Friday, June 19, 2026

ஒருவர் எந்த லக்னமாக இருந்தாலும் சரி தனித்து இருக்கும் குரு இருக்கும் இடத்தை கெடுப்பார்.

 

உதாரணத்துக்கு ஒன்றாம் வீட்டில் இருந்தால் ஏமாளியாக  இருப்பார் அவர் நிறைய பேர் ஏமாற்றுவார்கள் மொத்தத்தில் நல்ல மனிதராக தனக்கு எதுவும் செய்து கொள்ளாமல் இருப்பார் 


 இரண்டாம் வீட்டில் இருந்தால் குடும்ப வாழ்க்கை  பணம்  திருமணம் வாக்கு  சம்பந்தப்பட்ட விஷயத்தில் பாதிப்பை தருவார் 


மூன்றாவது வீட்டில் இருந்தால் வீரியம் குழந்தை பாக்கியம் சகோதரன் டாக்குமெண்ட்  முயற்சி விஷயத்தில் பாதிப்பு 


 நான்காம் வீட்டில் இருந்தால் தாயார் வண்டி வாகனம் வீடு சுகம் மேல்படிப்பு சார்ந்த விஷயத்தில் பாதிப்பு


 ஐந்தாம் வீட்டில் இருந்தால் பூர்வீகம் குழந்தை தாமதம்  அதிர்ஷ்டம் குல தெய்வ அனுகிரகம் சார்ந்த விஷயத்தில் பாதிப்பு


 ஆறாம் வீட்டில் இருந்தால் வழக்கு வேலை வயிற்று வலி கடன் எதிரிகள் தொந்தரவு. உண்டு


 ஏழாம் வீட்டில் இருந்தால் திருமணம் தாமதம் நண்பர்கள் பார்ட்னர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் பாதிப்பு சமுதாயத்தில் கெட்ட பெயர் உண்டு


 எட்டாம் வீட்டில் இருந்தால் தீராத வழக்கு தீராத கடன் பூர்வீகத்தை விட்டு  வெளியே செல்வது தீராத அவமானங்கள் தீராதமான வேதனை  உண்டு


 ஒன்பதாம் வீட்டில் குரு இருந்தால் பொண்டாட்டி புள்ளைங்க தகப்பனார் தாயார் உறவினார்  நம் வாழ்கின்ற அனைத்து விஷயத்தில் பாக்கியத்தை சந்தோஷம்  தடைப்படும் பூர்வீக சம்பந்தப்பட்ட ஜாதகரை, ஓட விடும் 


 பத்தாம் வீட்டில் இருந்தால் தொழிலில் மிகப்பெரிய பிரச்சனையும் தொழில் சார்ந்த அனைத்து தடை தாமதம் சாப்பாட்டுக்கு கஷ்டங்கள் உருவாக்கும்.


 பதினோராம்  வீட்டில் இருந்தால் ஆசைகள்  நம்முடைய எதிர்பார்ப்பு லாபகரமாக வர கூடிய அனைத்தும்   பிரச்சனையை தரும்  அல்லது கவலையே தரும்.


 பன்னிரண்டாம் இடத்தில் இருந்தால் சிறைவாழ்க்கை ஆன்மீகத்தில்  சுகபோகங்களில்  நிம்மதியாக தூக்கம் வராமல் இருப்பது இவை அனைத்தும் பிரச்சினையாக இருக்கும் இந்த பிறவி வேண்டாம் என்ற அளவுக்கு வாழ்க்கை வெறுப்பார்.


  குரு தசாபுத்தி அந்தரம் நடக்கும் காலகட்டங்களில் இவை சார்ந்த விஷயங்கள் எதிர்பார்க்கலாம் பாதிப்பை தரும் கவனமாக இருப்பது நல்லது.


ஜாதகத்தில் குரு தனித்து இருந்தால் பொதுவாக அந்த வீட்டையும், அதைச் சார்ந்த பலன்களையும் பலவீனப்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.


 

No comments: