Thursday, April 18, 2019

புடலங்காயின் சிறப்பான மருத்துவ நன்மைகள்



புடலங்காய் செடி, முடி வளர, முடி உதிர்வதை தடுக்க, புடலங்காய் பொடுகு நீங்க, விரைப்பு அதிகரிக்க. புடலங்காய் சக்கரை நோயை குணமாக்க, புடலகாய் இருதய நோய்குணமாக புடலங்காய் பயன்படும்.

நாட்டு புடலங்காய்

புடலங்காயில் அதிகப்படியான மருத்துவ குணங்கள் உள்ளன. புடலங்காய் கொடியாக வளரக்கூடிய கொடி இனத்தை சார்ந்தது. இது வீட்டு மாடிகளில் வளர்க்க ஏதுவான இருக்கும்.

புடலங்காய் குணமாக்கும் நோய்கள்

காய்ச்சல்,
நீரிழிவு,
இருதய நோய்கள்,
மஞ்ச காமாலை,
மலச்சிக்கல்,
பொடுகு,
முடி உதிர்தல், முடி முளைக்க,
உடல் எடை குறைய
புடலங்காயில் உள்ள சத்து

மாங்கனீசு,
சுண்ணாம்பு சத்து,
பாஸ்பரஸ்
ஆகிய சத்துக்கள் நிரைந்து காண்படுகிறது. புடலங்காயி உள்ள சத்துக்கள் உடல் இயக்கத்தை மேம்படுத்தவும், எலும்பு மற்றும் பற்களை உறுதியாக்கவும் துணைபுரியும்.
புடலங்காய் மருத்துவ பயன்

நாட்டு புடலங்காய் மருத்துவத்திற்க்கு மிகசிறந்தாக இருக்கும். நாட்டு புடலங்காய் பச்சை நிறமாக வெள்ளை நிற வரிகளும் இருக்கும் மற்றவை வெண்மை நிறமாக இருக்கும்.
நீரிழிவு

புடலங்காயில் மற்ற காய்கறியில் உள்ள மாவு சத்தை விட குறைவான மாவு சத்து கொண்டது அத்தோடு அதிகபடியான நார்சத்து உள்ளது. சக்கரை நோயாளிகள் புடலங்காயை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் இரத்ததில் உள்ள சக்கரையின் அளவை கட்டு பாட்டில் வைக்க உதவுகிறது.

குறிப்பு:-
புடலங்காயை தனியாக வதக்கி சாப்பிட வேண்டும் வேறு தேங்காய், பருப்பு போன்றவைகளை கூட்டு பொருளாக சேர்க்க கூடாது.
இருதய நோய்

இருதய நோயால் பாதிக்கபட்டவர்கள் புடலங்காயை உணவில் சேர்த்து கொள்வதால் இருதய படபடப்பு, மன அழுத்தம், மற்றும் வலியை குணப்படுத்தும், இரத்த ஓட்டத்தை அதிகபடுத்துகிறது, இருதய நோய் ஆரம்ப கட்ட பாதிப்பில் உள்ளவர்களை விரைவில் குணமாக்கும்.

குறிப்பு:-
எண்ணெய் மிக குறைவாகவும் காரத்திற்க்கு பதில் மிளகும் சற்று அதிகமாக புடலங்காயும் சேர்த்து சூப் தயாரித்து குடிக்கலாம்.
விரைப்பு தன்மை அதிகரிக்க

ஆண்கள் அதிகமாக உணவில் புடலங்காய் சேர்த்து வந்தால் தாம்பத்தியத்தின் போது ஏற்படும் விரைப்பு தன்மை குறைபடு, விந்து நீர்த்து போதல் குணமாகும் இது சித்த மருத்துவ ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பொடுகு நீங்க

பொடுகு தொல்லை குணமாக புடலங்காய் மிகச்சிறந்தது. தேவைக்கு சற்று அதிகமாக புடலங்காய் சாறு எடுத்து தலையில் தடவி சற்று அழுத்தி தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்க பொடுகு நீங்கும். தலை முடிக்கு தேவையான ஊட்டசத்தையும், தலையில் உள்ள தோல் பகுதிக்கு தேவையான ஈரபத்தத்தையும் கொடுக்கின்றது. புடலங்காய் உணவாக எடுத்துக் கொள்வதாலும் பொடுகு, முடிக்கு வளர தேவையான ஊட்டசத்து குறைபாடு குணமாகும்.
முடி உதிர்வு தடுக்க, முடி வளர

தலை முடி உதிர்வை தடுக்க, பாதிக்கபட்டு வழுக்கையான இடத்தில் முடி வளர புடலங்காய் இலை சாறு எடுத்து பாதிக்க பட்ட இடத்தில் தடவிவர முடி உதிர்வு தடுக்கபட்டு மீண்டு புதிய முடிகள் வளரும்.
உடல் எடை குறைய

புடலங்காயில் நார்சத்து மிகுதியாகவும், மாவு சத்து குறைவாக இருப்பதாலும் உணவு செரிமானம் ஆனது உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுத்துகிறது மாறக்க உடலில் கொழுப்பாக தங்குவதில்லை, இதனால் உடல் எடையை அதிகரிக்காது. உடல் எடையை குறைக்க புடலங்காய்யை உணவாக சாப்பிட்டு தேவையான உடல் பயிற்ச்சி செய்து வர எடைகுறையும்.
காய்ச்சல்

உடலில் உள்ள சிவப்பு அணுக்கள் அதிக அளவு அழிவுறுவதால் பித்தம் அதிகரித்து காய்ச்சலை உண்டாக்கும். இதனை தடுக்க புடலங்காய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து அரைத்து சாறு பிழிந்து கொடுக்க காய்ச்சலை கட்டுபடுத்தும். வாந்தியை உண்டாக்கும் தன்மை உண்டு, மலேரிய காய்ச்சலை குணபடுத்தும்.

மஞ்சள் காமாலை
புடலங்காய் இலைக்கு மஞ்சள் காமாலையை குணமாக்கும் தன்மை உண்டு. புடலங்காய் இலையுடன் கொத்தமல்லி சேர்த்து அரைத்து மூன்று காலமும் தலா 15கிராம் வீதம் சாப்பிட்டு வர குணமாகும்.
மலச்சிக்கல்

மலம் கெட்டியாகி கழிக்க முடியாதவர்கள் புடலங்காய் சாப்பிட்டு வந்தால் மலம் எளிமையாக வெளியேறும்.
முக்கிய குறிப்பு

புடலங்காயுடன் சுவைக்காக வேறு காய்கள், பருப்பு வகைகள், சக்கரை போன்ற வற்றை சேர்பதால் அதன் மருத்துவ தன்மை சேர்க்கபடும் பொருளுக்கு ஏற்ப மாறிவிடும் ஆகையால் தனியாக சமைத்து சாப்பிடுவதன் மூலம் மட்டுமே மேற்கூறிய நன்மைகளை பெற முடியும்.