Friday, April 19, 2019

உடல் எடை குறைய, உடல் வெப்பம் குறைக்க,

அஜீரண கோளாறுகள் சரியாக, உயர் இரத்த அழுத்தம் குறைக்க, கல்லீரல் அழற்ச்சி மாற, சிறுநீரக பாதை தொற்றுகள் சரியாக, காலைச்சோர்வு போக்க, இதய ஆரோக்கியம் காக்க சுரைக்காய் ஜூஸ்

உலகில் பிறந்த ஒவ்வொருவருக்குமே நீண்ட நாட்கள் ஆரோக்கியமாகவும், இளமைத் தோற்றத்துடனும் வாழ வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் அன்றாடம் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம். முந்தைய காலத்தில் நம் முன்னோர்கள் நீண்ட நாட்கள் உடல் வலிமையுடனும், நோய்த் தாக்குதலின்றியும் இருந்ததற்கு காரணம், அவர்களது உணவுப் பழக்கமும், இதர பழக்கவழக்கங்களும் தான்.

அக்காலத்தில் எல்லாம் ஜங்க் உணவுகள் இல்லை. ஆனால் இன்றோ ஜங்க் உணவுகள் தான் எங்கு பார்த்தாலும் உள்ளது. இந்த உணவுகளில் சேர்க்கப்படும் செயற்கை சுவையூட்டிகள் பலரை இந்த உணவுகளுக்கு அடிமையாக்கி, பல நோய் தாக்குதலுக்கு உடலை தயார் செய்கிறது. நீங்கள் ஆரோக்கியமாக இருக்க நினைத்தால், ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பதோடு, அவ்வப்போது நம் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும் பானங்களையும் பருக வேண்டும்.

அதற்கு சமைப்பதற்கு பயன்படுத்தும் காய்கறிகளே போதும். அதுவும் கோடைக்காலத்தில் காலடி எடுத்து வைக்கப் போகிறோம். இந்த காலத்தில் உடலை வறட்சி அடையச் செய்யாமல், நீர்ச்சத்துடன், உடல் வெப்பத்தைத் தணிக்கும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். அப்படி நீர்ச்சத்து நிறைந்த ஓர் காய்கறி தான் சுரைக்காய். இந்த சுரைக்காயை சிலர் ஜூஸ் தயாரித்துக் குடிப்பார்கள் என்பது தெரியுமா?

ஜூஸ் தயாரிக்கும் முறை:

* முதலில் சுரைக்காயின் தோலை நீக்கி விட வேண்டும். பின் அதனை துண்டுகளாக்கி, ஒரு கப் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதை மிக்ஸியில் போட்டு, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதை ஒரு டம்ளரில் ஊற்றி, அத்துடன் 1 டீஸ்பூன் இஞ்சி பேஸ்ட் அல்லது இஞ்சி பவுடர் அல்லது இஞ்சி சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* இந்த பானத்தை தினமும் காலை உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும்.