Tuesday, January 28, 2020

ஓம் ஸ்ரீ தேவராசு சுவாமிகள்



புதுச்சேரி நகரில் உள்ள முத்தியால்பேட்டையில் 1935 ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டு வரை தம் திருவுடலை சுமந்தவாறு வலம் வந்துள்ளார். யாராவது வந்து அவர்களிடம் தங்கள் நோய்கள் பற்றியோ அல்லது குறைகளை சொன்னால், மண்ணை அள்ளி கையில் கொடுப்பார். அதை நெற்றியில் இடச்செய்கை செய்வார். சில அன்பர்களுக்கு வாயில் போட்டு க் கொள்ள சைகை காட்டுவார். பிணிகள் விலகி விடும்.

முத்தியால்பேட்டை நாலுமூலை உள்ள மிளகாய்ப்பழச் சாமியார் கட்டிய முருகன் கோயில் அருகில் பெரும்பாலும் காணப்படுவார். சுவாமியை ஒரே இடத்தில் பார்க்க முடியாது! வேகமாக சென்று கொண்டு இருக்கும் அவர், எந்த கடை ஓரத்திலாவது நின்று விட்டால் அன்று அந்த கடையில் அமோக வியாபாரம் நடக்கும். உணவகம் சென்று இட்லி, வடை எடுத்து விதியில் எரிந்து விட்டு செல்வார். அன்று அங்கு அமோக வியாபாரம் நடக்கும். சிறு பிள்ளைகள் சுவாமியை பின் தொடர்ந்து தெருவில் செல்வார்கள். அப்பொழுது தெருவில் இருக்கும் மண்ணை எடுத்து பிள்ளைகள் கையில் வைப்பார்கள். கையில் வெய்த மண், சக்கரையாக மாறிவிடும். பிள்ளைகள் சக்கரையாக வாயில் போட்டு கொண்டு ஓடுவார்கள். சுவாமிகள் மௌனத்தில் ஆழுந்து மகா மௌனத்தில் திலைத்து இருப்பார். யாரிடமும் உணவுக்காக கையெந்தியது இல்லை. ஒரு அன்பர் பல முறை உணவு கொடுத்தும் அந்த உணவை ஏற்கவில்லை. கடைசியில் கூழை கொடுத்துள்ளார். அதை ஒரு கொட்ட இஞ்சி காட்டி உள்ளார். அதில் உற்றிக் கொடுத்த பிறகே சுவாமி அதைப் பருகி உள்ளார். அது முதல் சுவாமிகளுக்கு கூழை கொடுத்து வந்துள்ளனர்.

ஒரு முறை, முத்தியால்பேட்டை கடை தெருவில் உள்ள பிள்ளையார் கோயிலில் சித்தரை யாரோ கொலை செய்து விட்டார்கள் என்றும், தலையும் உடலும் தனித்தனியாக இருப்பதாக உள்ளூர் காவல் நிலையத்தில் சிலர் புகார் செய்தனர். விரைந்து சென்று பார்த்த பொழுது, சுவாமிகள் சுகமாக உறங்கி கொண்டு இருந்தார். இதே போன்று மறுநாளும் புகார் வர, விரைந்த சென்ற காவலர்கள் -தங்கள் முன்னால் சித்தர் நடந்து செல்வதை கண்டு மிகவும் வியந்து போனார்கள். சித்தரின் சித்து வேலை என்று அறிந்து காவலர்கள் திரும்பி சென்றனர். இதன் பிறகு சித்தர் அந்த கோவிலில் படுப்பதே தவிர்த்து விட்டார். அவரது தேகம் மிகவும் வலிமை வாய்ந்ததாக இருந்தது. அவரது நடந்துகொண்டே இருப்பார். எங்கும் ஒக்கார மாட்டார். மகா மௌனதிலயே இருந்தார். ஒரு முறை காலாப்பட்டு சாலை ஓரமாக சென்று கொண்டு இருந்தவரை ஒரு வாகனம் பின்னால இருந்து மோதியது. சுவாமி தூக்கி எரியப்பட்டு கிழே விழுந்தார். ஊர் மக்கள் அவரை தூக்க சென்றனர். பலத்த இரத்த காயங்களுடன் எழுந்த சித்தர், எதுவும் நடக்காது போன்று எழுந்து நடக்க தொடங்கினார். இதை கண்ட மக்களுக்கு ஒரே அதிர்ச்சி.

சித்தர் அங்கிருந்து மரக்காணம் வந்தார். அங்கிருந்த பேருந்து நிலையத்தில் உள்ள இட்லி கடை வைத்திருந்த ஒரு மூதாட்டியிடம் பசிக்காக கையை தட்டினார். கலையில் இருந்து வியாபாரம் ஆகாமல் இருந்ததால், சுவாமிகளை விரட்டினர் அந்த மூதாட்டி. அங்கிருந்து சித்தர் சென்று விட்டார். அன்று முழுவதும் எந்த வியாபாரமும் நடக்க வில்லை, மேலும் அந்த மூதாட்டியால் வாயை திறக்கவோ, நகரவோ முடியவில்லை. இவரை தேடி வந்த மூதாட்டியின் பேத்தி, இவரின் நிலையை கண்டு கண்ணீர் வடித்தால். அருகில் இருந்தவர்களிடம் இருந்து நடந்ததை அறிந்து கொண்ட பேத்தி, சித்தரை தேடி கண்டு பிடித்து அவரிடம் மன்னிப்பு கேட்டார். பாட்டியை குணப்படுத்தும் படி கெஞ்சினால். மனம் வருந்திய சித்தர், பாட்டியை இலேசாக தடவி கொடுத்தார். பாட்டி பழைய நிலைமைக்கு திரும்பினார்.

அங்கிருந்து சித்தர் வன்னியநல்லூர் சேர்ந்தார். அங்குள்ள நாவமரத்தடியின் கிழ் சுவாமி ஆறு நாட்கள் தங்கினார். நாவமரத்தை உற்றுப் பார்ப்பதும் வணம்குவது மாய் இருந்த சித்தரை பார்த்த ராமாயி என்ற உள்ளூர் பெண், அவருக்கு சாப்பாடு கொண்டு வந்து தந்தார். அதை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தான் கொண்டு வந்த கூழையாவது குடிக்கும் படி கேட்டுக்கொண்டார். சித்தரும் கூழை குடித்தார். குடித்து முடித்த சித்தர் அவளுக்கு சிறிது மண் அளித்தாராம். அதை விட்டில் வைத்த இடத்தில் நூறு ரூபாய் நோட்டு ஒன்று இருந்ததாம். தபால்காரர் மனைவியின் வாயிற்று வலியை தான் அளித்த மண்ணை பூச செய்து அந்த நிமிஷமே குணம் அடைய செய்தாரம். அவ்வூரில் வசதி மிகுந்த அம்மணி அம்மாள் என்ற வயதான அம்மையார் விட்டில் அமர்ந்திருந்தார். அம்மணி அம்மாள் சித்தரை அங்கிருந்த கம்பால் அடித்து விரட்டினார். சித்தார் மிண்டும் மரத்தடியிலே வந்து அமர்ந்து விட்டார். சித்தரை பிரம்பால் அடித்த பெண் மறுநாள் விட்டை விட்டு வெளியே சென்றவர், இன்றுவரை வீடு திரும்பவில்லை. அவர் சித்தரை அடித்தால் ஏதேனும் தண்டனை அடைந்திருக்கலாம் என்று மக்கள் நம்புகின்றனர். இறைவனை அடையும் நேரம் வந்துவிட்டதை உணர்ந்த சித்தர் 22-06-1948 ஆம் ஆண்டு ஆனிமாதம் செவ்வாய்கிழமை மாலை 3.30 மணிக்கு பூராட நட்சத்திரத்தில் உடற்சட்டை தூக்கி எறிந்தார். அன்று கூழ் கொண்டு வந்த எழுமலை என்ற நபரை அங்கே இருக்க சொன்னார். ஊழ் குடிக்காமல் இருந்துள்ளார். தான் சமாதி அடையும் நேரத்தில் பயங்கர சிரிபொன்றை சிரித்தார். அதன் பிறகு, அவர் உடலில் எந்த சலனமும் இல்லை.

ஊர் மக்கள் ஒன்று கூடி அந்த இடத்தில் ஒரு சிறிய மேடை கட்டி வழிபட்டு வந்தனர். சித்தரின் சீடர்களான கோவிந்தசுவாமி மற்றும் ராஜப்பா ஆகிய இருவரின் கனவிலும், தேவரசு சுவாமிகள் தோன்றி தாம் சமாதி அடைந்த இடைத்தை உணர்த்தினார். என்றோ எடுத்த புகைப்படத்தை எடுத்து கொண்டு, உள்ளூர் மக்களின் உதவியால் சுவாமிகளின் சமாதியை கண்டு பிடித்தனர். சமாதியை நெருங்கிய சிடர்களுக்கு ஆவி வடிவில் சுவாமிகள் தரிசனம் தந்துள்ளார்

No comments: