Monday, April 22, 2019

கல்லீரல்_பாதுகாப்பு



அதுக்கு தான் அப்பவே சொன்னாங்க #பீட்ரூட் சாப்புடுனு. நான் தான் கேட்கல!..

வணக்கம் இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது கல்லீரலை எப்படி சுத்தம் செய்வது என்பது பற்றி. நமது உடலில் இதயம் மற்றும் மூளைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கிய பாகமாக கல்லீரலைக் கூறலாம். ஜீரண மண்டலத்தின் ஒரு பகுதியான இது உடலின் உள்ளுறுப்புகளில் பெரிதான உறுப்பு ஆகும். 500க்கும் மேற்பட்ட வேலை செய்து வருகிறது. அதில் சர்க்கரை கொழுப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. மேலும் புரத உற்பத்திக்கும் மிகவும் உதவுகிறது. அதே போன்று உடலில் அடிபட்டு ரத்தம் கசியும் பொழுது அதிக ரத்தம் வெளியேறாமல் தடுக்க உதவுகிறது.

மேலும் விட்டமின்கள் ஆன ஏ பி12 சி டி ஈ கே மற்றும் தாது உப்புக்களான இரும்பு காப்பர் இவற்றினை சேமித்து வைத்து உணவில் இவற்றை பற்றாக்குறை ஏற்படும் பொழுது தற்காலிக அவசரத்திற்கு உதவிய அளிக்கிறது. மேலும் இரத்தத்தை வடிகட்டி சுத்தம் செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.

அதே போன்று கல்லீரலில் உருவாக்கப்படும் பித்த நீர் சிறுகுடலில் செலுத்தப்பட்டு கொழுப்பு உணவை செரிக்க வைக்க உதவும். அதாவது கல்லீரலில் உருவாகும் பித்தநீர் பித்த பையில் சேர்த்து வைக்கப்படும். நாம் உணவில் கொழுப்பு சத்தினை சாப்பிடும் பொழுது பித்த நீர் பித்தப்பையில் இருந்து குடலுக்கு செலுத்தப்பட்டு கொழுப்பை கரைக்க உதவுகிறது...

முக்கியமாக நமது உடலில் கழிவுகளை நீக்குவதில் கல்லீரலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ரசாயனம் வைரஸ் கிருமியினால் ஏற்படும் தாக்குதலில் இருந்து கல்லீரலும் நம்மை பாதுகாக்கிறது. நல்ல சத்துகளும் சரி நச்சுகளும் சரி கல்லீரலின் தாண்டிய உள்ளே செல்லமுடியும். நமது உடலுக்கு எது நல்லது எது நீக்கப்பட வேண்டும் என்பதை அறிந்து அதன்படி வேலை செய்கின்றது. உள் உறுப்புகளில் கல்லீரல் ஒன்றுதான் காயம் பட்டாலும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் தன்மையுடையது. இப்படி கல்லீரலின் அபார முக்கிய செயல்களை சொல்லிக்கொண்டே போகலாம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கல்லீரல் பாதிக்காமலிருக்க கல்லீரல் எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை நாம் கல்லீரலை சரியாக பாதுகாக்காமல் இருந்தால் மெல்ல மெல்ல உடலில் செயல்திறனில் குறைபாடு ஏற்பட ஆரம்பிக்கும். எனவே கல்லீரலை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்வது.

இப்பொழுது கல்லீரலை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது பற்றி பார்ப்போம்.

இதற்குத் தேவையான பொருட்கள்

மீடியம் சைஸ் பீட்ரூட்1
கேரட் ஒன்று
ஆப்பிள் ஒன்று
தண்ணீர் ஒரு டம்ளர்
முதலில் பீட்ரூட் கேரட் ஆப்பிள் மூன்றையும் சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். பிறகு உங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் இந்த ஜூஸை குடிப்பதற்கு முன்னர் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலுடன் அரை மூடி எலுமிச்சை சாற்றை கலந்து குடிக்க வேண்டும்.

இதை போன்ற தொடர்ந்து ஐந்து நாட்கள் குடித்து வர கல்லீரலில் இருக்கும் நச்சுதன்மை அனைத்தும் வெளியேறி உங்கள் கல்லீரல் நன்கு செயல்படும். உடலும் புத்துணர்ச்சி அடையும்.