துஷ்ட தேவதைகளை எலுமிச்சம் பழத்தில் ஆகர்சித்து ஸ்தம்பனம் செய்யும் முறை...
மந்திரம்:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹம் கும் டம் பிரம்ம ஆகர்ஷாய நமசிவாய நங்க ரங்க ரங்க மங்க ரங்க சிங்ஙரங்க மங்க ரங்கயங்க ரங்க ரங்க ஆகாச ஆகாச ஆவேசாய ஆவேசாய சீக்ரம் சீக்ரம் ஆகர்ஷாய ஆகர்ஷாய வா வா இரி இரி ஹம் ஹும் ஹும் டம் டம் டம் பிரம்ம ஆகர்ஷாய நமசிவாய {இன்னாரை உபத்திரிக்கின்ற துஷ்டப் பூத பிரேத பிசாசுகள் ஸ்தம்பிக்க ஸ்தம்பிக்க ஸ்வாக....
மந்திரத்தை பிரயோகம் பண்ணும் முறை:
இந்த மந்திரத்தை அனைத்து விதமான துஷ்ட தேவதைகள் ஸ்தம்பன முறைக்கும் பயன்படுத்தலாம்.
குறிப்பாக இதில் ஒரு வழிமுறையை சொல்கிறேன்:
துஷ்ட தேவதை பாதிக்கப்பட்டவர்களின் அருகில் அமர்ந்து கொண்டு ஒரு சுத்தமான எலுமிச்சம் பழத்தை கையில் எடுத்துக்கொண்டு சிவனையும் பிரம்மாவையும் மந்திரம் சொல்லி தியானிக்க வேண்டும். பின்பு அந்த எலுமிச்சம் பழத்தில் மேலே சொன்ன மந்திரத்தை 21 தடவை ஜபித்து அவர்களின் உடல் தலையை சுற்றி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அந்த எலுமிச்சம் பழத்தில் செம்பு அல்லது உருக்கு ஆணி ஒன்றை குத்த வேண்டும். பின்பு அந்த எலுமிச்சம் பழத்தை பாதிக்கப்பட்டவர்களின் உச்சம் தலையில் வைத்துக்கொண்டு ஆணியின் ஒரு பகுதியில் உச்சம் தலையில் இருந்து அவர்களின் தலைமுடியை சுற்ற வேண்டும். அவ்வாறு எலுமிச்சம் பழத்தில் குத்தி வைத்த ஆணியில் முடியை சுத்தி வைத்துக் கொண்டு எலுமிச்சம் பழத்தையும் ஆணியையும் உச்சம் தலையில் வைத்தவாறே மேல் சொன்ன மந்திரத்தை 108 முதல் 1008 தடவைக்குள் (தெய்வ அனுக்கிரகம் மந்திரப் பவர் உள்ளவர்களுக்கு 108 தடவை போதும்) ஜெபிக்க வேண்டும். பின்பு எலுமிச்சம் பழத்தோடு சேர்த்து ஆணியில் சுற்றி வைத்த முடியையும் சேர்த்து வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு தலைமுடி பிரிந்து போகாத அளவிற்கு எலுமிச்சம் பழத்தில் ஆணியை செலுத்தி வைத்து அந்த எலுமிச்சம் பழத்தை ஒரு சிறிய சிவப்பு பட்டத்து துணியில் பொதிந்து கட்டி பாழடைந்த கிணற்றிலோ அல்லது ஓடும் தண்ணீரிலோ கொண்டு சென்று போட வேண்டும். அல்லது சுடுகாட்டல் கொண்டு சென்று புதைத்து வைக்க வேண்டும்...
No comments:
Post a Comment