🌴🌷
தவறான வழக்கம் சந்ததிகளைத் துன்பத்தில் ஆழ்த்தி விடும்... எவரேனும் இறந்துவிட்டால் அக்குடும்பத்தினர் ஒரு ...வருடத்திற்குக் கோலம் போட கூடாது , மலைத் தலத்திற்கும் போகக் கூடாது , பண்டிகைகளை கொண்டாடக் கூடாது என்ற தவறான வழக்கங்கள் தற்போது நிலவி வருகின்றது . இறப்பு நேரிட்ட நாளிலேயே கூட அக்குடும்பத்தினர் கோயிலுக்குச் சென்று வழிபடுவதிலும் ,வீட்டில் கோலம் இடுவதிலும் எவ்விதத் தவறும் இல்லை , சாஸ்திர முரண்பாடும் கிடையாது . இடைச் செருகலாக வந்த இத்தவறான வழக்கமே பல குடும்பத்தவர்கள
ை ஒரு வருட காலம் கோயிலுக்குச் செல்ல விடாமல் தடுப்பதோடு ,அக்குடும்பத்தி
னருக்கு எவ்வித ஆலய வழிபாட்டுப் பலாபலன்களையும் வரவிடாது ஓராண்டிற்குத் தடுப்பதால் அக்குடும்பத்தினரின் பல- துன்பங்களுக்கு நிவர்த்தி கிட்டாமல் போவதுடன் ஆன்மீகத் தற்காப்பு சக்தியும் குறைந்து பலத்த பிரச்சனைகளும் தோன்றி சந்ததிகளை அலைக்கழித்துவிடும் !
இந்த ஒரு வருடத்திலும் பண்டிகைகள் கொண்டாடுவதிலும் எவ்விதத் தவறும் இல்லை . பண்டிகைகளினால் வரும் புண்ய சக்தி சேகரிப்பையும் இழத்தலும் தவிர்க்கப்படும் .
அவ்வாறு துக்கத்தை ஒரு வருடகாலம் அனுஷ்ஷப்பதனால் டீ.வி , சினிமா , செய்தித்தாள் படித்தல் , புது ஆடைகள் , ஸ்வீட்டுகள் , காபி , டீ , ருசிகர உணவுகள் , கேளிக்கைகளை ஒரு வருட காலம் எவரேனும் ஒத்தி வைகிறார்களா ? இறைவனா ஓராண்டு தன்னைக் காணலாகாது என்று விதிப்பார் ??? இறைப் பகுத்தறிவுடன் சிந்தியுங்கள் ! துன்பங்கள் மலை மலையாய்ப் பெருகும் கலியுகத்தில் ,அதுவும் பல பூஜைகளும் , வேத சக்திகளும் வெகு வேகமாக மறைந்து வரும் கலியுகத்தில் , " ஓராண்டு கோயிலுக்குச் செல்லலாகாது " என்ற அறியாமையினால் தோன்றிய தவறான எண்ணத்தைக் கட்டாயம் சமுதாயத்தில் இருந்து அகற்றியே ஆக வேண்டும் .
கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...