Tuesday, July 24, 2018

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா? குளிக்கும்போது உத்தம திசைகளான வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம். மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் நோவு வரும்). தினமும் கங்கா ஸ்நானம் செய்யமுடியும். குளிக்கும் முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிரவிரலால் 'ஓம்' என்று தியானம் செய்து எழுதுங்கள். அந்த நீர் அப்போது முதல் கங்கை நீராக மாறிவிடும். ஒரு நிமிட தியானத்தில் உள்ளிருக்கும் தெய்வத்திற்கு அபிஷேகம் பண்ணிய பலன் கிடைக்கிறது. அக்னி எப்போதும் மேல் நோக்கியே பயணிக்கும். உடலுக்குள் இருக்கும் அக்னி கீழிருந்து மேல் ஏறுவதுதான் சரி. தண்ணீரை கால் முதல் மேல் நோக்கி நனைத்து வந்து கடைசியில் தலையில் ஊற்றிக் கொள்ளவேண்டும். தலை முதல் கால் வரை உள்ள பின் பாகத்தை "பிரஷ்டம்" என்பர். அதில் நம் முதுகு பாகம் தான் மிகப்பெரியது. அங்கு தான் அக்னியின் வீச்சம் கூடுதல் வேகமாக பரவும். ஆதலால், குளித்து முடித்தவுடன், முதலில் முதுகு பாகத்தைதான் துவட்ட வேண்டும். . குளிக்கும் நேரம். மௌனத்தை கடைபிடிக்கலாம், அல்லது மனதளவில் தெரிந்த ஜெபத்தை செய்யலாம். . நீர் நிலைகள், குளம், ஆறு, கடல் இவைகளில் எல்லா தேவதைகளும், பெரியவர்களும் அரூபமாக ஸ்நானம் செய்வதாக கூறுகிறார்கள். நாரம் என்கிற தண்ணீரில் நாராயணன் வாசம் செய்வதாகவும் சொல்வார்கள். ஆதலால், ஓடி சென்று அதில் குதிக்காமல், கரையில் நின்று, சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்தபின், நீர் கலங்காமல், ஒரு இலை நீரில் விழுகிற வேகத்தில் மெதுவாக இறங்கி சென்று குளிக்கவேண்டும். நீரில் காரி உமிழ்வதோ, துப்புவதோ கூடாது. நீரின்றி ஒரு உயிரும் இல்லை. நீரை விரயம் செய்ய கடன் அதிகரிக்கும். உப்பு நீர் ஸ்நானம் திருஷ்டி தோஷங்களை அறுக்கும். ஆண்கள் புதன், சனி கிழமைகளிலும் பெண்கள் செவ்வாய் வெள்ளி கிழமைகளிலும் எண்ணை தேய்த்து குளிப்பது நல்லது. .... நன்றி.

No comments: