Thursday, October 4, 2018

குருபகவான் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

குரு பிரகஸ்பதி என்பவர் தேவர்களின் குருவும்,நவக்கிரகங்களில் ஒருவரும் ஆவார்.இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரஸ முனிவரின் மகனாவார்.இவருக்கு தாரை என்ற மனைவியும் உண்டு.இவர் நான்கு வகையான வேதங்களையும் ,அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர். எண்ணற்ற யாகங்களைச் செய்து தேவர்களின் குருவாக மாறினார்.அத்துடன் வசிஷ்டேஸ்வரரை வணங்கி நவக்கிரகங்களில் வியாழனாக அந்தஸ்தினைப் பெற்றார். அதனால் வியாழகிரகம் ராஜ கிரகம் என்று அழைக்கப்படுகிறது. இவருக்கு அந்தணன் ,அமைச்சன், அரசன், ஆசான்,ஆண்டாளப்பான்,குரு,சிகிண்டிசன், சீவன்,சுரகுரு,தாராபதி,தெய்வமந்திரி, நற்கோள்,பிரகஸ்பதி,பீதகன்,பொன்னன், மறையோன், வேதன்,வேந்தன் என பதினெட்டு பெயர்கள் உள்ளன. குருபகவானின் பரிபூரண அருள் வேண்டுபவர்கள் எல்லா சிவன் கோவில்களிலும் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை மஞ்சள் ஆடை அணிவித்து கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து வணங்கி வழிபடலாம். " ஓம் பிம் சிவய வசி குரு தேவாய நம " என்ற மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லிவர தடைகள் நீங்கும். குருவின் அம்சங்கள் *********************** 😊 கிழமை :- வியாழன் 😊 தேதிகள் :- 3, 12, 21, 30 😊 நட்சத்திரங்கள் :- புனர்பூசம், விசாகம், பூரட்டாதி 😊 நிறம் :- மஞ்சள் 😊 ரத்தினம் :- கனக புஷ்பராகம் 😊 தானியம் :- கொண்டைக்கடலை 😊 உலோகம் :- தங்கம் 😊 ஆடை :- தூய மஞ்சள் 😊 ராசி :- தனுசு, மீனம் 😊 உச்ச ராசி :- கடகம் 😊 நீச்ச ராசி :- மகரம் #ஸ்லோகம் " இணக்கமாம் மகிழ்ச்சி இன்பம் இயலுறும் புத்தி யுக்தி வணக்கமாம் கல்வி மேன்மை வருந்தனம் மகிழ்ச்சி புண்யம் துணக்கமாம் பந்துவாகித் துலங்கிடச் சுகங்கள் நல்கும் கணக்கனாம் எந்தை பாதம் கழலடி சென்னி வைப்பாம்." வியாழக்கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் குருபகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

No comments: