கிறேன். இந்த பாடல் ”அகத்திய பூரண சூத்திரம்” என்ற நூலில் இருக்கிற்து.
"அதிகமாய் சித்தர்களைநீ தெரிசிக்க தானே
தியானம் ஒன்று சொல்வேன் கேளு கேளு
சிவாய நம ஓம் கிலீம் என்று செபி
வரிசிக்கும் சித்ததெல்லாம் வெளியில் காணும்
மகத்தான சித்தரப்பா வணங்கி நில்லு
பரிசிக்கும் படி அவரைக் காண்பாயப்பா
பணிந்திடுவாய் பாதத்தில் சிரசு தட்ட
கிரிசிக்கும் யார் நூலில் சார்ந்தே என்று
கேட்கில் அகத்தீசுரர் கிருபை என்னு"
- அகத்தியர் -
சித்தர்களை தரிசிப்பதற்கு தியானம் ஒன்று சொல்கிறேன் கேள் எனத் துவங்குகிறார் அகத்தியர்....
"ஓம் கிலீம் சிவாய நம" என்று நிதமும் செபித்து தியானம் செய்து வந்தால் சித்தர்களைக் காணலாம் என்றும் அப்படி அவர்கள் தோன்றும் பொது ஸ்பரிஷிக்கம்உருவத்தில் தோன்றுவார்கள் என்றும் அப்படி அவர்களை கண்டதும் தலையை அவர்கள் பாதத்தில் படும்படி வைத்து வணங்க வேண்டும் என்று கூறுகிறார். மேலும் அவர்கள் இந்த வழிமுறையை எப்படி அறிந்தாய் எனக் கேட்டால் அகத்தீசர் அருளால் அவர் நூலிலிருந்து அறிந்து கொண்டேன் என்று சொல் என்கிறார்.
ஆர்வமும்,விடாமுயற்சியும், குருவருளும் கூடியவர்கள் இதை முயற்சித்துப் பார்க்கலாமே!
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...