Friday, May 24, 2019

மோருடன் எதை கலந்து குடித்தால் எந்த நோய் குணமாகும், தெரியுமா உங்களுக்கு?



* கறிவேப்பிலை இலைகளை மோர் சேர்த்து அருந்தி வர உடல் எடை குறையும்.

* மோர் மற்றும் கேரட் போட்டு அரைத்து குடித்து வர உடல் இளைக்கும்.

* ஓமத்தை மோரில் கலந்து குடிக்க அஜீரணம் குறையும்.

* கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு பிழிந்து மோருடன் கலந்து சாப்பிட்டால் எந்த விஷக் கடியாக இருந்தாலும் விஷம் இறங்கும்.

* புளியாரைக் கீரை, வெந்தயம் அரைத்து மோரில் சாப்பிட்டால் வாய்ப்புண் குறையும்.

* பெருங்காயத்தை பொரித்து தூள் செய்து அரை தேக்கரண்டி மோரில் கலந்து சாப்பிட்டு வர வயிற்று வலி குணமாகும்.

* 200 மி. லி மோரில், வறுத்த சீரகம் மற்றும் சிறிது இந்துப்பு கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்.

* சீரகபொடியை மோரில் கலந்து குடிக்க வயிற்று கடுப்பு குறையும்.

* முள்ளங்கி சாறுடன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி வர வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் புள்ளி குறையும்.

* கீழாநெல்லி இலையை அரைத்து மோரில் கலந்து காலை, மாலை இருவேளை சாப்பிட மஞ்சள் காலை குறையும்.

* எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் சேர்த்திக்கொள்ள பித்த சூடு தணியும்.

* வில்வ இலைகளை பொடி செய்து,பசு மோரில் ஒரு ஸ்பூன் கலந்து அருந்தி வந்தால் இரத்தம் சுத்திகரிக்கபட்டு, தோல் நோய் குறையும்.

* மோரில் சிறிதளவு வெங்காயச்சாறு விட்டு குடிக்க இருமல் குறையும்.