Monday, December 31, 2018

உங்களுக்கு தேமல் இருக்கா? இதோ உங்கள் வீட்டிலேயே இருக்கும் மருந்து

தோலில் ஏற்படும் நோய்களில் ஒன்று தேமல் நோய் ஆகும். மலேசேசியா ஃபர்ஃபர் என்னும் கிருமியால் இந்த பாதிப்பு அதிகம் உண்டாகுகிறது. இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. உடலில் சூடு அதிகம் இருந்தால் இந்த தேமல் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது. இந்த தேமலானது மார்பு,முதுகு, கழுத்து, முகம், தோள்,கை,கால் போன்ற இடங்களில் காணப்படும். தேமல் வகைகள்: வெள்ளைத் தேமல்,புள்ளி தேமல், காளான் வகை தேமல், கருந்தேமல், இரத்த தேமல், சொரி தேமல், படர் தேமல்,(தலை படை,முகப்படை,உடலப்படை,தொடை இடுக்கு படை,நகப்படை, கால்ப்படை) என பல வகை உண்டு. தேமலை குணமாக்கும் வீட்டு வைத்தியம்: வெள்ளைப்பூண்டு சிறிதளவு எடுத்து அவற்றுடன் வெற்றிலை சேர்த்து நன்கு அரைத்து அதை தேமல் உள்ள இடத்ததில் தேத்து குளித்து வந்தால் தேமல் குணமடையும். எலுமிச்சம் பழச்சாறு தேமல் உள்ள இடத்ததில் தேத்து குளித்து வந்தால் தேமல் குணமடையும். மோரில் முள்ளங்கியை அரைத்து அதை தேமல் உள்ள இடத்ததில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமடையும். கீழாநெல்லி இலையையும், கொத்தமல்லி இலையையும் அரைத்து பால் கலந்து தேமல் உள்ள இடத்ததில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமடையும். மலைவேம்பு இலையை அரைத்து அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து தேமல் உள்ள இடத்தில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமடையும். வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து தேமல் உள்ள இடத்தில் தேய்த்து வர தேமல் குணமாகும்.