கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Monday, July 9, 2018
முகத்தில் உள்ள தழும்புகளைப் போக்கும் சில எளிய வழிமுறைகள்..!
முகத்தில் உள்ள தழும்புகளைப்
சமையல் செய்யும் போது எண்ணெய் முகத்தில் பட்டாலோ அல்லது குக்கரை தூக்கும் போது கைகளை சுட்டுக் கொண்டாலோ, முதலில் அவை காயமாகி, பின் அவை தழும்புகளாக சருமத்தில் தங்கிவிடும். பருக்களால் பலருக்கு முகத்தில் கருமையான தழும்புகள் படிந்து, முகத்தின் அழகே பாழாகி இருக்கும்.
இத்தகைய தழும்புகளானது நிரந்தரம் அல்ல. அவற்றை ஒருசில பொருட்கள் மற்றும் பராமரிப்புக்களின் மூலம் போக்கிவிடலாம்.
அதிலும் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே எளிமையாக நீக்கிவிடலாம். தழும்பை போக்க சில இயற்கை வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன அவற்றைப் பின்பற்றி தழும்புகளைப் போக்கி, அழகுடன் திகழுங்கள்.
* பொதுவாக கற்றாழை ஜெல் அனைத்து வகையான சரும பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வைக் கொடுக்கும்.
அதிலும் தினமும் இதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் உள்ள தழும்புகள் மறைவதோடு, மற்ற பிரச்சனைகளும் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.
* பேக்கிங் பவுடரை நீரில் கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை வட்ட வடிவில் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், விரைவில் தழும்புகளானது மறைந்துவிடும்.
* தேன் உடலுக்கு மட்டும் நன்மையைக் கொடுப்பதுடன், சருமத்திற்கும் நன்மையை வழங்க வல்லது. அதற்கு அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை தான் காரணம். எனவே தினமும் தேன் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வாருங்கள்.
* மஞ்சள் தூளை நீரில் கலந்து, அதனை சருமத்தில் தினமும் தடவி ஊற வந்தால், அது சருமத்தில் உள்ள தழும்புகளை போக்குவதுடன், மற்ற சரும பிரச்சனைகளையும் போக்கிவிடும்.
* பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் இரண்டு முறை மசாஜ் செய்து வந்தால், சீக்கிரம் தழும்புகளானது மறையும்.
*அனைவருக்குமே எலுமிச்சை தழும்புகளை மறைக்க உதவும் பொருட்களில் ஒன்று என்பது தெரியும்.
ஆனால் அதனை தக்காளி ஜூஸ் உடன் சேர்த்து முகத்தில் தடவி ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவினால், அவை இரண்டிலும் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால் அது தழும்புகளை மறைத்துவிடும்.
Subscribe to:
Post Comments (Atom)
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...
No comments:
Post a Comment