Friday, May 24, 2019

100 வயது வரை வாழ்வதற்கான பதினைந்து குறிப்புகள் இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து படியுங்கள்.



1.மகிழம்பூக்களை நீரில் கொதிக்கவைத்து, பாலில் கலந்து சாப்பிட, தளர்ந்த உடலும், தசைகள் வலுவாகி, உடல் முறுக்கேறி, பொலிவாகும். உடலில் தெம்பும், முகத்தில் தெளிவும் உண்டாகும்.

2.வெந்தயம்,ஓமம்,கருஞ்சீரகம் தனித்தனியே தூளாக்கி, ஒரு தேக்கரண்டி அளவில் சேர்த்து, நீரில் கொதிக்கவைத்து சாப்பிட, உடலில் உள்ள கெட்டவை எல்லாம், வியர்வை,சிறுநீர் மற்றும் கழிவுகள் மூலம் வெளியேறும். மேலும், சருமம் பொலிவாகும், கண்பார்வை, இதயம் சீராகும். உடல் சோர்வின்றி இயங்கும். 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட, வியாதிகள் தீரும்.

3.கடுக்காய்த்தோல், நெல்லிக்காய் வற்றல் மற்றும் பச்சரிசியுடன் மஞ்சள் பொடி சிறிது மிளகுத்தூள் கலந்து, தண்ணீரில் ஊறவைத்து அரைத்தபின், இந்தக்கலவையை உடம்பில் தடவி குளித்துவர, அடிக்கடி வியர்வையடைவது விலகி, வேர்க்குருவும் அணுகாது.

4.மலச்சிக்கலால் காலை வேளைகளில் அவதிப்படுவோர், கடுக்காய்த் தோலை அல்லது கடுக்காய் தூளை, சிறிது வெந்நீரில் கலக்கி குடிக்க, மலம் இளகி, உடனே வெளியேறும்.

5.உடலின் வியாதி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, முளை கட்டிய தானியங்கள், கடலைப்பருப்பு சுண்டல், எள் அடை, கீரை கடைசல் உணவில் அடிக்கடி சேர்த்துவர, உடல் வளம் தரும் துத்தநாகம், மக்னீசிய உள்ளிட்ட தாதுக்கள் உடலில் சரிவிகிதத்தில் கலந்து, உடல்நலம் காக்கும்.

6.ஆலைச்சர்க்கரை, அயோடின் சேர்த்த உப்பை அறவே தவிர்க்க, உடல் நலம் சீராகும். பனை வெல்லம், அல்லது தேன் கலந்து பானங்கள் பருகலாம், பனங்கற்கண்டும், உகந்ததேயாகும். மனிதனின் கண் பார்வைக்கு தொடர்புடையது உப்பு, எனவே, உடலுக்கு நலம்பயக்கும் பாறை உப்பு என அழைக்கப்படும் இந்துப்பை உணவில் பயன்படுத்திவர, கண் பார்வை இயல்பாகும்.

7.வீடுகளில் கொசுக்களை விரட்ட, வேப்பிலை,நொச்சியிலை,துளசி இலைகளை காயவைத்து, ஒரு சட்டியில் வைத்து நெருப்பு மூட்டி, படுக்கையறையில் மாலை வேளைகளில் வைத்துவர, கொசுக்கள் ஒழியும். இத்துடன் சிறிது சந்தனம் சேர்க்க, நல்ல நறுமணம் கமழும்.

8.கோடைக்காலங்களில் வெளியில் செல்ல நேர்கையில், வெயிலில், அடிக்கடி தண்ணீர் தாகம் எடுத்து கண்ட பானங்களைப்பருகி உடல் நலம் கெடுவதைத் தவிர்க்க, வீட்டிலிருந்து வெளியில் புறப்படுமுன், ஒரு டம்ளர் நன்கு கடைந்த மோரில், சிறிது இந்துப்பு இட்டு, குடித்துவிட்டு வெளியில் கிளம்ப, கடும் வெயிலில் அலைந்தாலும், உடலுக்கு தாகம் ஏற்படாது, உடல் அலுப்பும் தோன்றாது,

9.கண்களின் வீக்கம்,கண் எரிச்சல், சூடு, மற்றும் மங்கிய கண்பார்வைக்குறைபாடுகள் நீங்க, நந்தியாவட்டை மலர்களை இரவில் படுக்குமுன், கண்களில் சிறு பருத்தித்துணியால் நெகிழ்வாகக்கட்டிக்கொண்டு உறங்கிவர, கண்களின் வீக்கம், பார்வைக்குறைபாடு விரைவில் சரியாகும்.

10.தினமும் காலை வேளைகளில் நடை பயிற்சி செய்வது, உடலுக்கு பலம் சேர்க்கும், உடலின் நச்சுக்கள், வியர்வை வழியே வெளியேறும். பல்லாயிரம் ரூபாய்கள் செலவு செய்து வீட்டில் வாங்கிவைத்திருக்கும் நடைப்பயிற்சி இயந்திரங்கள் மூலம் செயற்கை நடைப்பயிற்சி செய்வதைவிட, பைசா செலவின்றி, வெளியில், சுத்தமான காற்றில் காலாற நடந்தபடியே, செய்யும் நடைப்பயிற்சியே மேலானது.

உடலுக்கு அதிகம் நலமும் தருவது. நடைப்பயிற்சி இயந்திரங்கள் வெறுமனே, உடலின் கலோரிகளை மட்டுமே குறைக்க முயலும், உடலின் மொத்த இயக்கத்தையும் சீராக்கி, உடல் சமநிலையைப் பேண, காலாற நடந்து மேற்கொள்ளும் நடைப்பயிற்சியே, துணைபுரியும்.🥀🍂

11.மாதமொருமுறை ஆயில் புல்லிங் எனும் "நல்லெண்ணை" மூலம் காலைவேளைகளில், வாய் கொப்புளித்துவர, சுவாசபாதிப்புகள்,வாய்ப்புண்கள், வாய் துர்நாற்றம் மற்றும் தொண்டை சதை அழற்சி வியாதிகள் யாவும் தீரும். உடலுக்கு நாள் முழுவதும் புத்துணர்ச்சி தரும்.மேலும், நாட்டுச்செக்கு எண்ணை உபயோகிக்க, நலன்கள் அதிகமாகும்.

12.வாரமொருமுறை, மொபைல்,தொலைகாட்சி மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களுக்கு விடுமுறை அளித்துவிட்டு, குடும்ப உறுப்பினர்களுடன், வீடுகளை தூய்மைசெய்தல், உற்சாகமாக உரையாடுதல், மனைவிக்கு சமையலில் உதவி செய்தல், நம் கைப்பட, குழந்தைகளின் துணிகளை சலவை செய்தல், மாலையில் அருகில் உள்ள இயற்கை அமைதி தவழும் இடங்களுக்கு [ அவை அதிகம் பக்தர்கள் வராத ஒரு கோவிலாகவோ அல்லது ஆளரவமற்ற ஒரு கிராமத்து சாலையாகக்கூட இருக்கலாம் ] ஒரு சிறிய வெளிப்புற உலா சென்றுவர, மனமும் உடலும் ஒருங்கே உற்சாகமாகும்.

அன்றைய தினம், சாட் வகை நொறுக்குத்தீனிகள் தவிர்த்து, வீட்டில் முளைகட்டிய தானியங்களால் செய்த சுண்டலோ, வடை உள்ளிட்ட சிறுதானியங்களில் செய்த தின்பண்டங்களை எடுத்து சென்றோ சாப்பிடலாம்.

13.குடும்ப உறுப்பினர் குரலுக்கு மதிப்பு கொடுங்கள், அவர்கள் கூறுவதை பொறுமையாக முழுவதும் காது கொடுத்து கேளுங்கள், சமயங்களில் உங்களிடம் கிடைக்கும் தீர்வைவிட, தகவல்களை உங்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற எண்ணமே, அவர்களுக்கு அதிக விருப்பமாக இருக்கக்கூடும். எனவே, அவர்களின் உணர்வுகளை மதித்து நடந்து, அவர்களின் தன்னம்பிக்கை வளர, நீங்கள் ஆதரவளிக்கிறீர்கள் என்று அவர்கள் உத்வேகம் கொள்வர்.

14.உடற்பயிற்சி, யோகா என்று பலவகைகளில் உடல் நலன் சீராக்க முயல்வதைவிட, தினமும் காலை வேளைகளில், பத்து பதினைந்து முறை "தோப்புக்கரணம்" போட்டுவர, அகமும் புறமும் பொலிவாகும். உடல் நலமும் சீராகி, மனதில் நச்சு எண்ணங்கள் விலகி, எண்ணங்களில் வலிமையையும், எடுத்த செயல்களில் விரைந்து முடிக்க ஆற்றலும் உண்டாகும்.

15.பேருந்து, இரயில்களில் பயணம் செய்யும்போது, வயதானோர், குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, எழுந்து இடம் கொடுங்கள்.வாகனங்களில் செல்லும்போது, வயதானோர் நடந்துசெல்கையில் அவர்களை ஏற்றிச்சென்று, வாய்ப்பிருந்தால் அவர்கள் சேருமிடம் கொண்டுசேருங்கள்.🌺🌸