Sunday, July 8, 2018

இந்து உப்பு

உப்பு இல்லாமல் உணவுகள் இருக்க முடியாது என்பது உண்மை. இந்தியாவில் உப்புத் தொழில் மிகத்தொன்மையானது. இந்து உப்பு (Rock Salt) தான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும் உகந்தது என்று பல்வேறு மருத்துவ நூல்கள் சொல்கின்றன. இந்துப்பு என்பது ஆங்கில மொழியாக்கத்தில் “ ராக் சால்ட்“ அதாவது பாறை உப்பு என பொருள்படும். இவை முதலில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி ஆனது. பின் இமய மலையின் அடிவாரப் பகுதியில் இயற்கை சீற்றத்தின் விளைவாக நிலத்தின் அடிப்பகுதியில் உப்பு படிமங்கள் புவிஅழுத்தம் காரணமாக பாறைகளாக மாறின. அதை சுரங்கம் தோண்டி உப்பு பாறைகளை வெட்டி எடுத்ததினால், அதுவும் இமய மலைப் பகுதிகளின் அருகில் (இந்தியாவிலேயே) எடுத்ததினால் ஹிமாலயா உப்பு அல்லது இந்திய உப்பு என்று அழைக்கப்பட்டு பின் பெயர் மருவியோ அல்லது மாற்றப் பட்டோ, அது இந்துப்பு ஆனது. இந்து உப்பு-ல்(Rock salt) உள்ள ஊட்டச்சத்துக்கள்(Nutrients): மங்கலான பழுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்துப்பில், கால்சியம்(Calcium), பொட்டாசியம்(Potassium), மக்னீசியம்(Magnesium), சல்பர் & புளோரைடு(Sulphur & Fluoride), அயோடின்(Iodine) போன்ற தாதுக்களுடன் சோடியம் குளோரைடு(Sodium Chloride) அதிக அளவில் உள்ளது. இந்து உப்பு-பின் (Rock salt) நன்மைகள்: இந்துப்பை உணவில் தினமும் உபயோகித்துவந்தால், வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் வியாதிகளின் தன்மைகள் நீங்கி, உடல் வலுவாகும். மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க, இந்துப்பு மருந்தாக பயன்படுகிறது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், அனைவருக்கும் இது சிறந்த உப்பு ஆகும். எளிதில் செரிமானமாகும் திறனுள்ளது. மனச்சோர்வு நீக்கும் தன்மைமிக்கது. தைராய்டு பிரச்னைக்கு மருந்தாகும். இந்துப்பு கலந்த இளஞ்சூடான வெந்நீரைக்கொண்டு வாய் கொப்புளித்துவர, வாய் துர்நாற்றம் நீங்கும், பல் வலிகள், ஈறு வீக்கம் போன்ற வாய் சம்பந்தமான வியாதிகள் தீரும்.

No comments: