Sunday, April 14, 2019

முகம் என்றும் இளமையாக இருக்க டிப்ஸ்…!




கடலை மாவை தண்ணீரில் நன்றாக குழைத்து முகத்தில் பூச வேண்டும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரை கொண்டு முகம் கழுவ வேண்டும். இதனால் முகம் பளிச்சென்று மின்னும்.
கடலை மாவு மற்றும் தக்காளி இரண்டையும் எடுத்து நன்றாக கூழாக குழைத்து முகத்தில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவ வேண்டும். முகம் அதிக பொலிவு பெறும்.
கடலை மாவுடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து நன்றாக குழைத்து முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தை கழுவ வேண்டும். இதனால் முகம் எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கி பொலிவு பெறும்.
முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிதளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவ வேண்டும். இதனால் முகச்சோர்வு நீங்கி முகம் புத்துணர்வு பெரும்.
முல்தானிமெட்டியை தண்ணீரில் நன்றாக குழைத்து முகத்தில் தடவி வர முகம் புத்துணர்வு பெறும்.
கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க கடலை மாவுடன் ரோஸ்வாட்டர் மற்றும் பால் சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரை கொண்டு முகத்தை கழுவ வேண்டும். இதனால் முகம் இளமையுடனும் பளபளப்பாகவும் இருக்கும்.
பெண்கள் கடலை மாவுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு, பால் மற்றும் மஞ்சள் தூள் கலந்து முகத்தில் பூசி வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவி வந்தால் முகம் நன்றாக ஜொலிக்கும்.
தக்காளி மற்றும் வெள்ளரிக்காய் ஆகிய இரண்டையும் மிக்சியில் நன்றாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் சிறிதளவு முல்தானி பவுடர் கலந்து முகத்தில் கெட்டியாக பூசி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் முகம் நன்கு பொலிவு பெறும்.
குங்குமப்பூவை பன்னீரில் போட்டு நன்கு ஊற வைத்து அந்த தண்ணீரை முகத்தில் தடவி வந்தால் முக கருமை குறைந்து சிகப்பழகு பெறும்.
குங்குமப்பூவை பாலில் நன்கு ஊற வைத்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து விடும்.
குங்குமப்பூவை பாலில் நன்கு ஊற வைத்து அதனுடன் சிறிதளவு சந்தன தூள் கலந்து நன்றாக குழைத்து முகத்தில்பூசிவந்தால் முகம் பளபளப்பாகும்.
சோற்றுக்கற்றாழை ஜெல்லுடன் 2 ஸ்பூன் அன்னாசிப்பழச்சாறு சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் தேய்த்துக் கழுவ வேண்டும். வாரத்திற்கு 2 முறை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளி, தேமல் மற்றும் பருக்கள் மறைந்து விடும்.
கடலை மாவை பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவுவதன் மூலம் முகம் நிறம் பெறும். தினமும் கடலை மாவு தேய்த்து குளிக்கவும் செய்யலாம்