Wednesday, September 19, 2018

யோனி பொருத்தம் என்பது என்ன?

திருமணத்தில் முக்கியமாக பத்து பொருத்தங்கள் பார்ப்பார்கள். இதில் ஒரு சில பொருத்தங்கள் மிகவும் அவசியம். அதில் ஒன்று தான் யோனி பொருத்தம். இது தான் கணவன்- மனைவி வாழ்வில் தாம்பத்திய உறவு சிறக்குமா? இல்லையா? என்பதை கூறும் பொருத்தம் ஆகும் நட்சத்திர வாரியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் வெவ்வேறு வகையிலான விலங்குகளை பொருத்தப்பட்டு கூறுகிறார்கள். யோனி நட்சத்திரம் எப்படி பார்ப்பது ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு விலங்கின் யோனி இருக்கிறது என்று கூறுகின்றனர். இதில் எந்த இரண்டு நட்சத்திரத்தை குறிக்கும் விலங்குகளின் யோனி சேரும், சேராது என வகை பிரித்து பட்டியலே இருக்கிறது. யோனி பகை நட்சத்திரங்கள் குரங்கு – ஆடு : பூராடம், திருவோணம் – பூசம், கிருத்திகை சிங்கம் – யானை : அவிட்டம், பூரட்டாதி – பரணி, ரேவதி குதிரை – எருமை : அஸ்வினி, சதயம்- சுவாதி, அஸ்தம் பசு -புலி : உத்திரம், உத்திராடம், விசாகம்- சித்திரை, உத்திரட்டாதி எலி – பூனை : மகம், பூரம் – ஆயில்யம், புனர்பூசம் பாம்பு – எலி : ரோகிணி, மிருகசீரிஷம்- மகம், பூரம் கீரி- பாம்பு : உத்திராடம்- ரோகினி, மிருகசீரிஷம் மான் – நாய் : கேட்டை, அனுஷம்- மூலம், திருவாதிரை நட்சத்திரங்களும் யோனி வகைகளும் அஸ்வினி – தேவ ஆண் குதிரை பரணி – மானுஷ ஆண் யானை கிருத்திகை – ராஷஸ பெண் ஆடு ரோகிணி – மானுஷ ஆண் நாகம் மிருகசீரிஷம் – தேவம் பெண் சாரை திருவாதிரை – மானுஷ ஆண் நாய் புனர்பூசம் – தேவம் பெண் பூனை பூசம் – தேவம் ஆண் ஆடு ஆயில்யம் – ராஷஸ ஆண் பூனை மகம் – ராஷஸ ஆண் எலி பூரம் – மானுஷ பெண் எலி உத்திரம் – மானுஷ பெண் எருது அஸ்தம் – தேவம் பெண் எருமை விசாகம் – ராஷஸ ஆண் புலி அனுஷம் – தேவம் பெண் மான் கேட்டை – ராஷஸ ஆண் மான் மூலம் – ராஷஸ பெண் நாய் பூராடம் – மானுஷ ஆண் குரங்கு உத்திராடம் – மானுஷ பெண் மலட்டு பசு திருவோணம் – தேவம் பெண் குரங்கு அவிட்டம் – ராஷஸ பெண் சிங்கம் சதயம் – ராஷஸ பெண் குதிரை பூரட்டாதி – மானுஷ ஆண் சிங்கம் உத்திரட்டாதி – மானுஷ பெண் பசு ரேவதி – தேவம் பெண் யானை

No comments: