Monday, May 27, 2019

புடலங்காய்

புடலங்காய் ஆங்கிலத்தில் gourd family என்று சொல்வார்கள். அதாவது சுரைக்காய், பாகற்காய், புடலங்காய், வெள்ளரிக்காய், ஸ்குவாஷ் ஆகிய காய்கறிகள் அனைத்தும் இந்த குடும்பத்துக்குள் தான் வருகிறது. உலகம் முழுவதுமே பயன்படுத்தக் கூடிய காய்கறிக் குடும்பம் தான் இது. தென்மேற்கு ஆசியப் பகுதிகளில் உள்ள நாடுகளில் இருந்து தான் புடலங்காய் கண்டுபிடிக்கப்பட்டது.அதாவது இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இந்தோனேசியா, மலேசியா, ஸ்ரீலங்கா மற்றும் சீனா ஆகுிய நாடுகளில் தான் இந்த வகை காய்கறிகள் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

வடிவம்

இந்த வகை காய்கறிகள் யாவும் தங்களுடைய ஒழுங்கமைப்பற்ற வடிவங்களின் மூலமாகத் தான் இந்த பெயர்கள் பெற்றுள்ளது. குறிப்பாக, இந்த புடலங்காயில் மிக அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

ஊட்டச்சத்துக்கள்

புடலங்காய்க்கு என்னென்ன ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன என்று பார்ப்போம்.புடலங்காயில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளது. அதோடு கார்போ ஹைட்ரேட், மினரல்கள், இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு ஆகியவை நிறைந்திருக்கின்றன.இவை எல்லாவற்றையும் விட புடலங்காயில் மிக அதிகமாக நீர்ச்சத்து இருக்கிறது.

நன்மைகள்

ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்மலேரியாவை நீக்கும்மஞ்சள் காமாலைக்கு தீர்வு செய்யும்இதய ஆரோக்கியம்மலச்சிக்கல் தீர்க்கும்உடல் எடையை நிர்வகிக்கும் தன்மை கொண்டதுபொடுகைப் போக்கும்உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும்பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உறுதியாக வைத்திருக்கும்.தலை முடி வேர்க்கால் சம்பந்தப்பட்ட பிரச்னையைத் தீர்க்கும்.

ரத்த சர்க்கரை

புடலங்காய் டைப் 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். புடலங்காயில் மிகக் குறைவான கலோரிகளைக் கொண்டது. குறிப்பாக, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உடல் பருமன் ஏற்படும். அந்த பருமனைக் குறைக்கும் தன்மை புடலங்காய்க்கு உண்டு.