நவகிரகங்களில் அதிக வலுவான கிரகம் எது என்று பார்த்தால் ராகு பகவானே ஆவார்... அதே போல் ஒரு ஜாதகருக்கு 9 தசைகளிலும் மிகவும் மறக்க முடியாத ஒரு தசை இருக்க முடியும் என்றால் அதுவும் ராகு தசை தான்...ராகு போக காரகன்..இயற்கை பாப கிரகம்..ஆனால் உங்களுக்கு யோகம் தரும் அமைப்பில் இருந்து விட்டால் உச்சாணி கொம்பில் ஏற்றி வைத்து அழகு பார்ப்பார்..கெடுக்க வேண்டிய அமைப்பில் இருந்தால் நடு தெருவுக்கு கொண்டு வரவும் தயங்க மாட்டார்..
ராகு இல்லாததை இருப்பது போல் காட்டுவதில் வல்லவர்..கெடுக்கும் அமைப்பில் இருக்கும் போது தன் தசா புத்தி காலங்களில் ஜாதகரை பேராசைகாரனாக்கி பெரு நட்டத்தை கொடுப்பார்.அதே சமயம் நன்மை தரும் அமைப்பில் இருந்தால் நிச்சயம் முதலில் சில சிக்கல்கள் கொடுத்து பின்பு உச்சத்துக்கே கொண்டு சென்று அழகு பார்ப்பார்..உங்களுக்கு ராகு தசை நடக்கும் போது அதன் அமைப்பு ஜாதக ரீதியாக எப்படி உள்ளது என்பதை பார்த்து ஆராய்ந்து நடந்து கொள்ளுங்கள்..ஏனெனில் மனிதன் அதிக தவறுகளை செய்ய கூடிய காலம் ராகு தசையில் தான்..தவறை உணர்ந்து ஆன்மிகம் பக்கம் செல்வது அதன் பின் வரும் குரு தசையில்... நன்றி
கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...