Saturday, December 29, 2018

#தீட்டு_என்றால்_என்ன...?

🌻 "தீட்டு" என்கிற சொல் புரிந்துகொள்ளப்படாமலேயே காலங்காலமாக பெரும்பாலானோரால் கையாளப்பட்டு வருகிறது. 🌻 இது குறித்த உண்மையான அர்த்தமுள்ள பார்வை அனைவருக்கும் தேவை. 🌻 இறைவழிபாட்டில் விலக்க வேண்டிய தீட்டுக்கள் குறித்து இந்தப் பதிவு தெளிவுபடுத்தும் என நம்பலாம். 🌻 தீட்டு என்பது என்ன? 🌻 இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது! 🌻 தீட்டு என்பது, தீண்டத் தகாததைத் தீண்டுவது. 🌻 தீட்டுடன் இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான் என்பார்கள். 🌻 தீட்டுப் பட்டால் துடைத்து விடும், தீட்டுக் கூடாது என்பார்கள். 🔻ஆண், பெண் கலந்தாலும் தீட்டு, 🔻குழந்தைகள் பிறந்தாலும் தீட்டு, 🔻பெண்கள் மாதவிடாயும் தீட்டு, 🔻இறந்தாலும் தீட்டு! இப்படிப் பார்த்தால், தீட்டில் உருவான நமது உடலே ஒரு தீட்டு தானே! அதனால் தான் இறந்த பிறகு உடலைப் பிணம் என்று பெயர் வைத்துப் பிணத்தைத் தொட்டால் தீட்டு என்பார்கள். 🔘 தீட்டுடைய இந்த உடலை வைத்து, எப்படிக் கடவுளை வழிபட முடியும்? 🔻சிந்தித்துப் பாருங்கள். 🔻இதுவல்ல உண்மையான தீட்டு. 🔻இவை நாம் சுகாதாரமாய் இருப்பதற்கு, இறைவனை பெயரைச் சொல்லி ஏற்படுத்திய ஒழுக்கங்கள். அப்பொழுதுதான் பயபக்தியோடு சுத்தமாக இருப்போம் என்பதற்காகத்தான் இவற்றைச் சொன்னார்கள். 🤗 தீட்டு என்பது வேறு அவை..., ✴காமம், ✴குரோதம், ✴லோபம், ✴மதம், ✴மாற்சரியம் என்னும் பஞ்சமா பாதங்கள்! #காமத்_தீட்டு: 🔺காமம் என்பது ஆசை. நாம் எந்தப்பொருள் மீதாகிலும் ஆசை வைத்தால், அந்தப் பொருளின் நினைவாகவே ஆகிவிடுகின்றோம். 🔺நம் உள்ளத்தில் எந்த நேரமும், அந்தப் பொருள் மீதே ஞாபகமாக இருப்போம். 🔺அதற்காகவே முயற்சிச் செய்வதும், அலைவதுமாக இருப்போம். 🔺அந்தப் பொருள் கிடைத்து விட்டால், மனத்தில் சந்தோசம் உண்டாகும். 🔺இல்லையென்றால் மனத்தில் சதா வேதனை ஏற்படும். 🔺இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. 🔺இதனால் தான், ஆசைக்கு அடிமை ஆகாதே, அதை தீண்டாதே என்றார்கள். #குரோதத்_தீட்டு: 🔺குரோதம் என்பது கோபம். 🔺யாராக இருந்தாலும் கோபம் வந்துவிட்டால் முன்னே பின்னே பாராமல், தாய், தந்தையர், சகோதரர்கள், உறவினர்கள் என்றும் சிந்திக்காமல், கொடூரமாகப் பேசுவதும், கேவலமான நிலைக்கு ஆளாவதும் நேர்கின்றன. 🔺சிலர் கொலை செய்துவிட்டு ஆயுள் பூராகவும் துன்பம் அனுபவிப்பார்கள். 🔺சிலர் தூக்கில் இடப்படுவார்கள். கோபத்தைப்போல் கொடியது உலகத்தில் வேறு எதுவும் இல்லை. 🔺கோபத்தால் அழிந்தவர்கள் கோடான கோடிப்பேர், கோபம் எழும் பொழுது நம் உடலில் உள்ள எத்தனையோ ஜீவ அணுக்கள் செத்து மடிகின்றன. 🔺ஆயுளும் குறைந்து விடுகிறது. 🔺கோபத்தால் உணர்ச்சி வசப்பட்டவர்கள் எதையுமே செய்யத் துணிவார்கள். இவர்களால் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. 🔺இதனால் தான் கோபத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பர். 🔺குரோதம் என்னும் கோபமே இரண்டாவது தீட்டு. #லோபத்_தீட்டு: 🔺லோபம் என்பது சுயநலம். 🔺பிறரைப் பற்றிச் சிந்திக்காமலும், 🔺இரக்கம் என்பதே இல்லாமலும், 🔺சுயநலத்துடன் பொருள்களைச் சேர்த்துவைத்து அழகு பார்ப்பதும், 🔺கஞ்சத்தனமும், 🔺எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும், 🔺தீய வழியில் பொருள்களைச் சம்பாதிக்கக் கூடிய நோக்கமும், 🔺வஞ்சனை செய்து, பிறர் பொருளை அபகரித்துத் தானே வாழ நினைக்கும் குணமும், 🔺எப்பொழுதும் தன் பொருள்களைப் பற்றுடன் பாதுகாப்பது ஆகிய எல்லாம் சுயநல வேகமே. 🔺இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. 🔺அதனால் தான் சுயநலத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பார்கள். 🔺இது லோபம் என்னும் மூன்றாவது தீட்டு. #மதத்_தீட்டு: 🔺மதம் என்பது கர்வம் (ஆணவம்). 🔺ஒருவரையும் மதிக்காது மனதையோடு இருப்பது இது. 🔺எதையும் தானே சாதிக்க முடியும் என்ற கர்வமும் இது. 🔺தான் என்னும் அகந்தையால் திமிர் பிடித்து அலைவதும் இது. 🔺ஆணவ நெறியால் யாவரையும் துன்பப் படுத்தித் தான் மகிழ்ச்சி அடைவதும் இது. 🔺இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா? 🔺இதனால் தான் கர்வத்திற்கு அடிமை ஆகாதே என்பர். அதைத் தீண்டாதே என்பர். 🔺கர்வமாகிய மதமே நான்காவது தீட்டு. #மாற்சரியத்_தீட்டு: 🔺மாற்சரியம் என்பது பொறாமை. 🔺பிறர் வாழ்வதைக் கண்டு பொறுக்க முடியாமல் வேதனைப்படுவது இது. 🔺எந்த நேரமும் நாம் நல்லபடியில்லையே என்று தன்னையே நொந்து கொள்வதும் இது. 🔺எல்லாரும் சுகமாக இருக்கின்றார்களே, இவர்கள் எப்பொழுது கஷ்டப் படுவார்கள், எப்பொழுது செத்துப் போவார்கள் என்பதும் இது. 🔺தான் மட்டும் சுகமாக இருக்கவேண்டும் சாகக் கூடாது என்பதே இவர்கள் எண்ணம். 🔺பிறரைப் பார்க்கும் பொழுது தீய எண்ணங்களுடன் பெருமூச்சு விடுவார்கள். 🔺தாழ்வு மனப்பான்மையோடு, யாரைப் பார்த்தாலும் சகிக்க முடியாமல் எரிச்சலோடு இருப்பார்கள். 🔺இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா? 🔺இதனால் தான் பொறாமைக்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்றனர். 🔺இதுதான் ஐந்தாவது தீட்டு. இவை ஐந்தும் மாபெரும் தீட்டுகள். இந்தத் தீட்டுக்களையுடைவர்கள்... இறைவனை வழிபட முடியாது. 🤗இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது.

No comments: