Saturday, December 29, 2018

சுக்கிரன்

எதிரிகளை தன்வசப்படுத்துவதில் சுக்கிரன் சிம்மசொப்பனமாக திகழ்வார்.அவன் எவ்வளவு பலம் பொருந்தியவனாக இருந்தாலும் எளிதில் தன்வசப்படுத்தி பலமிழக்க வைத்துவிடுவார் அதேபோல் ஆசை என்கிற பாணத்தை வைத்து இந்த பிரபஞ்சத்தை ஆட்சிசெய்வதும் இவரே எல்லோரும் ராகுதான் இந்த கலியுகத்தை ஆட்டிவைக்கிறார் என்று நினைக்கிறார்கள் ஆனால் ராகு வெறும் பாணமே தவிர உண்மையில் இதற்கு பின்னணியில் இருந்து பாணத்தை செலுத்துவது சுக்கிரபகவான் ஒருவரே எப்படி கிருஷ்ணன் கர்ணனை அழிப்பதற்கு அர்ஜுணை பாணமாக செலுத்தி அழித்தாரோ அப்படித்தான் சுக்கிரபகவான் ராகுவை பாணமாக செலுத்தி இந்த உலகை ஆட்டிப்படைக்கிறார் இதேபோல் தான் ஒவ்வொரு யுகத்திலும் செயல்படுத்துகிறார் சத்ய யுகத்தில் இரண்யகசிபு,சூரபத்மன்,மூசிகன் திரேத்தா யுகத்தில் ராவணன், துவாபார யுகத்தில் காலிங்கன்,சகுனி,கம்சன் மற்றும் கலியுகத்தில் சுவர்ணபாணு(ராகு), கலிபுருஷன் இப்படி பல அசுரர்களை பாணமாக செலுத்தி அதற்கு பின்னணியில் செயல்படுவார் ஆனால் கலியுகத்தில் தான் இவரது ஆதிக்கம் முழுமையாக காணப்படும் இதில் உண்மை என்னவென்றால் ஒவ்வொரு யுகத்தில் நடக்கும் அனைத்து சம்பவங்கள் அனைத்தும் மும்மூர்த்திகளுக்கும் சுக்கிரனிற்கும் இடையே ஆன போட்டியாகும் சுக்கிரபகவான் எப்போதும் நேரடியாக செயல்படமாட்டார் எப்போதும் பின்னணியில் நின்றுதான் செயல்படுவார். குருபகவான் தர்மவழி என்றால் சுக்கிரபகவான் அதர்ம வழியில் பயணிப்பார்.அதனால் தான் இந்த கலியுகத்தில் பிறந்தவர்களுக்கு சுயநலதனம் கொஞ்சமாவது குடிகொண்டிரிக்கும் சுயநலம் இல்லமால் இந்த உலகில் பிழைக்கமுடியாது என்கிற கீழ்தரமான எண்ணத்தை எடுத்துரைப்பவர் சுக்கிரபகவான் அதனால் தான் அவர் பாதாளலோத்திற்கு அதிபதியாக திகழ்கிறார் பொதுநலம் கொண்ட குருபகவான் தேவலோகத்திற்கு அதிபதியாக திகழ்கிறார் இப்படி எதிர்மறை குணம்கொண்டவர் சுக்கிரபகவான்.இல்லறம்,குடும்பம் செழிக்க இவரது அருள் அவசியம்.கலைத்துறை சினிமாத்துறை,ஜவுளித்துறை, ரசாயணத்துறை, வியாபாரத்துறை, ஆடம்பர பொருட்கள் மற்றும் அதன் சம்மந்தபட்ட தொழிலில் வெற்றிபெறவேண்டும் என்றால் சுக்கிரபகவான் அருள் முக்கியமானதாகும், குருபகவான் இயற்கையை ஆட்சிசெய்கிறார் என்றால் சுக்கிரபகவான் செயற்கையை ஆள்பவராக திகழ்கிறார். (தொடரும்)...