கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Saturday, March 16, 2019
இல்லத்தில் திருமகள் குடியேற
ஆன்மீகத்தில் சில நம்பிக்கைகள் பின்பற்றபடுவதால் இனிய வாழ்க்கை அமையும் என கூறப்படுகிறது.
1. நாள்தோறும் வீட்டின் முன் கோலம் போட வேண்டும்.
2. அதிகாலையில் நீராடி இறைவனை வழிபடுதல்.
3. சூரிய உதயத்தின் போது, சூரிய வழிபாட்டை மேற்கொள்ளுதல்.
4. தேவாரம், திருவாசகம் அல்லது தித்திக்கும் தெய்வீகப் பாடல்களில் ஏதேனும் ஒரு பாடலை தினமும் படித்தல்.
5. தங்களது வருமானத்தில் ஒரு சதவீதமாவது சமூகப் பணிகளுக்கு செலவிடுதல்.
6. அன்னதானம், வஸ்திர தானம் போன்ற தர்ம காரியங்களில் ஈடுபடுதல்.
7. வாரத்திற்கு ஒருமுறை வீட்டை கழுவியோ, மொழுகியோ சுத்தம் செய்தல் வேண்டும்.
8. வருடத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வெள்ளையடிக்க வேண்டும்.
9. வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
10. ஆலய வழிபாட்டை முறையாக மேற்கொள்ளுதல்.
இவற்றை பின்பற்றி வந்தால் மனம் மகிழும் இனிய வாழ்க்கை அமையும்.
இவைகளை கடைபிடித்தால், அஷ்ட லஷ்மிகளும் உங்கள் இல்லத்தில் குடியேறி ஐஷ்வர்யங்களை வழங்குவார்கள்
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...