கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Sunday, October 20, 2019
சூரியனை ஏன் வணங்க வேண்டும்?*
காலையில் எழுந்ததும் சூரியனை பார்த்து வழிபடுவது நன்மையளிக்கும். விடியலை வா வா என்று அழைத்து கொண்டு வருபவர் சூரியன். அனைவருக்கும் முதலில் வணக்கம் சொல்லி எழுப்புவதும் சூரியன் தான். நவகிரகங்களில் முதலில் இருப்பவர் சூரியன்.
இன்னும் பலவிதமாக சூரியனை பற்றி சொல்லலாம். அப்படிப்பட்ட சூரியனை அனைவரும் காலையில் வணங்குவது ஏன்?
மனிதர்கள் எல்லோரும் சாதாரணமானவர்கள், இறக்க கூடியவர்கள், நோய் நொடியில் விழக்கூடியவர்கள், தவறு செய்யக்கூடியவர்கள், மிகப் பெரிய ஆபத்துகளுக்கு ஆளாகக்கூடியவர்கள்.
சூரியனால் மனிதனுக்கு பெரும் உதவி கிடைத்துக் கொண்டிருக்கிறது. சூரியன் ஒரு மகத்தான சக்தி. சந்திரன் இன்னொரு சக்தி. நட்சத்திரங்கள், கிரகங்கள் எல்லாமும் தனித்தனியே சக்தி வாய்ந்தவை. அவை பூமியோடு நெருங்கிய சம்பந்தமுடையவை. நல்லது செய்கின்ற கிரகங்களையும், சூரியனையும், சந்திரனையும் வழிபடுவதில் தவறொன்றுமில்லை.
சக்தியை அலட்சியம் செய்கிறவர் கடவுளை அலட்சியம் செய்வதுபோல் அர்த்தம். கடவுளின் பேச்சாக, குணமாக, உருவமாக, வடிவமாக சூரிய, சந்திர கிரகங்கள் நம் முன்னே தோன்றி இருக்கின்றன.
கடவுளை கண்ணால் கண்டறிய முடியாது. பேசிப் புரிந்துகொள்ள முடியாது. அதனால் பார்க்க முடிகிற கடவுளாக நினைத்து சூரியனை வழிபடுகின்றனர்.
சூரியனை வணங்குவதால் நமது உடலிற்கும், மனதிற்கும்
புத்துணர்வு மற்றும் மன அமைதி கிடைக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும். காலையில் ஒரு 5 நிமிடம் மன அமைதியுடன் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் சூரியனை பார்த்து தியானம் செய்தால் போதும். அதன் பலனை உணர முடியும்.
*ஓம் சூர்ய தேவாய நம...*
*🙏🌸நோய்கள் நீக்கும் பானு சப்தமி விரதம் - இன்று ஞாயிறு சூரிய வழிபாடு செய்ய மறக்காதீங்க🌸🙏*
*நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். உலகிற்கு ஒளி கொடுக்கும் சூரியனை வழிபட்டால் நோய்கள் நீங்கும் எதிரிகள் தொல்லை ஒளியும். சூரியனுக்கு உகந்த தினம் ஞாயிறு. அதுவும் சப்தமி திதியும், ஞாயிற்றுக் கிழமையும் ஒன்றாக வரும் நாள் பானு சப்தமி என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. வெகு அபூர்வமாக வரும் பானு சப்தமி தினம் ஆயிரம் சூரிய கிரகணத்துக்கு ஒப்பானது. இன்று அக்டோபர் 20ஆம் பானு சப்தமி தினம் தவறாமல் சூரிய வழிபாடு செய்ய வேண்டிய நாள். பானு சப்தமி இன்று நாம் செய்யும் பூஜைகள், மந்திரங்கள், ஹோமங்கள், தானங்கள் போன்றவை சாதாரண நாட்களில் செய்வதால் ஏற்படும் புண்ணியத்தைக் காட்டிலும் சுமார் ஆயிரம் மடங்கு அதிக புண்ணியத்தைத் தரக்கூடியவை.*
*இன்று விரதமிருந்து சூரியனை வழிபட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.*
*உலகத்தின் உயிராகச் சூரியதேவன் விளங்குகிறார். வேதகாலம் முதலே சூரியனைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. ரிக்வேதம் சூரியனை மூன்றுவித அக்னியில் ஒன்றாக விவரிக்கிறது. யஜுர்வேதம் சகல உலகங்களையும் ஒளிபெறச் செய்பவன் என்று போற்றுகிறது. அதர்வண வேதம் சூரியனை வழிபட்டவர்கள் இதயநோயிலிருந்து விடுபடுவர் என்று வழிகாட்டுகிறது.*
*ஞாயிறு இன்று காலை புண்ணிய நதிகளில் குளிப்பதும், சூரிய நமஸ்காரம் செய்வதும், காயத்ரி மந்திரம் சொல்வதும், ஆதித்ய ஹ்ருதயம் போன்ற சூரிய ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும், கோதுமை மாவால் செய்த இனிப்பு பண்டங்களை தருவதும், செப்பு பாத்திரத்தில் வைத்து கோதுமையை தானம் செய்வதும் சூரியனின் அருளைப் பெற்றுத் தரும். அந்நாளில் மறக்காமல் புண்ணிய நதிகளில் நீராடி சூரிய நமஸ்காரம் செய்ய .கண்களில் உள்ள கோளாறுகள் விலகும். உயர்ந்த பதவிகள் கிடைக்கும்.*
*சனியும் சூரியனும்*
*பெற்றோர்களை* *வழிபட்ட சனிபகவான்*
*சூரியனின் புதல்வரான சனீஸ்வர மூர்த்தி தம் பெற்றோர்களுக்குப் பாத பூஜை ஆற்றும் திருநாளே ஞாயிறு, சப்தமியும் கூடும் நாள். தினமும் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பிரபஞ்சத்தை வலம் வரும் சூரியத் தேரை ஓட்டுகின்ற அருணன் ஞாயிறும் சப்தமியும் கூடும் பானுசப்தமி நாளில் அருணோதய சக்திகளைச் சூரிய சக்தித் திரவியங்களாக நிரவுகின்றார். சனீஸ்வர மூர்த்தி ஈஸ்வரப் பட்டம் பெற்றவுடன், சர்வேஸ்வரனை வணங்கியவுடன், தமக்கு ஆசிகள் அளித்த பெற்றோர்களான சாயா தேவி சமேத சூர்ய மூர்த்தியைச் சாஷ்டங்கமாக வீழ்ந்து வணங்கிப் பூஜிக்கின்ற திதியே பானு சப்தமித் திதி.*
*ராமர் வழிபட்ட பானு சப்தமி*
*ராமர் செய்த சூரிய பூஜை*
*சூரிய குலத்தைச் சேர்ந்த ஸ்ரீராமர், பானு சப்தமி நாட்களில் ஸ்ரீமன் சூரிய நாராயண விஷ்ணு ஸ்வாமிக்கான பூஜைகளைச் சூரிய மண்டலத்தில் விஸ்தாரமாக நடத்திப் பூஜிக்கின்றார். ஸ்ரீராமர் பானு சப்தமி நாட்களில், 108 சிவலிங்க மூர்த்திகளுக்கு பூஜைகளை நடத்தி ஸ்ரீமத்சூரிய நாராயண மூர்த்தியின் திருஅருளைப் பூவுலகிற்கு பெற்றுத் தருகிறார். ஸ்ரீராமர் பானு சப்தமி நாளில் சிவ பூஜை ஆற்றிய தலமே கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் 108 சிவாலயம் ஆகும். இங்கு உள்ள சூரிய மூர்த்தி மிகவும் சக்தி வாய்ந்தவர். பானு சுதாகரர் என்ற நாமம் தாங்கி தினமும் 108 சிவலிங்க பூஜைகளை ஆற்றி, நவகிரகங்களுக்கு எல்லாம் அதிபதியான பேற்றைப் பெற்ற மூர்த்த வடிவுகளுள் ஒருவர்.*
*பானு சப்தமியின் சிறப்பு*
*முன்னோர்கள் ஆசி*
*காலையில் எழுந்து நதியில் நீராடி நித்திய பூஜை மற்றும் அபிஷேகம் செய்தால் நன்மைகள் பல வந்துசேரும். இன்று அக்டோபர் 20ஆம் பானு சப்தமி தினம் தவறாமல் சூரிய வழிபாடு செய்ய வேண்டிய நாள். இந்த நாளில் பித்ரு தர்ப்பணம் செய்வது சூரிய கிரகணம் முடிந்த பிறகு செய்யும் தர்ப்பணத்துக்கு ஒப்பானது. இந்த தினத்தில் பித்ரு தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். நதி தீரத்தில் நீராடி சூரிய வழிபாடு செய்தல், தானம் செய்தல் ஆகியவை பல்வேறு நலன்களைக் கொண்டு வரும். மற்ற தினங்களில் செய்யும் தான தர்மங்களை விடவும் இந்த தினத்தில் செய்யும் தானத்துக்கு ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும்...*
*பகிர்தல் ஒரு மிகச் சிறந்த பண்பாடு மட்டுமல்ல வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்*
*அனைவருக்கும் பகிருங்கள்*
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...