Thursday, May 23, 2019

பெண்களே எச்சரிக்கை..! இந்த அறிகுறிகள் இருந்தால் பித்தப்பை கற்களால் ஆபத்து..!



கிட்னியில் ஏற்படுகின்ற கற்களுக்கு அடுத்தபடியாகத் தொல்லை தருவது இந்த பித்தப்பைக் கற்கள்தான். இவை பெரும்பாலும் பெண்களுக்கே ஏற்படுவதால் பெண்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். சாதாரணமாக திரவ நிலையில் உள்ள பித்த நீரில் சிலருக்க மட்டும்தான் கற்கள் உருவாகின்றன.
ஏன் இந்தப் பித்தப்பைக் கற்கள் உருவாகின்றன தெரியுமா? பித்தப்பையானது பித்த நீரின் அடர்த்தியை அதிகமாக்கும்போது அதில் உள்ள பித்த உப்புக்கள் அதன் அடியில் படியும் . அவை சிறிது சிறிதாக வளர்ந்து கல்லாக உருவெடுக்கும்.
ஆண்களை விட பெண்களுக்கே இதன் தாக்கம் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தப் பித்தப்பைக் கற்கள் உருவாகுவதற்கான காரணங்கள் என்ன தெரியுமா? உடல்பருமன் உணவு மாற்றங்கள்.பித்தநீரின் அளவுக்கதிகமான சுரப்பு.பரம்பரைக் கோளாறு.மாச்சத்து அதிகமாக உட்கொள்ளல்.
ஹோர்மோன் கோளாறு.கருத்தடை மாத்திரைகளின் பயன்பாடு.கர்ப்பகால கவனமின்மை.விரதம் இருத்தல்.முறையான உடற் பயிற்சியின்மை.பித்தப்பைக் கல்லிற்கான அறிகுறிகள் என்னவெல்லாம் இருக்கின்றது தெரியுமா? சாப்பிட்ட பின் செரிமானமாகாமல் இருத்தல்.தொப்பளுக்கு மேலே வலி ஏற்படுதல்.
வாந்தி, குமட்டல் போன்ற அசாதாரண நிலமைகள். இவ்வாறான அறிகுறிகள் அடிக்கடி தென்பட்டால் கண்டிப்பாக வைத்தியர் ஒருவரை அணுகிக் கொள்ளுங்கள். அதுவே உங்கள் உடல்நலத்திற்கு நல்லது.