
#வலம்புரிச் சங்கு அபிஷேகம்:
சிவபெருமானுக்கு மிகவும் உவப்பானது வலம்புரிச் சங்கினால் செய்யப்பெறும் அபிஷேகம். வலம்புரிச் சங்கில் மகாலட்சுமியும் குபேரனும் வாசம் செய்வதாக ஐதீகம். வலம்புரிச் சங்கினால் அபிஷேகம் செய்தால், சகல ஐஸ்வர்யங்களும் கிடைப்பதுடன், தீவினைகள் நீங்கி, நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.
#விபூதி அபிஷேகம்
விபூதியால் அபிஷேகம் செய்தால், இன்ப வாழ்க்கையும் மோட்சமும் கிடைக்கும்.
#கரும்புச் சாறு
கரும்புச் சாறினால் அபிஷேகம் செய்தால், நோய்நொடிகள் நீங்கி, ஆரோக்கிய வாழ்வைப் பெறலாம்.
#எலுமிச்சம்பழச் சாறு
எலுமிச்சம் பழச்சாறினால் அபிஷேகம் செய்தால், எதிரிகள் அச்சம் நீங்கி, பகைமைகள் விலகும்.
#இளநீர்
இளநீரால் அபிஷேகம் செய்தால், இன்பமான வாழ்வு கிடைக்கும்.
#பஞ்சாமிர்தம்
பழங்கள், தேன், கற்கண்டு ஆகியவை சேர்த்த பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால், உடலும் உள்ளமும் வலிமைபெறும்.
#தேன்
தேனால் அபிஷேகம் செய்தால், இசை வல்லமை கிடைக்கும்.
#பால்
பாலால் அபிஷேகம் செய்தால், நோய்நொடிகள் நீங்கும்; ஆரோக்கிய உடல் நலத்துடன் ஆயுள் நீடிக்கும்.
#தயிர்
தயிரால் அபிஷேகம் செய்தால், நல்ல குழந்தைகளைப் பெறலாம்.
#நெய்
நெய்யால் அபிஷேகம் செய்தால், முக்தியைத் தரும்.
கோயிலாக இருந்தால், அர்ச்சகரிடம் கொடுத்து அபிஷேகம் செய்யச் சொல்லலாம். முறைப்படி வீட்டிலேயே சிவலிங்கம் வைத்து பூஜை செய்பவர்கள், அவரவர் விரும்பும் பலனுக்கு ஏற்ற அபிஷேகப் பொருள்களைக்கொண்டு அபிஷேகம் செய்யலாம்.