Thursday, September 12, 2019

என்றுமே_வற்றாத_செல்வம்_உங்கள் #வீட்டில்_உண்டாக_நீங்கள்_செய்ய #வேண்டியது_இது_மட்டும்_தான்!


செல்வத்தின் அதிபதி தான் குபேரன் என சாஸ்திரங்கள் நமக்கு கூறுகின்றன.

அந்த மகா குபேரனின் அருள் நமக்கு இருக்கும் பட்சத்தில் தாராளமான செல்வ வளமும், முக்கியமாக பணவரவும், அதிக செல்வச் சேர்க்கையும் நமக்கு உண்டாகும் என சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் நமக்கும் வற்றாத செல்வத்தை பெற நீங்கள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பரிகாரத்தினை செய்தாலே அதுவே போதும். தற்போது அவை என்ன என்பதை நாம் பார்ப்போம்.

#ஆண்களுக்கு_பரிகாரம்_என்ன?

நீங்கள் ஆண்களாக இருக்கும் பட்சத்தில் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து, சுத்தமாக குளித்து முடித்து விட்டு உங்களின் வலது உள்ளங்கையில் சிறிது அளவு சந்தனம் அல்லது மஞ்சள் பூசிக்கொள்ள வேண்டும்.

அதன் பின் நீங்கள் 1 ருபாய் அல்லது 5 ருபாய் நாணயத்தை எடுத்து உங்கள் உள்ளங்கையில் வைத்துக் கொண்டு வைத்து அதனுடன் சிறிது வெற்றிவேர் வைத்துக் கொள்ள வேண்டும்.

உள்ளங்கையை உங்கள் வாய்க்கருகே கொண்டு சென்று “ஓம் குபேர லட்சுமியாய நம” என்கிற அதீத மந்திரத்தை குபேரனை மனதில் நன்கு தியானித்தவாறே உங்களால் முடிந்த எண்ணிக்கையில் அதாவது 100 இல்லை 200 துதித்துவர வேண்டும்.

இவ்வாறு நீங்கள் பூஜை செய்து முடித்த உடன் கையில் வைத்திருந்த அந்த சில்லறை நாணயத்தை உங்களின் அன்றைய தின வரவு செலவு பயன்பாட்டிற்கு வைத்துக் கொள்ள வேண்டும்.

மறுநாள் இந்த பூஜைக்கு ஒரு புது நாணயத்தையும் புது வெற்றிவேரின் சிறு சிறு துண்டு எடுத்து உள்ளங்கையில் வைத்துக்கொண்டு மேற்கண்ட மந்திரத்தை உச்சாடணம் செய்ய வேண்டும்.

இந்த பூஜை முறையை தினமும் நாம் அதிகாலை 5.30 மணிக்குள்ளாக செய்வதால் மிக விரைவில் உங்களுக்கு பலன் அளிக்கக்கூடும்.

தொடர்ந்து நாணயங்கள் வைத்து குபேர லட்சுமி மந்திரம் துதித்து பூஜை செய்பவர்களுக்கு கண்டிப்பாக வெளியில் பணம் ஈட்டுவதற்கான பணிகளில் ஈடுபடும் போது அதிக அளவு நல்ல தனவரவு உண்டாகும்.

#பெண்களுக்கு_செல்வம்
#செழிக்க_வழிகள்?

பெண்களாகிய உங்களுக்கு வற்றாத பண வரவும், தங்க நகை வரவும் ஏற்பட விரும்பும் பெண்கள் எப்போதும் தங்கள் கைகளில் மருதாணி அல்லது நல்ல மஞ்சள் பூசி கொள்வதால் அவர்களுக்கு பணப்பற்றாக்குறை ஏற்படாமல் நல்ல செல்வம் மகளான மகாலட்சுமியின் முழு அருள் புரிவாள் என்பது நிச்சியம்.

சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவும், தங்க நகை வரவும் ஏற்படும். தாங்கள் சேமிக்கின்ற தொகை சிறிய அளவாக இருந்தாலும் கண்டிப்பாக தேவையற்ற விரயங்கள் ஏற்படாமல் செல்வ சேர்க்கை மேலும் அதிகரிக்கும்.

இந்த முறைகளை ஆண்களும், பெண்களும் உங்கள் வீட்டில் கடைபிடித்தால் பணம் எப்போதும் குறையாத நிலையை உண்டாக்கும். பல்வேறு வகைகளில் பொருளீட்டும் வாய்ப்புகள் மேலும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஓம் குபேர லட்சுமியாய நம” என்கிற அதீத மந்திரத்தை குபேரனை மனதில் எண்ணி தியானித்து செல்வ வளம் பெறுக வாழ்த்துக்கள்!

இந்த மந்திரங்கள் மற்றும் மேலே சொன்ன விசியங்களை முறையாக கடைபிடித்தால் மட்டும் போதும் 9 வாரத்தில் உங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுவதை நீங்களே உணரலாம்.

அது வீடு வாகும் யோகமாக இருக்கலாம், வாகனம் அல்லது புது நகைகள் வாங்குவதாக இருக்கலாம். உங்கள் நீண்ட நாள் பண தேவியும் பூர்த்தி ஆகும்.

நீங்களும் மாகா சொரூபமான லட்சுமியின் ஆசீர்வாதங்களைப் பெற விரும்பினால், கீழேயுள்ள கருத்துப் பிரிவில் “ஓம் குபேர லட்சுமியாய நம” என்று எழுத மறக்காதீர்கள்.

#வாழ்க_வளமுடன்...