கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Tuesday, October 2, 2018
இரு புருவங்களுக்கு மத்தியில் அழுத்தம் கொடுப்பதால் இவ்வளவு நன்மைகளா?
தினமும் செய்யும்போது நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். இது ரத்த நாளங்களை தூண்டுகிறது. சரும நோய்களுக்கு நல்ல பலனைத் தருகிறது.அக்குப்ரஷர் எனப்படும் உடலில் கொடுக்கப்படும் அழுத்தம் சீன மருத்துவமுறை.
அவர்களின் பழங்கால மருத்துவ சிகிச்சைகளில் மிகவும் முக்கியமானது இந்த அக்குபிரஷர் சிகிச்சை.உடலில் இருக்கும் குறிப்பிட்ட புள்ளியில் அழுத்தம் தரப்பட்டு தூண்டப்படுவதால் நமது உடல், தம்மை தாமே குணப்படுத்தும். உடலில் ஒவ்வொரு இடத்திலும் ஒரு மர்மபுள்ளிகள் உண்டு.கண்டுபிடித்து அழுத்தம் தருவதால் பலவித நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. அந்த மாதிரியான அழுத்தப் புள்ளிகளைப் பற்றி இங்கு காணலாம்.
அக்குப்பிரஷரின் நன்மைகள் :
அக்குபிரஷர் செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது. வலிகள் குறைகின்றது. மன அழுத்தம் மற்றும் உடல் வலிகளிலிருந்து நிவாரணம் தருகிறது. அக்குபிரஷரினால் எல்லா வியாதியை முற்றிலும் குணப்படுத்த முடியாது.
ஆனால் அதன் தீவிரத்தை குறைக்கும்போது நோய்கள் விரைவில் குணமாகும். நமது தலையில் இருக்கும் மிக முக்கியமான புள்ளிகளும், அங்கு தரப்படும் அழுத்தத்தால் வரும் நன்மைகளையும் பார்க்கலாம்.
கண்களுக்கு இடையில் :
புருவங்களுக்கு மத்தியில் இருக்கும் இடத்தை மூன்றாவது கண் என்று சொல்வார்கள். அந்த இடத்தில் இருக்கும் புள்ளி கண், மூக்கு, புருவம் போன்றவற்றிற்கு மையப் புள்ளியாக விளங்குகிறது.
செய்யும் முறை :
முதல் முறையில் ஆள்காட்டி விரலால் மூன்றாவது கண் இடத்தை 60 நொடிகளுக்கு அழுத்த வேண்டும்.
இரண்டாவது முறையில் ஆள்காட்டி விரலால் இரு புருவங்களுக்கு மத்தியில்அழுத்தி வட்ட வடிவில் (விரலை எடுக்காமல்) அழுத்தம் கொடுங்கள்.
நன்மைகள் :
உங்களுக்கு மைக்ரைன் இருந்தால் குணமாகும். தினமும் செய்யும்போது நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். இது ரத்த நாளங்களை தூண்டுகிறது. சரும நோய்களுக்கு நல்ல பலனைத் தருகிறது.
இரு கண்களின் ஓரத்தில், அதாவது மூக்கின் தண்டு ஆரம்பிக்கும் பகுதியில் அழுத்தம் தர வேண்டும். இதற்கு பேம்பூ ப்ரஷர் என்று பெயர். உங்களின் ஆட்காட்டி விரலால் கண் மற்றும் மூக்கு ஆரம்பிக்கும் இடத்தில் அழுத்தம் கொடுங்கள். ஒரு நிமிடம் வரை தர வேண்டும். அல்லது லேசாக வட்ட வடிவில் அங்கு மசாஜ் செய்ய வேண்டும்.
தலையின் பின்பகுதியில் :
தலையில் அடிப்பாகத்தில் இருக்கும் இந்த இரு புள்ளிகளுக்கு நினைவுத்திறனின் வாசல் என்று பெயர். ஞாபக சக்தியை அதிகப்படுத்துகிறது. முதலில் பின்னந்தலையின் அடிப்பகுதியிலுள்ள இந்த இரு புள்ளிகளையும் விரல் நுனிகளால் அழுத்தம் தர வேண்டும். பின்னர் விரல் முட்டிகளால் அந்த புள்ளிகளில் மசாஜ் செய்ய வேண்டும்.
நன்மைகள் :
தீராத தலைவலி குணமாகும். தலையில் நீர் கோர்த்திருந்தால் அதற்கு நல்ல பலன் தரும். தலை சுற்றல், கழுத்தில் விறைப்புத் தன்மை, கழுத்து வலி போன்றவை குணமாகும்.
அனைவருக்கும் பகிருங்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...
No comments:
Post a Comment