Saturday, July 7, 2018

முள்ளங்கி கீரை ஆரோக்கியத்தை தருமா?

உணவு உண்ணும் பழக்கத்தில் எப்பொழுதும் கவனம் தேவை என்பதை மறவாமல் சாப்பிடும் உணவால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்வதே போலவே அதனால் ஏற்படும் தீமைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். முள்ளங்கி கீரையில் இருக்கு வைட்டமின் எ , வைட்டமின் பி, வைட்டமின் சி இவை அனைத்தும் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதுதான், ஆனால் இந்த கீரையை அதிகம் உணவில் உட்கொள்ள கூடாது சிலருக்கு இதனால் பிரச்சனைகள் எழ வாய்ப்புண்டு. வயிற்று கோளாறுகள் அல்லது இதய கோளாறுகள் ஏற்படலாம். அதனால் குறைந்த அளவிலே எடுத்து கொள்ளுங்கள். நீர் அடைப்பு தொல்லையா முள்ளங்கி கீரையை சுத்தம் செய்து ஒரு நாளைக்கு இரு வேளை சாப்பிட சில நாட்களில் பிரச்சனை இருக்காது. அனைத்து கீரை வகைகளும் கண்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுப்பது போலவே இந்த முள்ளங்கி கீரை கண்களுக்கு நல்ல பார்வை திறனை கொடுக்கும். இதில் இருக்கும் புரத சத்துக்கள், கால்சியம் எலும்புகளுக்கு உறுதியை கொடுக்கும் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட செய்யும்.

No comments: