Sunday, July 8, 2018

கொத்து கொத்தா முடி கொட்டுதா? தடுக்க இதோ சுலபமான வழிமுறை.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவஸ்தைப்படும் பிரச்சனைகளில் ஒன்று முடி கொட்டுதல். இளவயதிலேயே முடி அதிகளவு கொட்டுவதால் வழுக்கை விழுகிறது, இதனால் மன ரீதியாகவும் பாதிப்படைகிறார்கள். இதற்காக எத்தனையோ எண்ணெய்யை வாங்கித் தேய்த்தும் பலனில்லாமல் போகிறது. இதற்கு வீட்டிலேயே மிக எளிமையான முறையில் எண்ணெய் தயாரிக்கலாம், தேவையான பொருட்கள் வெங்காயம் கற்றாழை தேன் ஆலிவ் ஆயில் செய்முறை முதலில் வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும், இதில் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் ஆலிவ் ஆயில் கலந்து கொண்டு, கடைசியாக கற்றாழை ஜெல்லை சேர்க்கவும். தலைக்கு குளிக்கும் முன் அரை மணிநேரத்திற்கு முன்பாக இதனை தடவி நன்கு மசாஜ் செய்யவும், வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்து வரவும். ஒரு தடவை தயார் செய்து வைத்த கலவையை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம், ஒருவாரம் வரை கெட்டுப் போகாது.

No comments: