Thursday, May 23, 2019

நகம் கடித்தால் புற்று நோய் வரும் அபாயம்.



மனிதர்களின் அசாதாரண பழக்கவழக்கங்களில் ஒன்று. இது ஒரு வகை நோயாகவே கருதப்படுகிறது. மனஅழுத்தம், மனமுரண், குழப்பம், தாழ்வுமனப்பான்மை, stress, ஒத்துப் போக முடியாமை, இக்கட்டான மனநிலை போன்றதான பலவித உள்ளியல் காரணிகளால் இப்பழக்கம் ஏற்படுவதாகவே ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை வயது பேதமின்றி பலரும் நகம் கடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளார்கள். நகம் கடிக்கும் பழக்கும் பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் தொடங்கி விடுகிறது. பருவவயதில் அனேகமானவர்கள் இப்பழக்கத்திலிருந்து விடுபட்டு விடுகிறார்கள். குறிப்பிட்ட சிலரால் இப்பழக்கத்திலிருந்து விடுபட முடிவதில்லை. அவர்கள் வயது வந்த பின்னரும் இப்பழக்கத்தைத் தொடர்கிறார்கள்.

அனேகமானோர் தம்மை மறந்த நிலையிலேயே நகங்களைக் கடிக்கிறார்கள். பலர் தமது இந்தச் செயற்பாட்டினால் திருப்தியின்மையை அடைந்தாலும், இந்தப் பழக்கத்திலிருந்து மீள முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

பெரும்பாலான நபர்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் இது மிகவும் மோசமான ஒன்றாகும். நகம் கடிப்பதால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இதனை ஆரம்பத்திலேயே நிறுத்தி விடுவது நல்லது.

* சில சமயங்களில் நகங்களை கடிப்பவர்கள் அதை விழுங்கவும் வாய்ப்புகள் உண்டு. இப்படி விழுங்குவதால் வயிற்றில் செரிமானம்
ஆகாமல் அப்படியே தங்கி பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி விடும்.

* சிறுவர்கள் அடிக்கடி நகம் கடிக்கும் பட்சத்தில், செரிமானம் ஆகாத உணவுத் துகள்கள் குடல்வால் பகுதியில் சேகரமாகும். இதனால் அப்பன்டிசைடிஸ் எனப்படும் குடல்வால் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.

* எப்போதும் வாயில் கையை வைத்தவாறு இருப்பதால், அப்பகுதியில் ரத்தக்கசிவு மற்றும் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கும்.

* தொடர்ந்து பற்களால் நகங்களை கடிக்கும்போது அது பற்களின் எனாமலை பாதித்து விடும். பற்களில் பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் ஊடுருவி மேல் தாடையையும் கீழ் தாடையையும் முழுதாக மூட முடியாத நிலை கூட ஏற்படும்.

* நகம், பாக்டீரியா வளரும் இடம், சல்மனெல்லா, இ.கோலி, பாக்டீரியாக்கள் நகம், விரல் நுனிகளில் இருக்கும் அழுக்குகளில் இருக்கின்றன. இதனால் நகங்களைக் கடிக்கும்போது அவை வாய் வழியே உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி எளிதாய் நோய் தொற்றிக் கொள்ளும்.

* நகம் கடிக்கும் பழக்கம் அடிக்கடி இருந்தால், புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.