Tuesday, October 15, 2019

மருத்துவ ஜோதிடம்: கேது தரும் நோய்கள்:



ஜோதிடம் என்பது திருமணம்,வேலை, நல்ல காலம்,குழந்தை பாக்கியம் போன்ற சுப விஷயங்களுக்கு தான் பார்க்க படுகிறது என்றாலும் நாம் நோய்,மரணம்,கடன்,அவஸ்தை,அவமானம் போன்ற தீய விஷயங்களையும் அறிந்து கொள்ள பயன்படவே செய்கிறது.அந்த வகையில் நவகிரகங்கள் அனைத்திற்கும் அதன் காரக ஆதிபத்திய ரீதியிலும் கிரக சேர்க்கை மற்றும் பார்வை அடிப்படையிலும் நோய்களை கொடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே நான் முயற்சிப்பது விழிப்புணர்வு தானே தவிர பயமுறுத்த அல்ல.ஜோதிடத்தில் முதன்மையான பலம் கொண்டவர் கேது.அவருக்கு சில நிலைகளில் ஜாதகருக்கு நோய்களை கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.என்னென்ன நோய்கள் என்பதை பார்ப்போம்.

கேது கண்ணுக்கு தெரியாத கிருமிகள் அனைத்திற்கும் காரகம் வகிப்பவர்.எனவே உடலில் கிருமிகள் ,பூச்சிகள் மூலம் ஏற்படும் நோய்கள் மற்றும் நோய் தொற்றுக்கள் அனைத்திற்கும் கேதுவே காரணம்.அதேபோல் விஷ ஜந்துக்கள் மூலம் ஏற்படும் நோய்கள், உடலில் ஏற்படும் துர்நாற்றம் நீண்ட நாள் நோய் ஏற்பட்டு உடல் மெலிந்து காணப்படும் விஷயங்களுக்கு கேது தான் காரகர்.அதேபோல் கடைநிலையில் மருத்துவர்களே கைவிட்ட நிலையில் வரும் அனைத்து மர்ம நோய்களையும் கேதுவே வழங்குவார்.மன அழுத்தம் தன்னை தானே அழித்து கொள்ளுதல் போன்ற விஷயங்களுக்கும் கேதுவே காரணமாவார்.

கேது பாதகாதிபதி தொடர்பு,ஆறாம் மற்றும் எட்டாம் அதிபதி தொடர்பு அல்லது பகை கிரக சேர்க்கை பெற்றால் நோய் கொடுப்பார்.சற்று கவனமாக இருக்க வேண்டும் அவரது தசா புத்தி காலத்தில்.ஏனெனில் கண்ணுக்கு தெரியாத நோய்களை அல்லவா தருவார்.

எனவே அவரவர் சுய ஜாதகத்தில் கேதுவின் நிலையை அதன் தசா புத்தி வரும் போது ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.

நாம் இங்கே இதை விழிப்புணர்வுக்காகவே இந்த பதிவை போடுகிறோம்.யாரையும் பயமுறுத்தும் நோக்கம் இல்லை. எதிர்மறையாக அமைப்புகள் இருந்தாலும் ஜாதகருக்கு நேர்மறையாக எடுத்து சொல்லி நல்ல முறையில் அவரை காப்பாற்றுவதே ஒரு ஜோதிடருக்கு அழகு.ஆயினும் எல்லா கிரகங்களும் தன்னுடைய தசா புத்தி காலத்தில் நன்மை செய்வது இல்லை என்பது நாம் அறிந்த உண்மை.

Prevention is better than cure என்னும் ஆங்கில பழமொழி சொல்வதை போல வருமுன் காப்பது சிறந்தது என்ற அடிப்படையில் பதிவிட்டுள்ளோம். பிற கிரகங்கள் தரும் நோய்கள் குறித்தும் நாம் விரிவாக பார்ப்போம்.

.......நன்றி.........