கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Tuesday, January 28, 2020
உங்கள் குழந்தைக்கு மருத்துவ கல்வி அமையுமா ஜோதிட விளக்கம்
ஒருவர் ஜாதகத்தில் 9 , 10 , 11 ல் கேது அமையப்பெற்றால் மருத்துவக்கராகனாகிய சந்திரன் உச்சம் பெற்று அமையப்பெற்றால் மருத்துவக்கல்வி அமைகிறது .
சூரியன் + செவ்வாய் இணைந்து காணப்பட்டாலும் , பரிவர்த்தனை பெற்றாலும் மருத்துவக் கல்வி அமையும் .
9 மிடம் நன்றாக இருக்க வேண்டும் . குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் அமைந்தால் “ குரு மங்கள யோகம் ” ஏற்படும் .
வழக்கறிஞர் படிப்புக்கு வாக்கு ஸ்தானத்தில் குரு , புதன் , பலம் பெற்று காணப்பட வேண்டும் .
அதோடு 2 , 10 க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றால் பெரும் 6 மிடம் பலம் பெற்று , 6 க்கு அதிபதியும் பலம் பெற்றால் தான் வக்கீல் தொழில் உண்டாகும் .
மற்றும் 1_2 , 2 _ 9 , 2 _ 11 ஆகியோர் பரிவர்த்தனை அடைய வேண்டும் .
கலெக்டர் படிப்பு படிக்கப் 2 . 11 ஆகிய ஸ்தான்ங்களில் செவ்வாய் , சனி ஆட்சி பெற்றுக் காணப்பட்டால் தேர்வில் வெற்றி பெற்று யோகம் பெறுவார் .
செவ்வாய் பலம் பெற்றவர்கள் அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர்களாக விளங்குவார்கள் . சூரியன் சாரத்தில் செவ்வாய் நின்றாலும் செவ்வாய் சாரத்தில் சூரியன் நின்றாலும் டாக்டர் தொழிலில் சாதனை செய்வார்கள் .
ஒருவருக்கு கல்வி தடைப்பட்டாலும் 2 , 4 , 5 க்கு அதிபதிகள் திசை நடைபெறும் போது தடைபட்ட கல்வியை மீண்டும் தொடரும் நிலை ஏற்படும் .
கோச்சாரம் கெடும் போதும் 7 ½ சனி அஷ்டமசனி நடைபெ றும் போது நன்றாக படிக்கும் மாணவர்கள் கல்வியில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வி அடையும் நிலை ஏற்படும் .
புதன் நின்ற வீட்டிற்கு அதிபதி புதனுக்கு 1 . 4 , 7 , 10 போன்ற கேந்திரங்களில் இருந்தால் உயர்ந்த படிப்பு , பட்டப் படிப்பு ஏற்படுகிறது .
மற்றும் 2 மிடத்தில் சனி , ராகு போன்ற கிரகங்கள் அமைந்தால் கல்விக்கு தடை ஏற்படும் .
Subscribe to:
Post Comments (Atom)
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...
No comments:
Post a Comment