Monday, January 27, 2020

சனி பகவான் பாதிப்புகளில் இருந்த தப்பிக்க...


* சனிக்கிழமை தோறும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.

* சனிக்கிழமை தோறும் பகவானுக்கு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும்

* கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.

* வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.

* சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.

* சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.

* விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

* அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.

* ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.

* தேய்விறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.

* அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.

* ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம்.

* சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.

* அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.

* சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.

* உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.

* வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.

* பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை கொடுத்து வணங்க வேண்டும்.