
கடவுளை அன்புடன் நேசிப்பது என்பது கடவுளைத் தெரிந்து கொள்வதாகும். கடவுளைத் தெரிந்து கொள்வது என்பது அவர் உங்கள் மீதுள்ள அன்பை உணர்ந்து கொள்வதாகும்.
பரமேஷ்வரரின் ஒளியுடம்பை நாம் ஞானப் பார்வையில் பார்க்க இயலும். அது நமது சொந்த ஆன்ம உடம்பைப் போன்று அதே மாதிரி வடிவமைப்பில் இருக்கும்.
ஆனால் நமது ஆன்ம உடல் இன்னும் முதிச்சியடையாமல் இருப்பதால் அது ஒளிகுன்றி இருக்கும். இறைவன் ஆதி ஆன்மாவாக தனியம்சமாக நாதனாகவும் படைப்பவனாகவும் இருக்கும் தன்மையை பல வடிவங்களாய் சித்தரிக்கப்பட்டுள்ளது.
சைவர்கள் நடராஜர் வடிவமாகவும்,
வைணவர்கள் விஷ்ணு வடிவமாகவும், சாக்தர்கள் தேவி வடிவமாகவும் சித்தரித்துள்ளனர்.
சிவபெருமானின் மூன்று பூரணத்துவத்தைப் புரிந்துகொள்ள ஒரு முழுமையான மாம்பழத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மேலே தோல் இருக்கிறது, அடியில் கனி இருக்கிறது, உள்ளே கொட்டை இருக்கிறது. இருப்பினும் அது ஒரு முழுப் பழமாக இருக்கிறது.
தோல்பகுதியே சிவனின் உடம்பு என்றால், கனியாக இருப்பது அவரது சச்சிதானந்த மனம், கொட்டைப் பகுதியே அவரின் உள்ளார்ந்த சாரமாகும்.
சிவபெருமானுக்கு மூன்று பரிபூரண நிலைகள் உண்டு. அது இங்கே ஒரு முழு வட்டமாய் காணப்படுகிறது.
1) சிவலிங்கமே அவரின் யாவும் கடந்த நிலை.
2) நடராஜரின் நடனமே அவரின் படைப்பு.
3) பராசக்தியே யாவற்றிலும் நிறைந்து நிற்கும் அருளுணர்வு/சக்தியாகும்.
நன்றி,,,ஈசனே.....