கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Friday, September 7, 2018
ஆன்மீகக் கதைகள் - வாழ்க்கை என்பது என்ன?
🌸
-
கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக்கொண்டிருந்தான். அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக்கொண்டு கரையை நோக்கி நீந்தினான். அப்போது நீர்ச்சுழல் ஒன்றில் மாட்டிக்கொள்ள, கடும்போராட்டத்திற்குப் பிறகு உயிர் பிழைத்தான் ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய்விட்டது. கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்துவிட்டேனே என்று கதறினான். அங்கு இருந்த ஒரு துறவி அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததைப் பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவவிட்டதாகக் கூறுகிறீர்களே? என்று கேட்டார். வியாபாரி நடந்ததைக் கூறினான்.
-
துறவி சொன்னார், அய்யா, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது. கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது. இப்போதும் அது மிதந்துகொண்டு போகிறது. அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்? அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா? வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை. ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம். நமது துன்பங்களுக்கெல்லாம் அதுதான் காரணம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...
No comments:
Post a Comment