Monday, September 10, 2018

ஆன்மீகக் கதைகள்

🌸 - ஒரு துறவியிடம் சீடன் ஒருவன் கேட்டான்.உலகில் பல கோடி மனிதர்கள் இருக்கிறார்களே இவர்களை எத்தனை வகையாக பிரிக்கலாம் என்றான் - மூன்று வகையாக பிரிக்கலாம் என்றார் குரு. முதல் வகை மனிதர்கள், பறவையும் அதன் குஞ்சுகளும் போன்றவர்கள். பறவை முட்டையிட்டு குஞ்சு பொரித்துவிட்டு, இறைதேடி எடுத்துவந்து ஊட்டுவதை மட்டுமே கடமையாகச் செய்யும் பறவைக் குஞ்சுகளுக்கு தங்களுக்கு ஊட்டப்படும் இரைதான் தெரியும். தன் தாய், தகப்பன், உறவெல்லாம் எதுவும் தெரியாது. வளர்ந்ததும் அதுவாகவே பறக்க முயற்சி செய்யும் சில தோற்று விழுந்து மடியும், மீந்து போனவை வாழும் வரை வாழும்.இந்த வகை மனிதர்கள், ஏழ்மையுடன் போராடுவார்கள். கிடைத்தால் உண்பார்கள் இல்லையா, பட்டினி, அவர்களுக்கு கடவுளைப் பற்றியே கூட தெரியாது. வாழ்வார்கள். மடிவார்கள். - இரண்டாம் வகையினர், பசுவும் அதன் கன்றையும் போன்றவர்கள் பகவும் கன்றும் தனித்தனியே கட்டப்பட்டிருக்கும். கன்று பசுவைப்பார்த்தும் பசு கன்றைப்பார்த்தும் சத்தமிடும். தாயின் மடியிலிருந்து பால் அருந்தினால் தான் பசி அடங்கும் என்று, கன்றுக்குத் தெரியும். ஆனாலும் அதன் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் சிறு கயிறு, அதனைத் தடுக்கும். கன்று இழுத்து இழுத்துப் பார்த்து, விடுபட வழி தெரியாமல் ஏங்கும். அது போல மக்களில் ஒரு சாரார் வாழ்க்கையில் பல்வேறு துன்பங்களை அனுபவித்து நிம்மதியை தேடி அலைகிறார்கள்.இறைவன் காப்பாற்ற மாட்டாரா என்று ஏங்குவார்கள். - மூன்றாம் வகையினர், கணவன், மனைவி போன்றவர்கள். மனைவி , உடையுடுத்துவதுமுதல், சமைப்பது வரை அனைத்தையும் அவனுக்குப் பிடித்த வகையில் செய்து பாசமும் பரிவும் காட்டி அவனை தன் பக்கம் ஈர்ப்பாள். அதன் பின்னர் அவன், அவள் அன்பில் கரைந்து ஒருபோதும் அவளைப் பிரியாமல் இருப்பதையே விரும்புவான். அதுபோல ஒரு சாரார் இறைவனையே நினைத்து வாழ்வார்கள்.ஒவ்வொரு செயலின் மூலமும் இறைவனை தன்பக்கம் இழுப்பார்கள்.எப்போதும் இறைவன் தன்னை கவனிக்க வேண்டும் என்று செயல்படுவார்கள். அவர்கள் இறைவன்மீது மாறாத பக்தி செலுத்தி இறைவனை அன்புக் கயிற்றால் கட்டிவிடுவார்கள்.இவர்கள்தான் நடமாடும் இந்த உலகில் இறைவன் படைத்தல் இடம் அன்பு காட்டுங்கள் படைத்தவன் உங்களை அன்போடு பார்த்துக்கொள்வார் மகிழ்ச்சியோடு பகிருங்கள் பிறரும் அறியட்டும்

No comments: