Tuesday, October 8, 2019

மகா_சமாதி_அடைந்தார்_சாய்பாபா



★1918-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பாபா மகா சமாதி அடைந்தார்.★

★அன்று விஜயதசமி தினமாகும். ஏகாதசி திதியும் இருந்ததால் மிக, மிக உயர்வான நாளாக கருதப்படுகிறது★

★பிற்பகல் 2.30 மணி பாகோஜி பாயை அழைத்தார். எப்போதும் தனக்குக் குடை பிடித்து வருபவரும், தோல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தவருமான அவர் தோளில் பாபா சாய்ந்து கொண்டார்.★

★பிறகு பாகோஜிக்கு மட்டும் கேட்கும்படி, “பூட்டியின் புதிய கட்டிடத்துக்கு என்னை அழைத்து செல்லுங்கள். அங்கு நான் சுகமாக இருப்பேன். எல்லாரையும் சுகமாக வைத்துக் கொள்வேன்” என்றார். அடுத்த வினாடி பாபா அப்படியே மூச்சைப் பிரித்து மகாசமாதி அடைந்து விட்டார்.★

★இரண்டாண்டுகளுக்கு முன்பே அதாவது 1916-ம் ஆண்டு பாபா தன் பக்தர்கள் மத்தியில் பேசுகையில், “நான் இன்னும் 2 ஆண்டுகளில் விஜயதசமி நாளில் எனது எல்லையைக் கடப்பேன்” என்றார்.★

★எல்லாரையும் சுகமாக வைத்துக் கொள்வேன்”★
★என்று சொன்ன பாபா இன்று வரை நம்மை பத்திரமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்.★

★இன்று விஜயதசமி பாபாவின் 101 வது மகா சமாதி தினம்.இன்று மதியம் 2 மணி முதல் 2.30 மணி வரை நம் வீட்டில் 9 விளக்குகளை ஏற்றி வைப்பதன் மூலம் பாபாவை நம் வீட்டிற்கு அழைக்கலாம்.★

#ஓம்_சாயி_நமோ_நமஹ
#ஸ்ரீ_சாயி_நமோ_நமஹ
#ஜெய்_ஜெய்_சாயி_நமோ_நமஹ
#சத்குரு_சாயி_நமோ_நமஹ🙏