Sunday, April 14, 2019

கடுமையான மூட்டு வலி், இடுப்புவலி, முடக்கு வாதம் நீங்க:முடவாட்டுக்கால் கிழங்கு!!!!!


சித்தர்கள் கண்டறிந்த மகத்துவம் மிக்க காயகற்ப மூலிகை களில் ஒன்றுதான் முடவாட்டுக்கால் ஆகும்.

*வள்ளலார் இதனை மிக முக்கியமான மூலிகை மருந்தாக குறிப்பிடுகிறார் இதில் தாய் பாலுக்கு நிகரான (லாரிக் அமிலமும் உள்ளன)நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன தொடர்ந்து உண்டு வந்தால் மூட்டுவலி இடுப்புவலி நிச்சயமாக சரியாகிவிடும் குறிப்பாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு சிறந்த உணவு மருந்து.

*சிறு வயது குழந்தைகளுக்கு வரும் வாதநோய் களுக்கு முடவாட்டுக் கால் கிழங்கை கொதிக்கும் நீரில் போட்டு வைத்து இளம் சூட்டில் உடலில் ஊற்றி தினம் குளித்து வர இரண்டு,மூன்று மாதத்தில் வாத நோய்கள் குணமாகும்.

* முடவாட்டுக்கால் ரசம் 10 நாட்கள் தொடர்ந்து குடித்துவர, கடுமையான முழங்கால் வலி, குதிகால் வலி, முழங்கால் சவ்வு பலவீனம்,தசை பிறழ்சி ஆகியன நீங்கும். குளிர்காலத்தில் தோன்றும் கெண்டைக்கால் சதை இழுத்தல், உடல் முழுவதும் தோன்றும் வலி, அசதி மற்றும் பலவகையான தசைபிடிப்பு நீங்க இதை அனைவரும் குடித்துவரலாம்.

* கிழங்கில் கேட்கின், கவுமாரின், பிளேவனாய்டுகள் மற்றும் தாவர ஸ்டீராய்டுகள் ஏராளமாக உள்ளன. இவை மூட்டுகளில் தோன்றும் வீக்கம், இறுக்கம் மற்றும் வலி ஆகியவற்றை நீக்குவதுடன், மூட்டுகளுக்கு வலிமையை தருகின்றன.

*கீல்வாதம், முடக்குவாதம், மூட்டுவாதம், போன்றவற்றை தணிக்கும்;

*கால்சியம் குறைபாட்டுக்கு அலோபதி மாத்திரைகளுக்கு பதில் இவற்றை எடுத்து பாருங்கள் உங்கள் உடலில் ஏற்படும் முன்னேற்றத்தை உணர்வீர்கள் அதுவும் குறிப்பாக குழந்தை பேறு முடிந்ததும் உடலில் உறுவாகும் பெரும் குறைபாடு சுண்ணாம்பு சத்து பற்றாக்குறையும் அதற்காக ஆங்கில மருத்துவத்தை நாடுபவர்களுக்கு இது மிகச்சிறந்த Food supplements....

*எலும்பு அடர்த்திக் குறைவு (Osteopenia) நோயைத் தடுக்கும் திறன் இதற்கு இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வீக்கமுறுக்கி, கிருமிநாசினி, உரமாக்கி போன்ற செய்கைகள் இதற்கு உண்டு. நீரிழிவு நோயில் இதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன.

*மேகவெட்டை நோயை குணமாக்கும்;

*நீரிழிவு நோய் தணிக்கும்;

*காய்ச்சலை குறைக்கும்;

*மனச்சோர்வுப் போக்கும்;

*வீக்கத்தை போக்கி, வலியை குறைக்கும்;

*சிறுநீர் எரிச்சலை போக்கும்;

*கொழுப்பை [கொலஸ்ரால் அளவை] குறைக்கும்;

*நீர்க்கோவையை நீக்கும்;

*பூஞ்சையினால் ஏற்டும் தோல் நோயை குணமாக்கும்.

*வயிற்றுப் பூழுக்களை அகற்றும்;

*மேலும், ஆக்சிகரண எதிர்ப்புப் பொருள்; நுண்ணுயிர் எதிர்ப்புப் பொருள் ஆகியவற்றைப் பெற்றுள்ளது.

*இம்மூலிகை கிழங்கு செம்மறி ஆட்டின் கால்களைப் போன்ற தோற்றத்துடன் இரண்டடி நீளம் வரை வளரும்.

முடவாட்டுக்கால் [மூலிகை] சூப் செய்முறை :

முடவாட்டுக்கால் கிழங்கு - 50 - கிராம்
மிளகு - 20 - No
சீரகம் - 1/4- டீஸ்பூன்
பூண்டு - 3 பல்
தக்காளி - 1

அனைத்தையும் ஒன்றிரண்டாய் இடித்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து 300 மிலி அளவு கொதித்து வற்றியவுடன் வடிகட்டி சிறிது உப்பு,சிறிது வெண்ணெய் சேர்த்து இளம் சூட்டில் குடிக்கவும். சுவையாக இருக்கும்.

இது போல் தினமும் செய்து குடித்துவர மூட்டு வலி, முடக்கு வாத நோய்கள் விரைவில் குணமாகும்.