Tuesday, October 2, 2018

ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தின் பொருள் என்ன?

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரா என்னும் சொல் இறைவனின் சக்தியைக் குறிக்கின்றது; கிருஷ்ண, ராம என்னும் சொற்கள் இறைவனைக் குறிக்கின்றன. கிருஷ்ண என்றாலும் ராம என்றாலும் “மிகவுயர்ந்த ஆனந்தம்” என்று பொருள். இறைவனின் மிகவுயர்ந்த ஆனந்த சக்தியான ஹரா, விளிச்சொல்லாகும்போது ஹரே என்று மாற்றமடைகின்றது. ஹரே, கிருஷ்ண, ராம என்னும் இந்த மூன்று வார்த்தைகள் மஹா மந்திரத்தின் தெய்வீக விதைகளாக அமைகின்றன. இம்மஹா மந்திரத்தை உச்சரித்தல், கட்டுண்ட ஆத்மாவிற்குப் பாதுகாப்பு அளிக்கும்படி இறைவனுக்கும் அவரது அந்தரங்க சக்தியான ஹராவிற்கும் விடுக்கப்படும் வேண்டுகோளாகும். தாயை எதிர்பார்த்த குழந்தையின் உண்மையான அழுகையைப் போன்றது இந்த உச்சாடனம். உன்னத தந்தையான ஹரியின் அல்லது கிருஷ்ணரின் கருணையைப் பெறுவதற்கு, அன்னை ஹரா பக்தனுக்கு உதவுகிறாள். இதனால் இந்த மந்திரத்தை நேர்மையுடன் உச்சரிப்பவர்களுக்கு பகவான் தன்னை வெளிப்படுத்துகிறார்.

No comments: