Wednesday, April 17, 2019

ஆடிய பற்கள் கூட ஈறு பலம்பெற்று நின்று விடும் இந்த பழங்கால கைவைத்தியம் தெரியுமா?






பற்கள் ஆடினா உடனே அவற்றை பிடுங்கத்தான் வேண்டுமா அல்லது அவை விழும் வரை காத்திருக்கனுமா?தேவையில்லை. உங்கள் ஈறுகளை வலுவாக்கினால் ஆடும் பல்லைக் கூட நிறுத்த முடியும்.அனுபவப் பூர்வமாக சிலரருக்கு நடந்துள்ளதால் உங்களுக்காக இந்த குறிப்புகள் தரப்பட்டுள்ளன.


பல் ஆடுவதற்கு என்ன காரணம் ?
உங்கள் பல் ஆடுவதற்கு பலவீனமான ஈறு மற்றும் பற்கள் காரணம். மோசமான பராமரிப்பு மிக முக்கிய காரணம். பற்சொத்தை ஏற்படுவதாலும் பற்கள் ஆடத் தொடங்கும்.எனவே ஆடும் சமயத்தில் பற்கள் மற்றும் ஈறுகளின் மீது கவனம் செலுத்தினால் பற்கள் ஆடாமல் மேலும் வலுவாக்க முடியும். அப்படியான குறிப்புகளை பார்க்கலாம்.

ஆடும் பற்களை காக்கும் நமது பழங்கால அதிசய மூலிகைகள்


கருவேலப்பட்டை
கருவேலங்குச்சிகள் கிராமத்தில் கிடைக்கும். கருவேல மரத்தின் சிறு இளங்குச்சியை முறித்து அதனைக் கொண்டு பல் துலக்கலாம். இது, ஈறுகளில் உண்டாகும் ரத்தக்கசிவைப் போக்கக்கூடியது. பற்களை பலப்படுத்தும்.

வேப்பங்குச்சி
இன்றும் கிராமங்களில் வேப்பங்குச்சியால் பற்களை விலக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் பற்கள் உறுதியாகின்றன.அதற்குக் காரணம், வேப்பங்குச்சியில் எண்ணற்ற ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டிபயாடிக் பொருட்கள் இருப்பதுதான். வேப்பங்குச்சியால் பற்களைத் துலக்கினால், பற்கள் நன்கு சுத்தமாக, பளிச்சென்று இருக்கும். துர்நாற்றம் நீங்கும்.

ஆலங்குச்சி
ஆலமரத்தின் குச்சியை உடைத்து அதனைப் பற்களில் தேய்த்துவந்தால் பற்கள் உறுதி பெறும். மேலும், ஈறுகளில் வீக்கம், ரத்தக்கசிவு போன்ற பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.